மாலை வேளையில் மேகமூட்டமாக இருக்கும் போது மொறுமொறுவென்றும், சூடாகவும் ஏதேனும் சாப்பிடத் தோன்றும். அப்போது உங்கள் வீட்டில் பன்னீர் இருந்தால், அதனைக் கொண்டு அற்புதமான ஓர் ஸ்நாக்ஸ் செய்து சுவையுங்கள்.

அது வேறொன்றும் இல்லை பன்னீர் ஃபிங்கர்ஸ். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வண்ணம் இருக்கும். சரி, இப்போது அந்த பன்னீர் ஃபிங்கர்ஸை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

பன்னீர் - 1 பாக்கெட் (நீள துண்டுகளாக்கிக் கொள்ளவும்)

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்

மைதா - 2 டேபிள் ஸ்பூன்

மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்

பிரட் தூள் - 1 கப்

எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை: முதலில் ஒரு பௌலில் பன்னீர் துண்டுகளை சேர்த்து, மிளகாய் தூள், உப்பு சேர்த்து பிரட்டி, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பின் மற்றொரு பௌலில் சோள மாவு, மைதா, உப்பு, மிளகுத் தூள், மற்றும் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பன்னீர் துண்டுகளை மைதா கலவையில் பிரட்டி, பின் பிரட் தூளில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், மொறுமொறுப்பான பன்னீர் ஃபிங்கர்ஸ் ரெடி!!!


மொறுமொறுப்பான பன்னீர் ஃபிங்கர்ஸ்


பித்தம், வாய் கசப்பு போன்றவற்றை நீக்கும் கொத்தமல்லி துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானப்பொருட்கள்:

கொத்தமல்லித் தழை – ஒரு கட்டு

பச்சை மிளகாய் – 2

புளி – ஒரு பட்டாணி அளவு

உப்பு - 1/2 டீஸ்பூன்

செய்முறை :

* கொத்தமல்லித் தழையை நன்றாகக் கழுவி விட்டு, அத்துடன் பச்சை மிளகாய், உப்பு, புளி சேர்த்து நன்றாக அரைத்தெடுக்கவும். தண்ணீர் சேர்க்க தேவையில்லை. கொத்துமல்லித்தண்டோடு சேர்த்து அரைக்கவும்.

* அரைத்த துவையலை இட்லி, தோசைக்கு தொட்டு கொள்ள சுவையாக இருக்கும்.

* புளிக்குப் பதிலாக எலுமிச்சம் பழச்சாற்றை சேர்க்கலாம். பித்தம், வாய் கசப்பு போன்றவற்றை நீக்க வல்லது.

கொத்தமல்லி துவையல் செய்வது எப்படி



VEGGI MASALA 65 PARTY SNACK


கொண்டைக் கடலை புரதச் சத்து நிறைந்தது. இதனை வேகவைத்து சுண்டல் செய்து சாப்பிடலாம். இதில் குழம்பு வைக்கலாம். கெட்டியாக மசாலா செய்து சாப்பிடலாம் சத்தான, சுவையான உணவு இது. அனைவரும் எளிதாக செய்ய முடியும்.

தேவையான பொருட்கள்

சன்னா - ஒரு கப்

உருளைக்கிழங்கு - 2

தயிர் - கால் கப்

மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்

சீரகத்தூள் – 1 டீ ஸ்பூன்

மிளகாய் தூள் – 2 டீ ஸ்பூன்

கரம் மசாலா – 1 டீ ஸ்பூன்

தனியாதூள் - 2 டேபிள் ஸ்பூன்

ஏலக்காய் - 2 கிராம்பு - 3

இஞ்சி பூண்டு விழுது – 2 டீ ஸ்பூன்

உப்பு தேவையான அளவு

தனியாக அரைக்க:

வெங்காயம் - 2

தக்காளி – 3

பச்சை மிளகாய் – 2

சன்னா மசாலா செய்முறை சன்னாவை நன்றாக ஊற வைத்து வேக வைத்து தனியாக வைக்கவும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து மசித்துக் கொள்ளவும்.

அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும். பின்னர் அரைத்த வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் விழுதினை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.

இதோடு இஞ்சிப் பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இதோடு மிளகாய்த்தூள், மல்லித்தூள், உள்ளிட்ட அனைதூள்களையும் போட்டு அதோடு உப்பு சேர்த்து வாசனை போக நன்றாக வதக்க வேண்டும்.

பின்னர் இந்த கலவையில் தயிரை ஊற்றி கிளறவும். அடுத்து உருளைக்கிழங்கு, மற்றும் சன்னாவை 5 நிமிட கால இடையெளியில் ஒவ்வொன்றாக சேர்த்து மிதமான தீயில் மசாலா சேரும் வரை அடுப்பில் வைக்கவும்.

சுவையான சன்னா மசாலா தயார். சப்பாத்தி, பூரிக்கு தொட்டுக்கொள்ள சுவையானது. இது குழந்தைகளுக்கும் ஏற்ற சத்தான உணவு.


Channa Masala Gravy Recipe in Tamil


தேவையான பொருட்கள் :

பச்சரிசி - 1கப்

புழுங்கல் அரிசி - 1/2 கப்

உளுந்து - கால் கப்

நறுக்கிய தக்காளி - 1/4 கிலோ

காய்ந்த மிளகாய் - 6

வெங்காயம் - 1

உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை :

* இரண்டு அரிசியையும், உளுந்தையும் 1 மணி நேரம் ஊறவைத்து அரைத்துக் கொள்ளவும்.

* ஒரு கடாயில் என்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி, காய்ந்த மிளகாய் போட்டு வதக்கி ஆற வைக்கவும்.

* ஆறியவுடன் மிக்சியில் அரைத்து மாவுடன் கலந்துக் கொள்ளவும்.

* தேவையான உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.

* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும மாவை மெல்லிய தோசைகளாக வார்க்கவும்.

* சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.

* சுவையான தக்காளி தோசை ரெடி.

* இதற்கு கார சட்னி தொட்டுக் கொள்ள அருமையாக இருக்கும்.

குறிப்பு :

* தோசை மாவு இருந்தால் அதையும் பயன்படுத்தி இவ்வாறு செய்யலாம்.

சுவையான தக்காளி தோசை


உங்களுக்கு கருவாடு ரொம்ப பிடிக்குமா? அதிலும் கருவாட்டை குழம்பு செய்து சாப்பிட பிடிக்குமா? அப்படியெனில் நம்ம செட்டிநாடு ஸ்டைல் நெத்திலி கருவாட்டு குழம்பை செய்து சுவைத்துப் பாருங்கள்.

இது செய்வது மிகவும் சுலபம் மற்றும் வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையாகவும், நல்ல மணத்துடனும் இருக்கும்.

சரி, இப்போது அந்த செட்டிநாடு ஸ்டைல் நெத்திலி கருவாட்டு குழம்பின் எளிய செய்முறையைக் காண்போம். அதைப் படித்து முயற்சித்து, சுவை எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

நெத்திலி கருவாடு - 40-50

கடுகு - 1 டீஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

வரமிளகாய் - 2 க

றிவேப்பிலை - சிறிது சின்ன

வெங்காயம் - 15-20 (தோலுரித்தது)

தக்காளி - 2 (நறுக்கியது)

மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்

மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

புளிச்சாறு - 3 டேபிள் ஸ்பூன்

மாங்காய் - 1 (நீளமாக நறுக்கியது)

உப்பு - தேவையான அளவு

சர்க்கரை - 1 டீஸ்பூன்

எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்

தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை: முதலில் நெத்திலி கருவாடை சுடுநீரில் போட்டு 15 நிமிடம் ஊற வைத்து, பின் வடிகட்டி அதன் தலையை நீக்கிவிட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலி அல்லது மண் சட்டியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பின்பு அதில் வெங்காயம், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கி, தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

பிறகு அதில் மாங்காய் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மாங்காய் பாதியாக வெந்ததும், உப்பு, மசாலா பொடிகள் அனைத்தையும் சேர்த்து கிளறி, புளிச்சாற்றினை ஊற்றி, எண்ணெய் தனியாக பிரியும் வரை குழம்பை நன்கு கொதிக்க விட வேண்டும்.

