ஹைட்ரஜன் குண்டு வீசி சாம்பலாக்கி விடுவோம் : அமெரிக்காவை மிரட்டிய வட கொரியா

எங்களிடம் இருக்கும் ஹைட்ரஜன் குண்டுவை வீசினால் உங்கள் நியுயார்க் நகரமே சாம்பலாகி விடும் என்று வடகொரியா அமெரிக்காவை எச்சரித்துள்ளது. சமீப காலமாக வட கொரியா, உலக நாடுகளின் எதிர்ப்புகள் மற்றும் ஐநாவின் எச்சரிக்கையும் மீறி செயல்பட்டு வருகிறது. அந்த நாடு தொடர்ந்து அணு ஆயுத சோதனையை நடத்தி வருகிறது. இதனால் வடகொரியா மீதி பொருளாதார தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் அந்த நாடு மற்ற நாடுகளை அச்சுறுத்தும் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இதனால், வட கொரியாவின் எதிரி நாடாக கருதப்படும், தென் கொரியவின் எல்லைப்பகுதியில் அமெரிக்கா தன்னுடைய படையை நிறுத்தியுள்ளது. மேலும் அமெரிக்க கூட்டுப் படையினர், தென்கொரிய வீரர்களோடு சேர்ந்து போர் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கொரிய தீபகற்பத்தில் பெரும் பதற்றம் உருவாகியிருக்கிறது. இந்த பதட்டத்தை மேலும் அதிகரிக்கும் வகையில், வடகொரியா அமெரிக்காவிற்கு எதிராக பகிரங்க மிரட்டல் ஒன்றை விடுத்துள்ளது. “வட கொரியா தயாரித்துள்ள ஹைட்ரஜன் வெடிகுண்டு ரஷ்யா தயாரித்துள்ள வெடிகுண்டை விட சக்தி வாய்ந்தது. கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்குதல் நடத்தும் ஏவுகணையில், அந்த வெடிகுண்டை பொருத்தி, நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் நகரில் விழச்செய்தால், சில நொடிகளில் அந்த நகரமே சாம்பல் ஆகிவிடும்” என்று வடகொரியா எச்சரித்துள்ளது. வடகொரியாவின் இந்த மிரட்டலுக்கு பல்வேறு நாடுகளும் தங்களின் அதிருப்தி மற்றும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றன.
Labels:
News
,
other
No comments :
Post a Comment