நன்னாரி... இது கொடி வகையைச் சேர்ந்தது என்றாலும் இதன் வேர்தான் மிகுந்த பலனளிக்கக்கூடியது. வெயில் காலங்களில் விற்கக்கூடிய நன்னாரி சர்பத்துக்கு, இந்த வேர்தான் மூலப்பொருள். நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கக்கூடிய நன்னாரி வேரை இடித்து நீர் விட்டு கொதிக்கவைக்க வேண்டும். நீர் பாதியாக வற்றியதும் அதனுடன் சர்க்கரை சேர்த்துக் குடித்தால் (இது நன்னாரி மணப்பாகு என்றழைக்கப்படுகிறது), எரிச்சலுடன் சிறுநீர் கழிப்பவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும். முக்கியமாக சொட்டு மூத்திரம், சிறுநீர் கழிக்க சிரமப்படுதல், சிறுநீர் கழிக்காததால் அடிவயிற்றில் ஏற்படும் வலி உள்ளிட்ட சிறுநீர் சம்பந்தப்பட்ட உபாதைகளை இந்த நன்னாரி பானம் சரிசெய்யும். உடல் சூட்டினால் அவதிப்படுபவர்கள் நன்னாரி மணப்பாகை 15 முதல் 25 மில்லி வீதம் சில நாட்கள் குடித்து வந்தால் நிவாரணம் கிடைக்கும். 5 கிராம் பச்சை நன்னாரி வேரை அரைத்து ஒரு டம்ளர் பாலில் கலந்து குடித்தால் வறட்டு இருமல் சரியாகும்.

மேலும், பொதுவாக நன்னாரி உடல் வியர்வையை கூட்டுவதோடு, ரத்தத்தை தூய்மைப்படுத்தக்கூடியது; தாராளமாக நீர் இறங்கச் செய்யக்கூடியது, ஆண் - பெண் உறுப்புகளில் வரக்கூடிய ரணத்துடன் கூடிய புண்களை ஆற்றும் வல்லமை படைத்தது நன்னாரி.

நலம் தரும் நன்னாரி!


தினமும் காலையில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறேன் என்று பழச்சாறுகளை பருகுபவரா? பழச்சாறுகள் உடல் எடையை அதிகரிக்காது என்று நினைப்பவரா? காலையில் காபி, டீக்கு பதிலாக, பழச்சாறுகளை பருகுபவர்கள் தான் அதிகப்படியான கலோரிகளை உட்கொள்கின்றனர் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சிலர் காலையில் புரோபயோடிக் பானங்களைப் பருகுவார்கள். ஆனால் இந்த புரோபயோடிக் பானங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துமே தவிர, உடல் எடையைக் குறைக்க உதவாது.

மாறாக புரோபயோடிக் பானங்களில் சேர்க்கப்பட்டிருக்கும் சர்க்கரை, பவுடர் பால், செயற்கை இனிப்பூட்டிகள் போன்றவை உடலில் கலோரிகள் அளவைத் தான் அதிகரிக்கும். எனவே நீங்கள் உங்கள் உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள நினைத்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள பானங்களை காலையில் பருகுவதைத் தவிர்த்திடுங்கள்.

இனிப்பு லஸ்ஸி வட மற்றும் மேற்கு இந்திய பகுதிகளில் லஸ்ஸி மிகவும் பிரபலமான ஓர் பானம். இந்த பானமானது தயிர், சர்க்கரை, தண்ணீர் சேர்த்து செய்யப்படுவது.

இந்த பானத்தில் கொழுப்புக்களும், சர்க்கரையும் உடல் எடையை மிகவும் வேகமாக அதிகரிக்கும் அளவில் நிறைந்துள்ளது. அதிலும் ஒரு டம்ளர் லஸ்ஸியில் 159 கலோரிகள் இருக்கும்.

சாக்லேட் அல்லது பாதாம் பால் தற்போது பாதாம் பால் அல்லது சாக்லேட் பாலைப் பருகுவோரின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. ஆனால் கடைகளில் விற்கப்படும் பாதாம் பவுடர் மற்றும் சாக்லேட் பவுடரை பாலில் சேர்த்து கலந்து பருகினால், அதில் சேர்க்கப்பட்டுள்ள செயற்கை சுவையூட்டிகளால் உடல் பருமனைத் தான் சந்திக்கக்கூடும். ஒரு டம்ளர் சாக்லேட் அல்லது பாதாம் பாலில் 158 கலோரிகள் இருக்கும்.

ஆரஞ்சு ஜூஸ் பழங்களை எப்போதும் அப்படியே சாப்பிட்டால் தான் அதன் முழுமையான பலனைப் பெற முடியும். அதனை ஜூஸ் வடிவில் தயாரித்துப் பருகும் போது, அதில் சுவைக்காக சர்க்கரையை சேர்க்க நேரிடும்.

இதனால் அந்த பழச்சாறு உடலுக்கு நன்மையைக் கொடுப்பதற்கு பதிலாக, தீமையைத் தான் விளைவிக்கும். அதிலும் ஒரு டம்ளர் ஆரஞ்சு ஜூஸில் 220-க்கும் அதிகமான அளவில் கலோரிகள் இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? எனவே எப்போது பழங்களை சாறு வடிவில் அதிகாலையில் குடிப்பதைத் தவிர்த்திடுங்கள்.

எருமை பால் சொன்னால் நம்பமாட்டீர்கள், ஒரு டம்ளர் எருமை மாட்டுப் பாலில் 280 கலோரிகளும், 16.81 கிராம் கொழுப்புக்களும் உள்ளது. இதற்கு மேல் ஏதாவது சொல்ல வேண்டுமா என்ன?

வாழைப்பழ மில்க் ஷேக் நீங்கள் உடல் எடை அதிகரிக்க வேண்டாம் என நினைத்தால், வாழைப்பழத்தையும், பாலையும் ஒன்றாகப் பருகாதீர்கள். ஏனெனில் ஒரு வாழைப்பழத்தில் மட்டும் 108 கலோரிகள் உள்ளது. அப்படியெனில் ஒரு டம்ளர் வாழைப்பழ மில்க் ஷேக்கில் எவ்வளவு கலோரிகள் இருக்கும் என்று சற்று யோசித்துப் பாருங்கள்.

ஸ்மூத்தி பலரும் ஸ்மூத்தி மிகவும் ஆரோக்கியமான பானமாக கருதுவார்கள். ஆனால் அதில் தான் கலோரிகளும், கொழுப்புக்களும் அதிகமான அளவில் இருக்கும். ஒரு டம்ளர் ஸ்மூத்தியில் 145 கலோரிகள் இருக்கும்.

வேறு என்ன பருகுவது? உங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உடல் எடையைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளவும் நினைத்தால், மேலே கொடுக்கப்பட்டுள்ள பானங்களுக்கு பதிலாக, வேறு சில பானங்கள் உள்ளன. அவற்றைப் பருகுங்கள். நிச்சயம் உடல் எடை குறைவதோடு, ஆரோக்கியமும் மேம்படும்.

தேன்-பட்டை டீ ஒரு டம்ளர் சுடுநீரில் 1 டீஸ்பூன் பட்டைத் தூள் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, காலையில் எழுந்ததும் குடித்து வர வேண்டும். வேண்டுமானால், இத்துடன் சிறிது எலுமிச்சை சாற்றினையும் சேர்த்துக் கொள்ளலாம்.

க்ரீன் டீ உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி உடலை சுத்தமாகவும், வயிற்றில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைக்கவும் வேண்டுமானால், தினமும் காலையிலும், மாலையிலும் ஒரு டம்ளர் க்ரீன் டீயைப் பருகுங்கள்.










உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் காலையில் குடிக்கக்கூடாத பானங்கள்!


பூண்டு கொழுப்பை கரைக்கும் சிறந்த பண்பு கொண்டிருக்கிறது. இது பசியை கட்டுப்படுத்தும் ஹார்மோனையும் கட்டுப்படுத்தி, வேகமாக உடல் பருமனை குறைக்க உதவுகிறது.

இன்றைய பெரும்பாலான மக்கள் தினசரி எதிர்கொள்ளும் இரண்டு பிரச்சனை காலை கடனும், உடல் பருமனும் தான். உடல் பருமன் இருந்தாலே காலை கடன், செரிமானத்தில் பிரச்சனைகள் எழுவது சாதாரணம் தான்.

இது மட்டுமின்றி, உடல் பருமன் விந்தணு திறன் குறைபாடு, சர்க்கரை நோய் போன்றவை உண்டாக காரணியாக இருக்கிறது.

நாம் சமையலில் சேர்க்கும் சில பொருட்கள் இயற்கையாகவே கொழுப்பை கரைக்கும் தன்மை கொண்டிருக்கின்றன. மிளகு, மஞ்சள், இஞ்சி, பூண்டு போன்றவை இவற்றில் அடங்குபவை ஆகும்.

இதில் பூண்டு கொழுப்பை கரைக்கும் சிறந்த பண்பு கொண்டிருக்கிறது. இது பசியை கட்டுப்படுத்தும் ஹார்மோனையும் கட்டுப்படுத்தி, வேகமாக உடல் பருமனை குறைக்க உதவுகிறது.

உடல் எடையை குறைக்க பூண்டு ஓர் சிறந்த மருத்துவ குணம் படைத்த பொருளாக திகழ்கிறது.

உடல் எடை அதிகரிக்க முக்கிய காரணமாக இருப்பது அடிக்கடி பசிப்பது, அதிகமாக பசிப்பது. பூண்டு இந்த பசியை கட்டுப்படுத்த வல்லது. பூண்டின் இயற்கை தன்மையானது பசியை தூண்டும் சுரப்பியை சீராக்குகிறது.

லெப்டின் என்ற சுரப்பி தான் மூளைக்கு பசி குறித்த சிக்னல் அனுப்பி, உண்ண தூண்டுகிறது. இதில் ஏற்படும் கோளாறுகளினால் தான் அடிக்கடி பசி எடுப்பது (அல்லது) பசியே இல்லாமல் இருப்பது போன்றவை எல்லாம்.

பூண்டு, இந்த சுரப்பியை சீராக்கி பசியை கட்டுப்படுத்துகிறது. இதனால் உடலில் அதிகமாக கொழுப்பு செல்கள் அதிகரிக்காமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

மேலும் பூண்டை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதால் நோரெபினிஃப்ரைன் எனும் சுரப்பி வெளிப்படுகிறது. இது நியூரோடிரான்ஸ்மிட்டரை தூண்டிவிட்டு உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. வளர்சிதை மாற்றம் சீரடைவதால் உங்கள் உடல் எடை அதிகரிக்காமல் பாதுகாக்க முடியும்.

பூண்டு பல் - 3

1 எலுமிச்சை பழத்தின் சாறு

1 கப் தண்ணீர்

ஒரு கப் நீரில் ஒரு எலுமிச்சை பழத்தின் சாறினை சேர்த்துக் கொள்ளவும். பிறகு அதில் நசுக்கிய மூன்று பூண்டு பற்களை எலுமிச்சை நீரில் சேர்த்து நன்கு கலந்து பருகவும்.

தினமும் காலை வெறும் வயிற்றில் இந்த ஜூஸை இரண்டு வாரம் பருகி வந்தால் நீங்களாகவே உடல் எடையில் நல்ல மாற்றத்தை காண முடியும்.

இரண்டே வாரத்தில் தொப்பையின் கொழுப்பை கரைக்கும் பூண்டு


இரட்டைக் குழந்தை வேண்டுமென்று நினைப்பவர்கள், கர்ப்பமாக முயலும் போது ஃபோலிக் அமிலம் நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.

* சர்க்கரைவள்ளிக் கிழங்கை தங்களது அன்றாட டயட்டில் சேர்க்கும் பகுதிகளில் வாழும் தம்பதிகளுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

எப்படியெனில் சர்க்கரைவள்ளிக் கிழங்கு, பெண்களின் கருவளத்தை அதிகரித்து, ஓவுலேசன் நிகழ்வை மேம்படுத்தி, இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் வாய்ப்பை அதிகரிக்கும்.

* இதுவரை இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த பெண்களின் வயது 30-திற்கு மேல் தான் உள்ளது. இதற்கு காரணம் 30 வயதிற்கு மேல் பெண்கள் இறுதி மாதவிடாயை நெருங்கிக் கொண்டிருப்பால், ஒவ்வொரு மாதமும் கருப்பையில் இருந்து ஒன்றிற்கு மேற்பட்ட முதிர்ச்சியடைந்த கருமுட்டைகள் வெளியிடப்படுகின்றன.

இந்நேரத்தில் உடலுறவில் ஈடுபடும் போது அக்கருமுட்டைகளில் விந்தணுக்கள் நுழைந்து இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுக்க உதவுகின்றன.

* இரட்டைக் குழந்தை வேண்டுமென்று நினைப்பவர்கள், கர்ப்பமாக முயலும் போது ஃபோலிக் அமிலம் நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும். இந்த ஃபோலிக் அமிலம், பருப்பு வகைகள், நட்ஸ், பட்டாணி, அவகேடோ அல்லது வெண்ணெய் பழம், பசலைக்கீரை, வெண்டைக்காய், சிட்ரஸ் பழங்களில் அமிலம் இருக்கும்.

* உயரத்திற்கு ஏற்ற எடை சில ஆய்வாளர்கள், ஒரு பெண் தான் கருத்தரிக்கும் போது, தன் உயரத்திற்கு ஏற்ற எடையுடன் நன்கு ஆரோக்கியமாக இருந்தால், இரட்டைக் குழந்தைகள் பிறக்க அதிகம் வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.

* இரட்டைக் குழந்தை வேண்டுமென்று நினைக்கும் ஆண்கள், ஜிங்க் சத்து நிறைந்த உணவுப் பொருட்களான கடல் சிப்பி, பச்சை இலைக் காய்கறிள், விதைகள் மற்றும் பிரட் போன்றவற்றை அதிகம் உட்கொண்டால், விந்தணுக்களின் உற்பத்தி அதிகரித்து, பெண்களின் உடலினுள் செல்லும் போது, ஒன்றிற்கு மேற்பட்ட விந்தணுக்கள் நீந்தி கருமுட்டையை அடையும். இதனால் இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பும் அதிகரிக்கும்.

* ஒன்று அல்லது இரண்டு பிரசவத்தை சந்தித்த பெண்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. எனவே இரட்டை குழந்தை வேண்டுமென நினைக்கும் தம்பதிகள் முதல் குழந்தைக்கு பின் முயற்சியுங்கள்.

* முக்கியமாக தம்பதிகளின் குடும்பத்தில் யாருக்கேனும் இரட்டைக் குழந்தைகள் பிறந்திருந்து, அத்தம்பதிகள் இரட்டை குழந்தைக்கு முயற்சித்தால், அவர்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

* குட்டையான பெண்களை விட, உயரமான பெண்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்புள்ளது. அதுவும் 5 அடி 6 அங்குலம் கொண்ட பெண்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு அதிகம்.