பின் கருவாட்டை சேர்த்து 5-10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க வைத்து, சர்க்கரை சேர்த்து கிளறி இறக்கினால், செட்டிநாடு நெத்திலி கருவாட்டு குழம்பு ரெடி!!!


செட்டிநாடு நெத்திலி கருவாட்டு குழம்பு


தேவையான பொருட்கள் :

பெரிய நெல்லிக்காய் - 6,

தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,

காய்ந்த மிளகாய் - 4,

உப்பு - தேவையான அளவு.

தாளிக்க:

கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன்,

கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு,

பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,

எண்ணெய் - சிறிதளவு.

செய்முறை:

* பெரிய நெல்லிக்காயை கொட்டை நீக்கி, சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும்.

* இதனுடன் தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து மிக்சியில் நன்றாக அரைக்கவும்.

* தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணெயில் தாளித்து துவையலில் சேர்த்துப் பயன்படுத்தவும்.

* உடலுக்கும் மிகவும் நல்லது இந்த நெல்லிக்காய் சட்னி.

சத்தான நெல்லிக்காய் சட்னி செய்வது எப்படி


இரவில் உங்கள் வீட்டில் எப்போதும் சப்பாத்தியா? அதற்கு சைடு டிஷ் என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியெனில் இன்று மீல் மேக்கர் கொண்டு கிரேவி செய்து சுவையுங்கள்.

இது வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். சரி, இப்போது அந்த மீல் மேக்கர் கிரேவியை எப்படி எளிய முறையில் செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

மீல் மேக்கர் - 1/2 கப்

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்

பெரிய வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது)

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

மல்லித் தூள் - 1 டீஸ்பூன்

கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்

தண்ணீர் - தேவையான அளவு

பால் - 1 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

அரைப்பதற்கு...

தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்

மிளகு - 1/2 டீஸ்பூன்

சோம்பு - 1 டீஸ்பூன்

வெங்காயம் - 1 (சிறியது)

தக்காளி - 2 (சிறியது)

தாளிப்பதற்கு...

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

சீரகம் - 1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

செய்முறை: முதலில் தண்ணீர் மற்றும் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்கும் வரை சூடேற்ற வேண்டும். பின் அதில் மீல் மேக்கரைப் போட்டு சில நிமிடங்கள் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் மீல் மேக்கரை எடுத்து, குளிர்ந்த நீரில் 2 முறை அலசி, தனியாக வைத்துக் கொள்ளவும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்தமும், வெங்காயம், தக்காளி சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கி இறக்கி, மிக்ஸியில் போட்டு, அத்துடன் அரைப்பதற்கு கொடுத்துள்ள எஞ்சிய பொருட்களையும் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கி, பின் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி சில நிமிடங்கள் வதக்க வேண்டும்.

பின் அதில் மீல் மேக்கரை சேர்த்து, 1/2 கப் - 3/4 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி மிதமான தீயில் 1 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரைத் திறந்து, கிரேவியை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொத்தமல்லியைத் தூவினால், மீல் மேக்கர் கிரேவி ரெடி!!!


மீல் மேக்கர் கிரேவி


தேவையான பொருட்கள் :

கேரட் - 1

பப்பாளி பழம் - 1

இஞ்சி - ஒரு சிறிய துண்டு

பால் - ஒரு கப்

தண்ணீர் - 2 கப்

தேன் - சுவைக்கு

ஐஸ் கட்டி - 5 (தேவைக்கு)

செய்முறை:

* கேரட், இஞ்சியை கழுவி தோல் நீக்கி பொடியாக நறுக்கி மிக்ஸியில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டவும்.

