மாஸ்டர் பிளான் விஜயகாந்த்: திமுகவை கழட்டி விட்ட பின்னணி!

Share this :
No comments

வருகிற சட்டசபை தேர்தலில் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக தனித்து போட்டியிடும் என அறிவித்தார். திமுக அல்லது பாஜக உடன் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்து. அதிலும் திமுக பக்கம் நிச்சயம் தேமுதிக செல்லும் என அனைத்து தரப்பட்ட மக்களும் எதிர்பார்த்தனர். அனைவரது எதிர்பார்ப்பையும் தவிடுபொடியாக்கினார் விஜயகாந்த். ஏன் இந்த முடிவை விஜயகாந்த் எடுத்தார், இவருக்கு என்ன ஆச்சு என்ற குழப்பத்தில் அவரது கட்சியினரே இருந்தனர். பலரும் பல யூகங்களை கூறிவந்தனர். இந்நிலையில் விஜயகாந்த் திமுகவை கழட்டிவிட்டு, தனித்து போட்டியிட்டதுக்கு காரணம், விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதாவின் மாஸ்டர் பிளான் என்கிறார்கள். தமிழகத்தில் அதிமுக, திமுக என்ற இரு கட்சிகளுக்கும் மாற்று கட்சியாக தேமுதிக வரவேண்டும் என விரும்புகிறார் அவர். திமுக ஒருபக்கம் கூட்டனிக்கு அழைக்கிறது, பாஜக ஒருபக்கம் கூட்டணிக்கு இழுக்கிறது. இந்நிலையில் நாம் ஏன் தனியாக நின்று நம்முடைய தலைமையில் சில கட்சிகளை சேர்த்து தேர்தலை சந்திக்க கூடாது என நினைக்கிறது தேமுதிக தலைமை. தற்போது உள்ள சூழ்நிலையில் திமுக உடன் சென்றால் வெற்றி கிடைக்கும் ஆனால் தங்கள் கட்சியின் எதிர்காலத்தை அது பாதிக்கும் என்கிறார்கள். மாற்றம் எதிர்பார்க்கும் மக்களுக்கு மாற்று கட்சியாக இருக்கவே பார்க்கிறார் விஜயகாந்த். கடந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து திமுகவை வீழ்த்தினார். இந்த தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அவைத்து அதிமுகவை வீழ்த்தினால், ஒவ்வொரு தேர்தலிலும் மாறிமாறி கூட்டணி தான் வைக்கனும். கடைசி வரை நாம் சுயமாக நின்று ஆட்சியை பிடித்து தனது கனவு பதவியை அடைய முடியாது என தேமுதிக தலைவர் நினைக்கிறார். இந்த தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிட்டு தோல்வியை சந்தித்தாலும், மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கை பெறலாம். இரு கட்சிகளுடன் கூட்டணி வைத்தவர் என்ற பெயரை தவிர்க்கலாம். எதிர்காலத்தில் வரும் தேர்தல்களுக்கு இந்த தனித்து போட்டி கை கொடுக்கும் என நம்புகிறார் விஜயகாந்த். இதன் மூலம் தமிழக கட்சிகளில் மூன்றாம் இடத்தில் இருக்கும் தேமுதிகவை இரண்டாம் இடத்துக்கு கொண்டு சென்றுவிடலாம், அதாவது அதிமுகவுக்கு மாற்று கட்சி திமுக இல்லை தேமுதிக தான் என்ற நிலைப்பாட்டை உருவாக்கும் மாஸ்டர் பிளான். இந்த மாஸ்டர் பிளானில் பிரேமலதாவின் பங்கு முக்கியமாக உள்ளதாக பேசப்படுகிறது.

No comments :

Post a Comment