உங்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்க வேண்டுமா?


1. நெஞ்சு சளிக்கு தேங்காய் எண்ணெயில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆற வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

2. தலைவலிக்கு ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

3. தொண்டை கரகரப்புசுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

4. தொடர் விக்கலுக்கு நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

5. மண் சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.

6. கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.

7. டம்ளர் தண்ணீரில் கறிவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

8. மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.

9. வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

10. வயிற்று வலிக்கு வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

பல்வேறு நோய்களுக்கு தீர்வு தரும் எளிய பாட்டி வைத்தியம்


How To Increase Platelets Count ? | Mooligai illam


கழுத்துவலி என்பது யாருக்கும் வரலாம்.சிறுவர்களுக்கு அதிக புத்தங்கங்கள் தூக்குவதனால், சரியான முறையில் உட்காராமல், குனிந்தபடியே படிப்பதனால் கழுத்து வலி ஏற்படும்.

பெரியவர்களுக்கு கழுத்துவலி நிறைய காரணங்கள் உள்ளது.அப்படி வந்தால் அதனை பெரிது படுத்துவதில்லை. ஏதாவது வலியை போக்கும் நிவாரணியை எடுத்து தடவுகிறார்கள்.கழுத்து வலி எதனால் வருகிறது எனப் பார்ப்போம்.

சர்வைகல் டிஸ்க் : நம் உடலில் மிக முக்கிய நரம்பு மையங்கள் கழுத்தில்தான் அமைந்துள்ளது. முதுகுத் தண்டுவட எலும்புகளும் இந்த பகுதியில்தான் தொடங்குங்கின்றன. கழுத்து எலும்பின் மத்தியில் உள்ள சவ்விற்கு பெயர்தான் சர்வைகல் டிஸ்க். அதலிருந்துதான் உடலிற்கு எல்லா நரம்புகளும் செல்கின்றன.

கழுத்திற்கு அதிகமான வேலை தரும்போது, அங்கிருக்கும் தசைகள் சோர்வுற்று சவ்வினை அழுத்தும். அதன் காரணமாக அந்த சவ்வு விலகுவதால் உண்டாவது பிரச்சனைக்கு பெயர்தான் சர்வைகல் ஸ்பான்டைலிட்டிஸ்.

யாருக்கெல்லாம் வரும் : பொதுவாக நாள் முழுவதும் கம்ப்யூட்டர் முன்பாகவேஅமர்ந்தால், சரியான தலையணை வைத்து படுக்காமல் இருப்பவர்களுக்கு வரும். தூங்கும்போது கைகளை தலைக்கு முட்டு கொடுத்து தூங்கினால் கைகளில் ரத்த ஓட்டம் பாதித்து, அதனால் கழுத்திலுள்ள சவ்விற்கும் தடங்கல் தரும்.

இதனால் ஏற்படும் வலி மெல்ல கழுத்தில் வலி ஆரம்பித்து பின் கை கால் என பரவி, அசாத்திய வலி தரும். அன்றாட வேலை செய்ய இயலாமல் நிறைய பேர் அவதிபடுவதுண்டு.

இதனை சில உடற்பயிற்சி மூலமாகவும், சரியான சிகிச்சையினாலும் குணப்படுத்தலாம். வீட்டில்யேயே ஸ்பைனல் டிஸ்க்கை எவ்வாறு பாதுகாத்து வலியினைப் போக்கலாம் என்பதை பார்க்கலாம்

சூடான அல்லது குளிர்ச்சியான ஒத்தடம் : இந்த இரண்டு ஒத்தடங்களுமே தசைகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. இறுக்கத்தைப் போக்கி, நரம்புகளை ரிலாக்ஸாக வைக்கும். தினமும் காலையில் எழுந்ததும் மற்றும் இரவு தூங்கும் முன் ஒத்தடம் வைப்பது நல்ல நிவாரணம் தரும்

பூண்டு : பூண்டினை தினமும் வாணிலியில் வதக்கி சாப்பிட்டு வந்தால், கழுத்தில் ஏற்படும் வீக்கம் குறைந்து, எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.

உடற்பயிற்சி : இந்த ஸ்பாண்டிலைட்டிஸ் வலிக்கு சிறந்த தீர்வு கழுத்திற்கான உடற்பயிற்சிதான். அதிக நேரம் கம்ப்யூட்டர் முன் அமர்பவர்கள் கட்டாயம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

உடற்பயிற்சி செய்யும் முறை : தோள்பட்டையை மேலே உயர்த்தி,மூச்சை நன்றாக இழுங்கள். ஒரு 10 நொடிகளுக்கு தம் பிடித்து ,தோள்பட்டையை உடனடியாக தொங்கவிடுவது போல் தளர்த்துங்கள்.

இவ்வாறு ஒரு 5 முறை செய்யுங்கள். இவ்வாறு தினமும் செய்வதனால் தசைகளுக்கு அதிக ரத்த ஓட்டம் பாய்ந்து வலி நாளடைவில் குறையும்.இது போல் உங்கள் மருத்துவரை அணுகி உடற்பயிற்சிகளைக் கற்றுக் கொள்ளுங்கள்.

எப்ஸம் உப்பு : எப்ஸம் உப்பினை வெதுவெதுப்பான நீரில் கலந்து அதில் குளிக்கலாம். இது வலியை போக்கி கழுத்திற்கு இதம் தரும்.

வேப்பிலை : வேப்பிலை வலியை போக்கும் மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. வேப்பிலைப் பொடியை நீரில் கொதிக்க வைத்து அதில் குளிக்கலாம். வேப்பிலையை அரைத்து பேஸ்டாக்கி கழுத்தில் பத்து போட்டாலும் வலிக்கு இதமாக இருக்கும்.

இஞ்சி : இஞ்சியை அதிகமாக உணவில் சேர்துக் கொள்ளுங்கள். இது சிறந்த வலி நிவாரணி.தசைகளுக்கு வலு சேர்க்கும் உணவுகளை சாப்பிடும்போது, தசைகள் உறுதி பெற்று வலி குறையும்.

நல்லெண்ணெய் : நல்லெண்ணெயில் மெக்னீசியம், கால்சியம் மற்றும் நிறைய சத்துக்கள் உள்ளது. நல்லெண்ணெயை சூடுபடுத்தி வலியுள்ள பகுதியில் தேயுங்கள். அப்படியே அரை மணி நேரம் விட்டுவிடுங்கள். பின் வெதுவெதுப்பான நீரில் கழுவினால், வலி குறையும்.

ஆப்பிள் சைடர் வினிகர் : ஆப்பிள் சைடர் வினிகர் சிறந்த வலி நிவாரணி. இதனை நீரில் கலந்து குடித்து வர நாளடைவில் வலியுள்ள பகுதியில் செயல் புரிந்து குணமளிக்கும்


தாங்க முடியாத கழுத்து வலியினால் அவதிப்படுகிறீர்களா? இதோ சில டிப்ஸ்...


குழந்தைகளுக்கு ஈ.என்.டி. பிரச்னை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை அளிக்க வேண்டும்.ஈ.என்.டி. பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை அளிக்க வேண்டும்.

காது :

குழந்தைகளுக்கு காது வலி தனியாக வருவதில்லை. சளியும் மூக்கடைப்பும் அதிகமாகும்போது காதுவலி, காது அடைப்பு மற்றும் சீழ் வடிதல் ஏற்படும். சளி இல்லாத போதும் கூட குழந்தைகளுக்கு தாங்க முடியாத காதுவலி உண்டாகலாம்.