* பப்பாளி பழத்தை தோல் நீக்கி துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

* பப்பாளி பழத்துண்டுகளுடன் கேரட் ஜூஸ், தேன் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைக்கவும்.

* பருகுவதற்கு முன் காய்ச்சி ஆற வைத்த பால், ஐஸ்கட்டி கலந்து பருகவும்.

* பால், ஐஸ்கட்டி விரும்பாதவர்கள் அதை சேர்க்காமலும் பருகலாம்.

* சுவையான கேரட் - பப்பாளி ஜூஸ் தயார்.

குறிப்பு:

பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.
ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள்.

கேரட்டில் வைட்டமின் ‘ஏ’ சத்தினை மலிவாகப் பெறலாம். வாழ்நாள் இறுதிவரை கண்களுக்கு கண்ணாடி அணியாமல் தவிர்க்க கேரட் நிறைய சாப்பிடவும்.

கேரட் - பப்பாளி ஜூஸ் செய்வது எப்படி

தேவையானவை: 

துருவிய கேரட் – அரை கப், 

நறுக்கிய கோஸ் – அரை கப், 

பொடியாக நறுக்கிய குடமிளாகாய், 

பீன்ஸ் – தலா கால் கப், 

நறுக்கிய வெங்காயம் – 2, 

சோள மாவு – அரை கப், 

மைதா மாவு – அரை கப், 

அஜினமோட்டோ – அரை டீஸ்பூன், 

வெங்காயத்தாள் – அலங்கரிக்க,

 பூண்டு – 3 பல், 

பச்சைமிளகாய் – 3, 

எண்ணெய் – பொரிக்க, 

உப்பு – தேவையான அளவு.  

செய்முறை: பூண்டு, பச்சை மிளகாயை நசுக்கிக் கொள்ளுங்கள். 

இதனுடன், நறுக்கிய காய்கறிகள், அஜினமோட்டோ, சோயா சாஸ், சோள மாவு, மைதா மாவு, உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளுங்கள். 

எண்ணெய் காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொரித்து எடுங்கள். 

வெங்காயத்தாளால் அலங்கரித்து பரிமாறுங்கள்.

வெஜிடபிள் மஞ்சூரியன் பால்ஸ்

Master Kitchen Episode-2 Vendhar TV


நீங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யும் போது, எஞ்சிய சப்பாத்தியை தூக்கி எறியாமல், அதனைக் கொண்டு சில்லி சப்பாத்தி, சப்பாத்தி லட்டு போன்ற வித்தியாசமான ரெசிபிக்களை செய்து சுவைக்கலாம். 

இங்கு அதில் ஒன்றாக சப்பாத்தி லட்டு எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வண்ணம் இருக்கும். 

சரி, இப்போது அந்த சப்பாத்தி லட்டுவின் எளிய செய்முறையைப் பார்ப்போமா!!!  

தேவையான பொருட்கள்:  

சப்பாத்தி - 3 

வெல்லம் - 1/4 கப் 

நெய் - 2 டேபிள் ஸ்பூன் 

ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன் 

பாதாம் - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)  

செய்முறை: முதலில் சப்பாத்தியை தோசைக்கல்லில் போன்று மொறுமொறுவென்று டோஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின்னர் அதனை சிறு துண்டுகளாக உடைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும். 

பின்பு அத்துடன் வெல்லம் சேர்த்து மீண்டும் நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். 

பிறகு அதனை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் ஏலக்காய் பொடி, நெய், நட்ஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். 

பின் ஒரு கையளவு எடுத்து லட்டு போன்று உருண்டைகளாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். இப்படி அனைத்தையும் செய்தால், சப்பாத்தி லட்டு ரெடி!!!

