சர்க்கரை வியாதி, ஆஸ்துமா, கொழுப்பைக் கட்டுப்படுத்தும் ஒரே சூப்பர் உணவு எது தெரியுமா?

Share this :
No comments

வெண்டைக்காயை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. அதனை பச்சையாக விருப்பப்பட்டு சாப்பிடுபவர்கள் உண்டு.அதுவும் காய்கள் என்றாலே தூர ஓடும் குழந்தைகள்,வெண்டைக்காய் பொறியல் என்றால் விரும்பி சாப்பிடுவதை நாம் காண்கிறோம்.
ஆனால் அதில் கொழ கொழ வெனெ இருக்கும் பகுதி யாருக்கும் பிடிக்காது. அதனை சமைக்கும் போது அந்த கொழகொழப்பு போய்விடும்தான். ஆனால் அந்த கொழகொழப்பு உடலுக்கு நிறைய நல்ல பலன்களைத் தரும் என்பது உங்களுக்குத் தெரியுமா? அதனைப் பற்றி தொடர்ந்து படியுங்கள். ஒரு கப் பச்சை வெண்டைக்காயில் எவ்வளவு சத்து எனத் தெரியுமா? கலோரி -30 நார்சத்து-3கிராம் ப்ரொட்டீன்-2 கிராம் கார்போஹைட்ரேட்-7.6 கொழுப்பு-0.6 க் விட்டமின் சி-21 மில்லி கிராம் மெக்னீசியம்-60 மி.கிராம்.

இந்த இத்துனூண்டு வெண்டைகாய் பெரிய பெரிய வியாதி எல்லாம் குணப்படுத்தும், கட்டுபடுத்தும் என்பது எவ்வளவு ஆச்சரியமான செய்தி. மருந்து மாத்திரைகளால் செய்ய முடியாததை இந்த பிஞ்சு வெண்டைக்காய் செய்து விடும். ஆஸ்த்மா, கொலெஸ்ட்ரால், கிட்னி பாதிப்பு, ஆகியவற்றை ஏற்படாமல் தடுக்கிறது.மேலும் நோய் எதிர்ப்புதிறனை அதிகரிக்கச் செய்கிறது. சிறு நீரக நோயிலிருந்து காப்பாற்றுகிறது: சர்க்கரை வியாதி இருப்பவர்களுக்கு கிட்னி பாதிக்கும் அபாயம் உண்டு. வெண்டைக்காயை தொடர்ந்து சாப்பிடும்போது சர்க்கரை வியாதி இருப்பவரகளுக்கு வரும் சிறு நீர கோளாறினை தடுக்க முடியும். கிட்னி தொடர்பாக வரும் எந்த வியாதியும் அண்டாது என்ற மகிழ்ச்சியான செய்தியை 2005 ஆம் ஆண்டு ஒரு மருத்துவ இதழ் வெளியிட்டுள்ளது. கர்ப்பகாலத்தில் கட்டாயம் சாப்பிட வேண்டும்: வெண்டைக்காயில் ஏ, பி1, பி2, ப்6 மற்றும் சி ஆகிய விட்டமின்களும் , நார்சத்தும் உள்ளன. இவை கர்ப்ப காலத்தில் சிசுவிற்கு வரும் பிறழ்தல் தொடர்பான நோய்களை தடுக்கும், சிசுவின் மூளை வளர்ச்சிக்கு உதவும்.
ஆஸ்துமா: தோரக்ஸ் என்னும் மருத்துவ இதழ் வெளியிட்ட சமீபத்திய ஆய்வில் வெண்டைக்காய் தொடர்ந்து சாப்பிடும் போது ஆஸ்துமா கட்டுப்படும் எனத் தெரிய வந்துள்ளது. காரணம் வெண்டைக்காயில் விட்டமின் சி அதிகம் இருப்பதால் அவை எதிர்ப்பு செல்களை அதிகரித்து , ஆஸ்துமாவை விரட்டுகிறது.
கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுபடுத்தும்: ஹார்வார்ட் ஹெல்த் ஜர்னல் கூறியதன்படி, வெண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ளும்போது, அதில் உள்ள நார்சத்து எளிதில் ஜீரணமாகி சிறுகுடலுக்கு செல்கிறது. மேலும் உடலில் படிந்துள்ள கொழுப்புசெல்களுடன் இணைந்து அவற்றை கழிவுகளாக வெளியேற்றுகிறது . கொலஸ்ட்ரால் குறைய வெண்டைக்காய் சாப்பிடும் முறை : பிஞ்சு வெண்டைக்காய் மூன்று எடுத்து நீள்வாக்கில் வெட்டிக் கொள்ளுங்கள். அதனை ஒரு பாத்திரத்தில் நீரினுள் போட்டு வையுங்கள். மறு நாள் வெண்டைக்காயை எடுத்து விட்டு கொழகொழப்புடன் கூடிய அந்த நீரினை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இது இதயத்தில் கொழுப்பு படிந்திருந்தால் ஒரே வாரத்தில் அதனை கரைத்து விடும். இது இதய அடைப்பை தடுக்கிறது.
அதுமட்டுமில்லாமல் வெண்டைக்காய் நிறைய நோய்கள் வராமல் தடுக்கிறது. பெருங்குடலில் வரும் புற்று நோயைத் தடுக்கிறது. உடம் பருமனைக் குறைக்கும். சருமத்தை அழகாக்கும். உங்கள் உடல் ஆரோக்கியம் உங்கள் கையில் மட்டும்தான் உள்ளது. தீயவற்றை ஒதுக்கி , இப்படி எல்லாவிதத்திலும் நன்மை தரும் வெண்டைக்காயை தினமும் எடுத்துக் கொள்ளுங்கள்.ஆரோக்கியம் மேம்படும்.

No comments :

Post a Comment