பெற்றோர் அடிக்கடி குழந்தைகளின் காதை சுத்தம் செய்வதால் ஏற்படும் எழுச்சி எனப்படும் கட்டி, குருமி ஆகியவற்றால் குழந்தைகளுக்கு கடுமையான காதுவலி ஏற்படலாம். குழந்தைகளின் காது சவ்வு மிகவும் சன்னமாகவும் மிருதுவாகவும் இருக்கும். காதில் அடித்தாலோ ‘சவ்வு கிழிதல்’ ஏற்பட்டு நோய்த் தொற்றுப் பரவலாம்.

அதிக காய்ச்சலாலும் குழந்தைகளின் காது கேட்கும் திறன் குறையக்கூடும். பட்ஸ் பயன்படுத்தி காதில் உள்ள அழுக்கை எடுக்க முயற்சிப்பதாலும் கேட்கும் திறன் குறையலாம். காதுகளை மென்மையாகப் பராமரிக்க வேண்டும்.

குழந்தைக்கு காது வலிக்கிறது என்பதற்காக காதில் எண்ணெய் காய்ச்சி ஊற்றுவது தவறு. அந்தப் பழக்கம்கூட குழந்தைக்கு ஆபத்தை விளை விக்கும்.

மூக்கு :

பள்ளி செல்லும் குழந்தைகளும் வீடு அருகே விளையாடும் குழந்தைகளும் புறச்சூழல் காரணமாக அலர்ஜி மற்றும் நோய்த்தொற்றுக்கு ஆளாவார்கள். சளித்தொல்லையால் அவதிப்படுவார்கள்.

மூக்குப்பகுதியில் நமைச்சல் போலத் தோன்றும். அதனால் ஏற்படும் மூக்கடைப்பு, நீர்வடிதல் போன்ற பிரச்னைகளால் சாப்பிடும் உணவை விழுங்க முடியாமல் தவிப்பார்கள்.

தூங்கும்போதும் மூக்கடைப்பு ஏற்படுவதால் வாயால் மூச்சு விடுவார்கள். தொண்டை வறண்டு அடிக்கடி தாகம் எடுக்கும். அதனால் போதுமான தூக்கமும் உணவும் இல்லாமல் சோர்ந்து காணப்படுவார்கள்.

காது, மூக்கு, தொண்டைப்பகுதிகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாக இருப்பதால் சளி அதிகரிக்கும்போது மூன்றிலும் நோய்த்தொற்றுப் பரவும்.

சில குழந்தைகளுக்கு ‘சில்லி மூக்கு உடைதல்’ பிரச்னை ஏற்படலாம். பள்ளியில் மற்ற குழந்தைகளுடன் விளையாடும்போது எங்காவது இடித்துக்கொண்டு மூக்கில் இருந்து அடிக்கடி ரத்தம் வெளிப்படும்.

அதிக வெப்பம், வேதிப்பொருள், அடிக்கடி சளிப்பிடித்தல், குழந்தைகள் விரலால் மூக்கை நோண்டுதல் ஆகிய காரணங்களால் மூக்கின் சிறு ரத்தக்குழாய்களில் ரத்தம் வெளிப்பட வாய்ப்பு இருக்கிறது. இதைப் பார்த்து குழந்தைகள் பயப்படுவார்கள். இந்தப் பிரச்சனை உள்ள குழந்தைகளைப் பாதுகாப்பாகக் கையாள வேண்டும்.

தொண்டை :

சில நேரங்களில் தொண்டையில் ஏற்பட்ட வலியால் குழந்தை எச்சிலை விழுங்கக்கூட சிரமப்படும். டான்சில் கட்டி இன்ஃபெக்ஷனால் காய்ச்சல் ஏற்படலாம்.

முறையாக பதப்படுத்தப்படாத உணவுகள், குளிர்பானங்களை உட்கொள்வதாலும் தொண்டைப்பகுதியில் நோய்த்தொற்று ஏற்படும். சாலையோர குளிர்பானம், கரும்புச்சாறு, பழச்சாறு ஆகியவற்றில் கிருமி இருந்தால் தொண்டைப்பகுதியில் நோய்த்தொற்று ஏற்பட்டு தொந்தரவு செய்யும்.

குரல்வளை மற்றும் மூச்சுக்குழாய் பகுதியில் விஷக்கிருமிகள் சேருவதால் இருமல், குரல் மாற்றம், மூச்சுத்திணறல் ஆகியவற்றால் குழந்தைகளின் சுவாசம் தடைபட்டு உயிருக்கே ஆபத்து ஆகலாம். தொண்டையில் சிறு பிரச்சனை உருவாகும் போதே மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் விரைவில் தீர்வு காணலாம்.

கவனம் தேவை :

பள்ளி செல்லும் குழந்தைகளை இந்தப் பிரச்சனையிலிருந்து பாதுகாப்பதில் பெற்றோர், ஆசிரியர் - இருதரப்பினரும் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும். காதிலோ, மூக்கிலோ நுழைக்கும்படியான, வாயில் போட்டு விழுங்கும்படியான பொருட்களை குழந்தைகள் கைகளில் வைத்திருக்க அனுமதிக்கலாகாது.

சில குழந்தைகள் கையில் கிடைக்கும் மணி, பென்சில், சாக்பீஸ், கடலை, காசு, கற்கள் ஆகியவற்றை காது, மூக்கு அல்லாது வாயில் போட்டுக் கொள்வார்கள். சிலர் அருகில் உள்ள குழந்தையின் காது, மூக்கு, வாயில் போட்டு விடுவார்கள்.

காது, மூக்கில் பொருட்களை போடும் போது அடைப்பு, ரத்தம் வடிதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். வாயில் போட்டு விழுங்கும் போது காசு, கொட்டை வகைகள் போன்றவை உணவுக் குழாய் மற்றும் மூச்சுக் குழாயில் சென்று அடைபடும். மூச்சுக்குழாயில் சென்று அடைக்கும் போது உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இல்லாவிட்டால் உயிருக்கே ஆபத்து.

சிறு குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல், காதுவலி, தொண்டை வலி போன்றவை வராமல் பாதுகாக்க வேண்டும். அவற்றைக் கண்டுகொள்ளாமல் விடுவதால் குழந்தைகளின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்படும். பனி, மழைக்காலங்களில் அதற்கான உடைகளை அணிவித்துப் பாதுகாக்க வேண்டும்.

தூசு மற்றும் அசுத்தமான சுற்றுப்புறத்தால் குழந்தைகளுக்கு நோய்த்தொற்று ஏற்படாமல் கவனமாகப் பார்க்க வேண்டும். ஈ.என்.டி. பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை அளிக்க வேண்டும். அதன் மூலம் மிகப்பெரிய அபாயங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கலாம்.

குழந்தைகளின் ஈ.என்.டி. பிரச்சனைகளை சமாளிப்பது எப்படி?


உடல் பருமன் அதிகமாக இருப்பதால் ஆண்களின் விந்தில் இருக்கும் ஆயிரக்கணக்கான மரபணுக்களில் பலவன திறன் குறைந்து போகிறது. மேலும், இதனால் பிறக்கப் போகும் குழந்தையின் வளர்ச்சியிலும் கூட குறைபாடுகள் ஏற்படலாம் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

உடல் எடை குறைக்க முனைவோர் காலை உணவை தவிர்ப்பது தவறு. ஏனெனில், இதனால் பசி மற்றும் இடைவேளைகளில் உணவு உட்கொள்ளும் பழக்கமும் அதிகரிக்கும். இந்த இடைவேளை உணவுப் பழக்கம் தான் உடல் எடை அதிகரிக்க முக்கிய காரணியாகும்.