சப்பாத்தி லட்டு


Master Kitchen Episode-1 Vendhar TV



தேவையானவை: சோற்றுக் கற்றாழை - கால் கிலோ, முந்திரி, பாதாம் பருப்பு - தலா 100 கிராம், சுக்கு - 20 கிராம், ஏலக்காய் - 25 கிராம், நாட்டு வெல்லம் - அரை கிலோ, நெய், தேன் - தலா 2 டீஸ்பூன்.

செய்முறை: தோல் நீக்கிய சோற்றுக் கற்றாழையை அரிசி கழுவியத் தண்ணீரில் சுத்தம் செய்துகொள்ள வேண்டும். ஒரு லிட்டர் தண்ணீரில் கற்றாழையைப் போட்டு வேகவைக்கவும். முந்திரி, பாதாம் பருப்பு, சுக்கு, ஏலக்காயை வெறும் வாணலியில் சிவக்க வறுத்துத் தூள் செய்து, கற்றாழையுடன் சேர்க்கவும். கற்றாழை நன்றாக வெந்ததும் வெல்லத்தை நன்றாகப் பொடித்து, அதில் சேர்க்கவும். அடிப்பிடிக்காமல் கிளறிக்கொண்டே இருக்கவும். அல்வா பதம் வந்ததும் நெய், தேனை ஊற்றி நன்றாகக் கிளறி கீழே இறக்கவும்.

மருத்துவப் பயன்: வெள்ளைப்படுதல், கருப்பைப் புண், பால்வினை நோய்களைக் குணப்படுத்தும். எலும்புருக்கி நோய்க்கு மிகச் சிறந்த மருந்து. உடல் உஷ்ணத்தைக் குறைத்து குளிர்ச்சியை உண்டாக்கும். பார்வைக் கோளாறுகளைச் சரிசெய்யும். குடல் கிருமிகளை அகற்றும். மெலிந்த தேகம் கொண்டவர்களுக்கு வலிமை தரும்

உடல் உஷ்ணத்தைக் குறைத்து குளிர்ச்சியை உண்டாக்கும் கற்றாழை அல்வா !

தேவையான பொருட்கள்:

கோஸ் – ஒரு கப் (நறுக்கியது)

பச்சை மிளகாய் – இரண்டு (நறுக்கியது)

உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன்

புலி – கால் எலுமிச்சை பழம் அளவு

உப்பு – தேவைகேற்ப

இஞ்சி – ஒரு சிறு துண்டு

எண்ணெய் – இரண்டு டீஸ்பூன்

தாளிக்க:

எண்ணெய் – ஒரு டீஸ்பூன்

கடுகு – கால் டீஸ்பூன்

உடைத்த உளுத்தம் பருப்பு – கால் டீஸ்பூன்

கறிவேப்பில்லை – சிறிதளவு

செய்முறை:

கடாயில் எண்ணெய் இரண்டு டீஸ்பூன் ஊற்றி காய்ந்ததும் உளுத்தம் பருப்பு, கோஸ் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி எடுத்து கொள்ளவும்.

வறுத்த உளுத்தம் பருப்பு, பச்சை மிளகாய், கோஸ் அதனுடன் புலி, உப்பு, இஞ்சி ஆகியவற்றை சேர்த்து சட்னி பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உடைத்த உளுத்தம் பருப்பு, கறிவேப்பில்லை போட்டு தாளித்து அதில் கொட்டி பரிமாறவும்.

கோஸ் பச்சை மிளகாய் சட்னி


இட்லி -8

பெரிய வெங்காயம்-2

தக்காளி -2

பச்சை மிளகாய் -2

குடை மிளகாய் -1

பன்னீர் -100 கிராம் (சிறுதுண்டுகளாக)

எண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

மிளகாய் தூள் -1/2 ஸ்பூன்

சாம்பார் தூள்- 2 ஸ்பூன்

Step 1

முதலில் இட்லியை சிறிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும். பின்பு வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாய்,குடை மிளகாய் எல்லாவற்றையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

Step 2

பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம்,பச்சை மிளகாய்,குடை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும்.

