பிறந்தநாள் வாழ்த்துகள் பாப்பு குட்டி இப்படிக்கு Selfish பொண்ணு - ப்ரியா நெகிழ்ச்சி

Share this :
No comments


சின்னத்திரை ரசிகர்கள் பலருக்கும் பரிட்சையமானவர் ப்ரியா.
கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் ரசிகர்களை கவர்ந்த ப்ரியாவுக்கு சமூகவலைதளங்களிலும் ரசிகர்கள் அதிகம்.
நேற்று இவர் தனது பேஸ்புக்கில் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.May 14 - இன்னிக்கு என்னுடைய அம்மாவுடைய பிறந்தநாள். எனக்கு ஷூட்டிங். காலைலயே ஒரு happy birthday சொல்லிட்டு கிளம்பிட்டேன். அண்ணன கோவிலுக்கு கூட்டிட்டு போக சொல்லி இருக்கேன்னு சொன்னாங்க. அப்போ தான் நான் அம்மாக்கு எதுவுமே ஸ்பெஷலா வாங்கல பண்ணல யோசிக்கலங்கறது புரிஞ்சுது.அவங்களுக்கு அந்த எதிர்பார்ப்பு, பொண்ணு நமக்குனு ஒன்னும் பண்ணலியேங்கற ஏமாற்றம் எதுவும் இருந்த மாதிரியே தெரில. சரி ராத்திரி அம்மாக்கு எதேனும் கிஃப்ட் வாங்கிட்டு வந்துடலாம்னு நாள் பூரா யோசிச்சும் அவங்களுக்கு என்ன வேணும் என்ன புடிக்கும்னு டிசைட் பண்ண முடில. புடவை? நகை? வாட்ச்? ஹேண்ட்பேக்? சத்தியமா இதெல்லாம் அவ்ளோ காசு போட்டு வாங்கிட்டு போனா அவங்க ரியாக்ஷன் எப்டி இருக்கும்னு முந்தைய பிறந்தநாட்கள்ல பாத்திருக்கேன்.ப்ரெண்ட்ஸ் birthday, சும்மா get together, 1st day சினிமா, vacation, சும்மா வீட்ல படுத்து தூங்க... இப்டி ஊர்ல இருக்கற சுபகாரியத்துக்கு எல்லாம் shooting leave போடற எனக்கு, அம்மா birthdayக்கு லீவ் சொல்லனும்னு ஏன் தோனாம போச்சு. ரெண்டு மூனு வருஷமா அவங்க என்கிட்ட அதிகம் கேட்ட கேள்விகள், எத்தனை மணிக்கு வீட்டுக்கு வருவ? இன்னிக்கு லீவ் தானே வீட்ல இருக்கலாம்ல? வீட்ல சாப்டுவன்னா சிக்கன் இல்லன்னா ஃபிஷ் செய்யவா? இன்னிக்கு ஒரு நாள் லீவ் சொல்லிட்டு அவங்க கூட இருந்திருக்கலாமோனு ராத்திரி 9 மணிக்கு வீட்டுக்கு வரும்போது தோனுச்சு.வீட்டுக்குள்ள வரும்போது அவங்க birthdayக்கு அவங்களே செஞ்ச கேசரி சாப்டுன்னு சிரிச்சிட்டே கொடுத்தாங்க.
நானும் அம்மாவும் சண்டை போடும்போதெல்லாம் என் அப்பா என்கிட்ட சொல்லுவாங்க.. Mummy is a nice girl da.. Mummy is an innocent girl da.. அவருகூட சண்டை போடாதன்னு.. So yeaaaa a very happy birthday to our nice innocent girl. பிறந்தநாள் வாழ்த்துகள் பாப்பு குட்டி.
இப்படிக்குஇதுவரைக்கும் உனக்காக எதுவுமே செய்யாத Selfish பொண்ணு

No comments :

Post a Comment