எனவே, காலை உணவில் எந்தெந்த உணவுகளை உட்கொண்டு வந்தால் உடல் பருமன் அதிகரிக்காமல் தடுக்க முடியும் என இனி காண்போம்…

முட்டையில் புரதம், வைட்டமின் நிறைவுற்ற கொழுப்பு உள்ளது. இவை காலையில் உங்கள் உடற்சக்தியை ஊக்குவிக்க உதவுகிறது. மேலும், முட்டை குறைந்த கலோரியில் பசியை நிறைவு செய்யவதால் உடல் எடை அதிகரிப்பதை தடுக்கலாம்.

பழங்களில் இருப்பது இயற்கை இனிப்பு. மேலும், இவை இரத்தத்தில் உடனடியாக கலக்காது என்பதால், இரத்த சர்க்கரை அதிகரிப்பு, நீரிழிவு, உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் உண்டாகாமல் தடுக்கிறது.

கிரீன் டீ வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும் திறன் கொண்டது. மேலும், மன அழுத்தத்தை குறைக்கவும் கிரீன் டீ பயனளிக்கிறது. 

பல ஆய்வுகளின் மூலம் கிரீன் டீ கார்டிசோல் எனும் மன அழுத்த ஹார்மோனை குறைக்க உதவுகிறது என கண்டறியப்பட்டுள்ளது. கார்டிசோல் அதிகமாக இருப்பது உடல் எடை குறைக்க இடையூறாக அமைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மோர் அல்லது தயிர் காலையில் உட்கொள்வது பசியை குறைக்க உதவுகிறது. இதனால் இடைவேளையில் நீங்கள் நொறுக்குத்தீனி உண்ணும் பழக்கம் குறையும்.

நட்ஸ் கலந்த பால் பருகுங்கள். இதில் இருப்பது இயற்கை சர்க்கரை. மற்றும் கலோரிகள் குறைவு, உடற்சக்தியை ஊக்குவித்து, உடல் எடையை குறைக்கவும் இது உதவும்.

ஓட்ஸ் உணவில் நார்ச்சத்து அதிகம். இதில் சர்க்கரை அளவு அறவே இல்லை. மற்றும் பசியை குறைத்து, உடல் எடையை குறைக்க இதுவொரு சிறந்த உணவாகும்.

உடல் பருமனை குறைக்க உதவும் காலை உணவுகள்



பீட்டா சிடோஸ்டெரால் (beta sitosterol) அதிகளவில் உள்ளதால் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை இந்தப் பழம் வெகுவாகக் குறைக்கும். ஹைபர்கொலஸ்ட்ரொலெமியா (Hypercholesterolemia) என்ற நோயின் ஆரம்பக் கட்டத்தில் இருக்கும் ஒருவர், 7 நாட்கள் தொடர்ந்து அவகேடோவை சாப்பிட்டு வந்தால், அந்த நோயின் தாக்கம் 17 சதவிகிதம் வரை குறையும். 22 சதவிகிதம் கெட்டக் கொழுப்பு குறைந்து, 11 சதவிகிதம் நல்ல கொழுப்பு உடலில் சேரும். நல்ல கொழுப்பு நிறைந்திருப்பதால் இன்சுலின் குறைப்பாடும் சரியாகும்.

கொழுப்பின் அளவு குறைக்கும் அவகேடோ!



வெந்தயம், கீரை வகையைச் சேர்ந்தது. வெந்தயக்கீரை, வெந்தயம் இரண்டுமே மருத்துவப் பலன்கள் கொண்டவை. அனைவருமே வீட்டில் சிறு தொட்டியில் வெந்தயக்கீரையைப் வளர்த்துப் பயன்படுத்தலாம். வயிறு உப்புசம், மாந்தம், வாயுத்தொல்லை, இருமல், சுவையின்மை பிரச்னைகளைச் சரிசெய்யும். வெந்தயக்கீரையைச் சமைத்துச் சாப்பிட்டுவந்தால், மலம் இளகும். வெயில் காலத்தில் பலருக்கும் உடல் சூடு ஏற்படும். இதைத் தணித்து, குளிர்ச்சியடையச் செய்யும்.

உடலில் ஏற்படும் உள்வீக்கம், வெளிவீக்கத்தைப் போக்கும். வெளி வீக்கத்தின் மீது, வெந்தயக்கீரையை அரைத்துக் கிண்டி, வீக்கத்தின் மீது வைத்துக்கட்ட, வீக்கம் குணமாகும். தீப்புண்கள் மீது வைத்துக்கட்ட, காயம் விரைவில் ஆறும். வெந்தயக்கீரையை வேகவைத்துத் தேன் விட்டுக் கலந்து, அளவாகச் சாப்பிட்டுவந்தால், மலம் எளிதாக வெளியேறும்; நெஞ்சு வலி, இருமல், மூலம் மற்றும் செரிமானப் பாதையில் இருக்கும் புண்கள் குணமாகும்.

இதன் இலையை எடுத்துச் சீமைப்புளி, அத்திப்பழம், திராட்சையைச் சேர்த்துக் குடிநீர் செய்து தேன் கலந்து சாப்பிட்டுவந்தால், நெஞ்சு வலி, மூச்சடைப்பு குணமாகும். வெந்தயக்கீரையை நன்கு வேகவைத்து, சிறிது வெண்ணெய் சேர்த்துக் கலக்கி உட்கொள்ள, பித்தம் அதிகமாவதால் ஏற்படும் மயக்கம் குணமாகும்.

இந்தக் கீரையுடன், பாதாம் பருப்பு, கசகசா, கோதுமை நெய், பசு நெய், பால், சர்க்கரை சேர்த்து, களிபோல கிண்டி சாப்பிட்டுவந்தால், உடல் வலுவடையும். இடுப்பு வலி நீங்கும். வெந்தயக்கீரையுடன் சீமை அத்திபழத்தைச் சேர்த்து அரைத்து, கட்டிகளின் மீது பற்றுப் போட, கட்டிகள் விரைவில் பழுத்து உடையும். படை மீது பூசினால், விரைவில் சரியாகும்.

வெந்தயக்கீரையை ஊறவைத்து, அந்தத் தண்ணீரை எடுத்து வாய் கொப்பளித்துவந்தால் வாய்ப்புண் ஆறும். வைட்டமின்கள், கால்சியம், இரும்புச்சத்து நிறைந்தது. சர்க்கரை நோயாளிகள் இந்தக் கீரையை அடிக்கடி சமைத்துச் சாப்பிடுவது நல்லது

வெப்பம் தவிர்த்து குளிர்ச்சி தரும் வெந்தயக்கீரை


வெட்ட வெட்ட மீண்டும் துளிர்விடும் வாழை மரத்தின் பயன்பாடுகள் எண்ணிலடங்காதவை. இதில் வாழைப்பூவும் முக்கிய அங்கம் வகிக்கின்றது. வாழைப்பூவை உணவாக இருவாரம் உட்கொண்டால் இரத்தத்தில் கொழுப்புத்தன்மை, பசைத்தன்மைகள் குறைந்து இரத்த ஓட்டம் சீரடையும். இரத்த ஓட்டம் சீரடையும் பட்சத்தில் ஆக்ஸிஜன், இரும்புசத்து அதிகப்படியாக உட்கிரகிக்கப்படுவதால் ரத்த சோகை என்பது தலை தூக்காது. துவர்ப்பு தன்மையை தன்னகத்தே அடக்கியுள்ள வாழைப்பூ இரத்தத்தில் கலக்கும் அதிக அளவு சர்க்கரையை கூட மட்டுப்படுத்தும்.