வதக்கிய பின்பு அதில் தக்காளியை போட்டு வதக்கவும்.வதக்கிய பின்பு அதில் மிளகாய் தூள்,சாம்பார் தூள்,பன்னீர்,உப்பு போட்டு வதக்கவும்.

பின்பு அதில் வெட்டி வைத்த இட்லி துண்டுகளை அதில் போட்டு அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கிளறி விட்டு சிறிது நேரம் கழித்து இறக்கவும்.எதோ சுவையான பனீர் ப்ரைடு இட்லி ரெடி.

பன்னீர் ப்ரைடு இட்லி


இறால் பலருக்கும் பிடித்த ஓர் கடல் உணவு. இந்த இறாலை பலவாறு சமைத்து சாப்பிடலாம். அதிலும் இறாலை சில்லி 65 செய்து சுவைத்தால் இன்னும் அற்புதமாக இருக்கும். உங்களுக்கு இறால் சில்லி 65 எப்படி செய்வதென்று தெரியாதா? அப்படியெனில் தொடர்ந்து படித்துப் பாருங்கள்.

ஏனெனில் இங்கு இறால் சில்லி 65 எப்படி எளிய செய்முறையில் செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

இறால் - 20

உப்பு - தேவையான அளவு

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

ஊற வைப்பதற்கு...

மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்

கரம் மசாலா - 2 டீஸ்பூன்

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்

எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்

சோள மாவு - 1/4 கப்

கொத்தமல்லி - சிறிது

கறிவேப்பிலை - சிறிது

உப்பு - தேவையான அளவு

தண்ணீர் - சிறிது

செய்முறை: முதலில் இறாலை நன்கு சுத்தமாக கழுவி, ஒரு பாத்திரத்தில் போட்டு, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியில் இறாலை சேர்த்து 2-3 நிமிடம் பச்சை வாசனைப் போக பாதியாக வேக வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும். பின் அதனை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பிரட்டி 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். எண்ணெய் சூடானதும், இறால் துண்டுகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், இறால் சில்லி 65 ரெடி!!!



இறால் சில்லி 65


Namma Vittu Chef - Dhai Kachodi & Potato Stuffed Idly


Studio Kitchen - Capsicum Pastarino, Mulit-Color Pasta & Pasiparuppu Inipu Kootu


இறால் பலருக்கும் பிடித்த ஓர் கடல் உணவு. இந்த இறாலை பலவாறு சமைத்து சாப்பிடலாம். அதிலும் இறாலை சில்லி 65 செய்து சுவைத்தால் இன்னும் அற்புதமாக இருக்கும். உங்களுக்கு இறால் சில்லி 65 எப்படி செய்வதென்று தெரியாதா? அப்படியெனில் தொடர்ந்து படித்துப் பாருங்கள். ஏனெனில் இங்கு இறால் சில்லி 65 எப்படி எளிய செய்முறையில் செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: இறால் - 20 உப்பு - தேவையான அளவு மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு ஊற வைப்பதற்கு... மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் கரம் மசாலா - 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன் சோள மாவு - 1/4 கப் கொத்தமல்லி - சிறிது கறிவேப்பிலை - சிறிது உப்பு - தேவையான அளவு தண்ணீர் - சிறிது செய்முறை: முதலில் இறாலை நன்கு சுத்தமாக கழுவி, ஒரு பாத்திரத்தில் போட்டு, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியில் இறாலை சேர்த்து 2-3 நிமிடம் பச்சை வாசனைப் போக பாதியாக வேக வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும். பின் அதனை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பிரட்டி 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். எண்ணெய் சூடானதும், இறால் துண்டுகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், இறால் சில்லி 65 ரெடி!!!

இறால் சில்லி 65