இயற்கையான முறையில் எலி, பல்லி, ஈ, கொசுக்கள், கரப்பான் பூச்சி, மூட்டைப்பூச்சி வராமல் தடுக்கலாம்

தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார் சமந்தா. நான் சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவள், என்னைப்போல் அனைவரும் கடுமையாக உழைத்து முன்னேற முடியும் என்று அடிக்கடி தன்னம்பிக்கை வகுப்பெடுப்பவர், ஹைதராபாத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அதன் தமிழ் வடிவம் இங்கே. தொடர்ச்சியாக இரு மொழிகளில் நடிக்கிறீர்களே...? ஆமாம். இப்போது அரை டஜன் படங்கள் என்கைவசம் உள்ளன. தமிழில் இரு படங்களிலும், தெலுங்கில் இரு படங்களிலும் ஒரே நேரத்தில் நடித்து வருகிறேன். எப்போதும் படப்பிடிப்புகளிலேயே இருக்க வேண்டி உள்ளது. வீட்டுக்கு செல்ல முடியவில்லை. தொடர்ச்சியாக நடிப்பது கஷ்டமாக இல்லையா...? அவ்வப்போது ஃபேமிலி ஞாபகம் வரும். அப்போது கஷ்டமாக இருக்கும். வீட்டிலுள்ளவர்களை பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கும். முடியாத போது கவலைப்படுவேன். ஹோம்சிக்கிற்கு ஏதாவது வழி வைத்திருக்கிறீர்களா? குடும்பத்தைப் பற்றிய நினைவு வந்தால் உடனே குலாப்ஜாமுன் சாப்பிடுவேன். உடனே வீட்டு கவலைகள் பறந்து போய்விடும். குலோப்ஜாமுன் சாப்பிட்டால் எப்படி வீட்டு ஞாபகம் இல்லாமல் போகிறது என்று என்னிடம் கேட்டால் அதற்கு என்னிடம் பதிலில்லை. இந்த கோடை உங்களுக்கு எப்படியிருக்கப் போகிறது? தமிழில் விஜய்யுடன் நடித்த தெறியும், சூர்யாவுடன் நடித்த 24 படமும் கோடையில் வெளிவர உள்ளன. அதேபோல் இரண்டு தெலுங்குப் படங்களும் வெளியாகின்றன. இந்த கோடை எனக்கு மிக முக்கியமானது. இந்தப் படங்களில் உங்க கதாபாத்திரங்கள்...? எல்லாமே வித்தியாசமானவை. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை. இப்படி நல்ல கதாபாத்திரங்கள் அமைந்தது என்னுடைய அதிர்ஷ்டம். தனுஷுடன் வடசென்னை படத்தில் நடிக்கவிருப்பதாக ஒரு தகவல் உள்ளதே? ஆமாம், வடசென்னையில் நான் நடிக்கிறேன். இந்த வருடம் அதிக படங்களில் நடிப்பதால் இது என்னுடைய பெஸ்ட் இயராக அமையும். தொடர்ச்சியாக நடிப்பது சலிக்கவில்லையா? இல்லை. என்னுடைய ஆசையே, தொடர்ச்சியாக ஓய்வே இல்லாமல் நடிக்க வேண்டும் என்பதுதான்.
Labels:
cinema news
,
other
No comments :
Post a Comment