இன்றைய மாறுபாடான உணவு முறை பழக்கம் மன உளைச்சலால் ஏற்படும் செரியாமை இவைகளால் வாயு சீற்றம் அதிகமாகி வயிற்றில் புண்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இப்புண்கள் ஆற வாழைப்பூவை குறைந்தது மாதத்துக்கு 5 நாட்கள் சமைத்து உண்ணலாம். மூல நோய்கள், ரத்தம் வெளியேறுதல், உள் மூல - வெளி மூல புண்கள், கடுப்பு, மலச்சிக்கல், சீதபேதி, வாய்ப்புண், வாய்துர்நாற்றம் இவைகள் எல்லாம் நிவாரணமாக்கும் தன்மையை தன்னகத்தே கொண்டது வாழைப்பூ. பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை கோளாறு, மாதவிடாய் பிரச்னைகளை களைந்தெறியும் தன்மை கொண்டது.

நம் மாவட்டத்தில் விதவிதமான வாழைகள் பயிரிடப்படுகின்றன. இவற்றில் மொந்தன், பாளையங்கோட்டை வகைகளின் வாழைப்பூ உண்பது சால சிறந்ததாகும். வாழைப்பூ வடை, கட்லெட், பக்கோடா என பலகாரங்களாகவும் செய்து உண்பதும் உகந்ததே.

ரத்த ஓட்டத்தை சீராக்கும் வாழைப்பூ


இயற்கை நமக்கு அளித்துள்ள கொடைகளில் முக்கியமான பழங் களில் ஒன்று அன்னாசிப் பழம். அன்னாசியில் மாங்கனீஸ் சத்துக்கள் நிறைய உள்ளன. சமீபத்திய ஆய்வுகளில் இது நிரூபிக்கப் பட்டுள்ளது.
அன்னாசி பெரும்பாலும் வெப்ப மான பகுதிகளில் பயிரிடப்படுகிறது. புரதத்தை செரிக்கக் கூடிய புரோமலைன் என்ற என்சைம் இதில் அதிகம் உள்ளது. இது ரத்தம் உறையாமல் பாதுகாக்கிறது. தையாமின் மற்றும் வைட்டமின் சி சத்தும் அன்னாசியில் அதிகம் உள்ளது.
அன்னாசிப் பழம் சாப்பிடுவதால் காது மற்றும் சளித்தொல்லை, ஃப்ளூ காய்ச்சல் உள்ளிட்டவற்றில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கும். இப்பழத்தில் உள்ள மாங்கனீஸ் உடலில் ஆன்டி ஆக்சிடன்ட்களின் சக்தியை அதி கரிக்கும்.
இது இதய நோய்கள் மற்றும் மாரடைப்பில் இருந்து பாதுகாப்பளிக்கிறது. இப்பழத்தில் உள்ள இதர பிற வைட்டமின்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.இது சோர்வின்றி செயல்பட ஏதுவாகிறது. உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள அன்னாசி நிறைய சாப்பிடலாம் என்கின்றனர் டாக்டர்கள்.
அன்னாசி பழத்தில் விட்டமின் பி உயிர்ச்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு, பல நோய்களை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது. தேகத்தில் போதுமான ரத்தமில்லாமல் இருப்பவர் களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த மருந்தாகும்.
நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக செய்து வெய்யிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்து கொண்டு தினமும் படுக்க செல்வதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் 5 அன்னாசி வற்றல்களை ஊற வைத்து, பின் படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல்களை 48 நாட்கள் சாப் பிட்டு வரவேண்டும்.
இதனால் பித்தம் சம்பந்தமான அனைத்துக் கோளாறுகளும் நீங்கும். அன்னாசிப் பழத்தை, தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும்.அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர, அனைத்து விதமான உடல் உபாதை களும் தீரும். இதைத் தொடர்ந்து ஜூஸ்சாகவும் குடித்து வர, ஆண்களின் முக அழகு பொலிவு பெருகும்.
ஒரு நாளைக்கு தேவையான மாங்கனீஸ் உப்பைப் பெற ஒரு கப் பழத் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் போதும் அல்லது அரைப்பழம் சாப்பிட்டால் போதும். பழம் புதிய பழமாக இருக்க வேண்டும். பொட்டாசியம், கால்சியம் போல உடல் நலத்திற்குத் தேவையான உப்பு குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தில் பங்கு வகிக்கிறது.
அன்னாசி பித்தக் கோளாறுகளை விரைந்து குணமாக்குகிறது. அன்னாசியில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து அதிகம், அன்னாசியில் புரதம் தாராளமாக இருப்பதால் ஜீரணக் கோளாறு உடலில் வீக்கம் போன்றவை எதிர்ப்படாது. இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு.
ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு டம்ளர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்க விடவும்.இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொப்பை கரைய ஆரம்பிக்கும்.

பித்தக்கோளாறைப் போக்கும்அன்னாசி


எல்லாருக்குமே கண்கள் சில சமயங்களில் துடிக்கும். வலது கண் துடித்தால் கெட்டது, இடது கண் துடித்தால் நல்லது என நாமாகவே கண்களையும் விட்டு வைக்காமல் ஜோசியம் பார்த்துவிடுகிறோம். இதில் நல்லது என்று சொல்ல முடியாது. வேண்டுமானால் கெட்டது எனக் கூறலாம்.

ஏனெனில் கண்கள் துடிப்பதற்கு நிறைய காரணங்கள் உண்டு. சாதாரண தூக்கமின்மையில் தொடங்கி, மூளை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரை கண்கள் துடிப்பதற்கு பின் நிறைய காரணங்கள் உள்ளது. கண்கள் துடிப்பது, வந்து ஒரு சில நிமிடங்களில் தானாகவே போய் விடும்.

இது சாதாரணமாய் எல்லோருக்கும் வரும். பயப்பட வேண்டியது இல்லை. ஆனால் அது மாதக்கணக்கில் நீடித்தால், நிச்சயம் மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

கண் துடிப்பது எதனால்? கண்களின் மெல்லிய நரம்புகளையும், தசைகளையும் பாதிக்கும் வகையில் தொடர்ச்சியாக நடந்து கொண்டால், கண்கள் துடிக்கும். 

சில சமயங்களில் வெட்டி இழுப்பது போலவும் இருக்கும். கண்கள் துடிப்பதற்கு மயோகீமியா என்று மருத்துவ துறையில் அழைப்பார்கள்.

குடிப்பழக்கம்,சோர்வு, கண்கள் வறண்டு போவதால், மன அழுத்தம், அதிகமாய் காபி குடிப்பது, சரிவிகித சத்துக்களின் பற்றாக்குறை, அலர்ஜி, வெகு நேரம் கம்ப்யூட்டரை உற்று பார்ப்பது, படித்துக் கொண்டேயிருப்பது இது போன்று, கண்களுக்கு அதிகம் சிரமம் கொடுத்தால், சரியாக தூங்காமல் இருந்தால், மருந்துகளின் பக்க விளைவுகள் ஆகியவற்றினால் ஏற்படும்.

குடிப்பழக்கமும் முக்கிய காரணமாகும். தொடர்ச்சியாக கண்கள் துடித்துக் கொண்டேயிருந்தால், அவை நம் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும். 

ஆகவே என்ன பிரச்சனை என கண்டறிவது அவசியம். நீண்ட நாள் கண் துடிப்போ, வெட்டி இழுப்பது போலவோ இருந்தால், அது மூளை சம்பந்தப்பட்ட கோளாறாகவும் இருக்கலாம்.

வெறும் கண்கள் துடிப்பதோடு அல்லாமல், கண்கள் சிவந்து போனாலோ, கண்களில் எரிச்சல், அல்லது நீர் வடிதல், மற்றும் மேல் இமை தொங்கிக் கொண்டு வந்தாலோ, நிலைமை மோசமாக உள்ளது என அர்த்தம். உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய அவசியம்.

கண் துடித்தலுக்கு சிகிச்சை: கண் துடிப்பிற்கு, நன்றாக தூங்கி, கண்களுக்கு போதிய ஓய்வு கொடுக்கும் போது அது தானாகவே போய்விடும் அல்லது கண்களுக்கு வெதுவெதுப்பான ஒத்தடம் தந்தாலும் நரம்புகளின் இறுக்கம் தளர்ந்து, துடிப்பது நிற்கும்.

ஆனால் இதுவே நீண்ட நாட்களுக்கு தொடர்ச்சியாக இருக்கும் போது பொடாக்ஸ் ஊசி செலுத்துவதன் மூலம் சரி செய்யலாம். 

அல்லது அறுவை சிகிச்சையில், பிரச்சனைக்குரிய சில நரம்புகளையும், தசைகளையும் வெடிவிடுவார்கள். இதனால் வெட்டி இழுக்கும் பிரச்சனைக்கும் மற்றும் கண் துடிப்பிற்கும் தீர்வு கிடைக்கும்.


கண்கள் துடித்தால், நன்மையா? தீமையா?


உடல் எடை அதிகமானால் டயாபடிஸ், மூட்டுவலி, முதுகுவலி, என எல்லா நோய்களும் ஒவ்வொன்றாய் வர ஆரம்பிக்கும். அளவுக்கு மீறினால் எதுவும் உடலுக்கு கேடு என்பதை சாப்பிடும்போதெல்லாம் நினைவில், வைத்துக் கொள்ளுங்கள்.

உடலில் கொலஸ்ட்ரால் உடலுக்கு தேவையான சக்தியாக மாறி நமக்கு அன்றாட வேலை செய்ய எனர்ஜி தருகிறது. 

ஆனால் இந்த கொலஸ்ட்ரால் அதிகமானால் இதயத்தின் ரத்த தமனிகளில் சென்று படிந்துவிடும். பின் இதய நோய்வரும் அபாயம் உள்ளது. கூடவே ரத்தக்கொதிப்பு, சர்க்கரை வியாதி என வரவேற்கத் தொடங்கி விடுவீர்கள்.

கொழுப்புமிக்க உணவுகளை சாப்பிட்டு, அதன் பின் நோயினால் வாழ்நாள் முழுவதும் ஏன் மருந்து மாத்திரைகளில் நாம் கழிக்க வேண்டும்? எனவே எதுவும் அளவோடு சாப்பிடுங்கள்.

உணவுக்கட்டுப்பாட்டின் மூலமாக கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தலாம். அதேபோல் உடலில் கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பவர்கள், உடல் பருமனாக இருப்பவர்கள் இந்த எளிய ட்ரிங்க் குடித்தால் கொலஸ்ட்ரால் படிப்படியாக குறையும்.

தேவையான பொருட்கள் :

வாழைப்பழம் - 1

ஆரஞ்சு - 1

பட்டைபொடி - அரை ஸ்பூன்

சோயா மில்க் - அரைக்கப்

வாழைப்பழத்தில் எல்லா விட்டமின்களும் உள்ளன. முக்கியமாய் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது ரத்தக் கொதிப்பை அண்ட விடாது. ஏனெனில் பொட்டாசியம் ரத்தத்தில் உள்ள சோடியம் அளவைக் கட்டுபடுத்தும்.

ஆரஞ்சு பழத்தில் விட்டமின் சி அதிகம் உள்ளது. அது ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவினைக் குறைக்கும். சோயா மில்க்கில் அதிகமாய் புரோட்டின் உள்ளது. 

உடலுக்கு தேவையான போஷாக்கினை அளித்து அதிக கலோரிகளை எரிக்கிறது. பட்டை சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட். நச்சுக்களையும் கழிவுகளையும் வெளியேற்றி, ரத்தத்தை சுத்தம் செய்கிறது.

வாழைப்பழம் ஆரஞ்சு, தோலை நீக்கி துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் அரைத்த பின் அதனுடன் சோயா மில்க் சேர்க்கவும். இதனை கிளாஸில் ஊற்றி அதனுள் பட்டைபொடியை சேர்த்து கலந்து பருகவும்.

இந்த பானத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் உடலில் கொலஸ்ட்ரால் சேராது. மேலும் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருப்பவர்களுக்கு நாளடைவில் குறைந்து விடும்.

உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தும் ஜூஸ்



* நம் உடலில், 'ஃப்ரீ ராடிக்கல்ஸ்’ என்ற நச்சுப் பொருள் உருவாகிறது. இதுவே பல்வேறு நோய்களுக்குக் காரணம். கிவி பழத்தில் ஆன்டி ஆக்சிடன்ட் என்று அழைக்கப்படும் வைட்டமின்களான ஏ, சி, ஈ சத்துக்கள் உள்ளதால், ஃப்ரீ ராடிக்கல்ஸை அழித்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.

* ஆரஞ்சுப் பழத்தைப் போன்றே இதிலும் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், முதுமைக் கால கண் நோய்கள், தோல் நோய்களைப் போக்கும்.

* தினமும் ஒரு கிவிப் பழத்தைச் சாப்பிட்டு வந்தாலே, அன்றைய தினத்துக்குத் தேவையான வைட்டமின் சி கிடைத்துவிடும். வைட்டமின் சி நம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலம் மேம்பட பெரிதும் அவசியம். ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறு நீங்கி, சுவாசம் சீரடையும்.

* இதில் உள்ள வைட்டமின் ஈ சத்து, சருமம் இளமைப் பொலிவுடன் இருக்கவும் கருவுறுதலுக்கான வாய்ப்பையும் அதிகரிக்கிறது.

* ஃபோலிக் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இதில் நிறைவாக இருப்பதால், குழந்தைகளின் மூளை செல்களின் வளர்ச்சியைத் தூண்டும். ஞாபக சக்தி அதிகரிக்கும்.

* வாழைப் பழத்தில் உள்ளதைவிட, பொட்டாசியம் தாது உப்பு அதிக அளவில் உள்ளது. மேலும், இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் பாலிபீனால்கள் இதய தசை மற்றும் ரத்தக் குழாய்களைப் பாதுகாத்து, மாரடைப்பு வராமல் தடுக்க உதவும்.

* நார்ச் சத்துக்கள் நிறைந்திருப்பதால் மலச்சிக்கலைத் தீர்க்கும். ரத்தத்தில் உள்ள தேவையற்ற கொலஸ்ட்ராலை நீக்கும்.

* சர்க்கரைக் குறியீடு இதில் குறைவாக இருப்பதால், ரத்தத்தில் சர்க்கரை அளவை, கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

ரத்தத்தில் உள்ள தேவையற்ற கொலஸ்ட்ராலை நீக்கும் கிவிப் பழம்!


தாயைப் போல பிள்ளை என்று நம் ஊரில் பழமொழியே இருக்கிறது. ஒரு தாயின் குணங்கள், உருவம் எல்லாம் குழந்தைக்கும் ஒத்திருக்கும் என சொல்வார்கள்.

அதே போல் கர்ப்பகாலத்தில் அம்மா சாப்பிடும் உணவு, இருக்கும் மனோ நிலை ஆகியவற்றைக் கொண்டே ஒரு குழந்தையின் எதிர்காலம் இருக்கும் என்றும் சொல்வார்கள்.

வாஷிங்டன்னில் இருக்கும் ஜார்ஜ்டவுன் யுனிவர்சிட்டி மெடிக்கல் சென்டர் என்ற ஆராய்ச்சி நிறுவனத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கும் ஆராய்ச்சியில் ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கு தந்தையும் காரணம் என்றே கூறுகின்றனர்.

புரியவில்லையா? ஒரு தாயிடமிருந்து குணங்கள், உறுப்பு அமைப்புகள், செல்களின் செயல்பாடுகள் ஆகியவற்றிற்கான ஜீன்கள், குழந்தைகளுக்கும் அடுத்தடுத்து வரும் சந்ததியினருக்கும் கடத்தப்படுகிறது.இது தெரிந்த விஷயம்தானே !

ஆனால் இது மட்டும் ஒரு குழந்தையின் வளர்ச்சியை நிர்ணயிக்காது.அப்பாவின் வயது ,பழக்க வழக்கங்கள், குடிப்பழக்கம், சுற்றுப்புறச் சூழ்நிலைக் கொண்டும் அந்த குழந்தையின் பிறப்பு அமைகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஒரு அப்பாவின் குண நலன்கள், மற்றும் பழக்க வழக்கங்களுமான ஜீன்கள் அப்படியே அவரின் அடுத்தடுத்த தலைமுறைக்கும் கடத்தப்படுகிறது.

உதாரணத்திற்கு... வயது அதிகம் ஆனவுடன் ஒரு ஆணிற்கு குழந்தை பிறந்தால், மூளைக் கோளாறு, ஆட்டிஸம் போன்ற மூளைத் தொடர்பான நோய்களோடு குழந்தை பிறக்கும் வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர்.

ஒரு ஆண் தனது பருவ வயதில் அளவான சத்துமிக்க , கொழுப்பு குறைந்த உணவுகள் உண்டால், எதிர்காலத்தில் அவனுக்கு பிறக்கப்போகும் மற்றும் அடுத்தடுத்த சந்ததியினருக்கு இதய நோய்கள் வரும் வாய்ப்பில்லை எனறு கூறுகின்றனர்.

ஒரு ஆண் அதிக மன அழுத்ததோடு, இருந்தால் அவனுக்கு பிறக்கப் போகும் குழந்தையின் மன நிலையும் பாதிக்கப்படும் என்கின்றனர் ஆய்வாளர்கள். 

சில குடும்பங்களில் அப்பா மகன்களுக்கு ஒரே மாதிரியான குணங்கள், செயல்கள் இருப்பதை பார்த்திருப்போம். காரணம் மரபணு, இந்த வகையில் மகன், பேரன் என கடத்தப்படுவதால்தான்.

தந்தைக்கு குடிப்பழக்கம் இருந்தால், பிறக்கும் குழந்தை எடை குறைந்து பிறக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆகவே எடை குறைந்து குழந்தை பிறந்தால்,அது தாயின் போதிய ஊட்டச் சத்து இல்லாததாலோ, அல்லது வேறு காரணங்களோ இருக்கத் தேவையில்லை. தந்தையின் குடிப்பழக்கமும் காரணமாக இருக்கலாம்.

எனவே ஒரு குழந்தையின் தீய, நல்ல குணத்திற்கு அவள் அம்மாவினையே குறை கூறாமல். தந்தையும் காரணமாக இருக்கலாம் என தெரிந்து கொள்ளுங்கள். 

நம் குழந்தைகளுக்கு நாம்தான் ரோல் மாடல் என்பதை எப்பவும் மறக்காதீர்கள். நாம் நல்லதை விதைத்தால், குழந்தைகள் நல்லதையே அறுவடை செய்து இந்த உலகத்திற்கு தருவார்கள் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.


தந்தையைப் போலவே பிள்ளை!!...அறிவியல் ஆராய்ச்சி சொல்கிறது


Health Benefits of Papaya - Health Tips in Tamil Health Benefits of Papaya - Health Tips in Tamil. Did you know papaya is good for diabetics and also helps in weight loss? - Top 12 health benefits of papaya you should be aware of.

Health Benefits Of Papaya - Health Tips in Tamil


மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையில் முதுகு வலி என்பது ஏராளமானோருக்கு இருக்கும் ஓர் பொதுவான பிரச்சனையாகிவிட்டது. முதுகில் ஏற்படும் வலியை சாதாரணமாக நினைத்துவிட்டால், அதனால் நாளடைவில் பெரும் பிரச்சனையை சந்திக்க வேண்டியிருக்கும்.

எனவே ஆரம்பத்திலேயே அதனை சரிசெய்து கொள்ள வேண்டும். இப்போது முதுகு வலியை சரிசெய்வற்கான சில எளிய சிகிச்சைகள் முறைகளை பார்க்கலாம்.

* உங்களுக்கு முதுகு வலி கடுமையாக இருக்கும் போது, குப்புறப்படுத்து, கைகளை உடலை ஒட்டி வைத்துக் கொண்டு, தலையாணையை ஒரு பக்கமாக திருப்பி வைத்துக் கொள்ளுங்கள். இந்நிலையால் முதுகு வலியில் இருந்து நல்ல நிவாரணம் கிடைப்பதை நீங்கள் உணரலாம்.

* நாற்காலியில் உட்காரும் போது சாய்ந்து உட்காராமல், தோள்பட்டை நேராக இருக்கும் வண்ணம் நிமிர்ந்து பார்க்கும் படியான நிலையில் அமர வேண்டும்.

நாற்காலியில் அமரும் போது, கால் மேல் கால் போட்டு உட்கார்வதைத் தவிர்த்து, கால்கள் 90 டிகிரியில் இருக்கும் வண்ணம் அமருங்கள். மேலும் இப்படி உட்காரும் போது, முதுகுத்தண்டுவடம் நேராகும். இதனால் முதுகு வலி வருவதைத் தடுக்கலாம்.

* தினமும் ப்ளான்க் பயிற்சியை மேற்கொண்டு வருவதன் மூலம் முதுகு வலியைத் தடுக்கலாம். அதற்கு தரையில் ஒரு துணியை விரித்து, அதன் மேல் குப்புறப் படுத்து, முழங்கை மற்றும் பெருவிரலை தரையில் ஊற்றி, உடலை வளைக்காமல் நேராக மேலே தூக்க வேண்டும். இப்பயிற்சியை செய்து வந்தால், முதுகு வலி நீங்குவதோடு, அடிவயிற்றில் உள்ள கொழுப்புக்களும் கரையும்.

* எவ்வளவு வேலை இருந்தாலும், கம்ப்யூட்டர் முன் நீண்ட நேரம் அமர்வதைத் தவிர்த்திடுங்கள். 30 நிமிடங்களுக்கு ஒருமுறை சிறு வாக்கிங் மேற்கொள்ளுங்கள். இதனால் முதுகு வலியைத் தவிர்க்கலாம்.

முதுகு வலியை குறைக்கும் வழிகள்


உலகளவில் ஏராளமான மக்களை வாட்டி வரும் சர்க்கரை நோய்க்கு இயற்கையோடு இணைந்த எளிய தீர்வுகளை மருத்துவர்கள் கூறுகின்றனர். 

பள்ளிக் குழந்தைகளையும் சர்க்கரை நோய் தாக்குகிறது என்பது தான் இப்போதைய அபாயம். நாம் உண்ணும் உணவின் ஒரு பகுதியை குளுக்கோஸ் எனும் சர்க்கரையாக செரிமான மண்டலம் மாற்றுகிறது.

இந்த குளுக்கோஸ் ரத்தத்தில் கலந்து உயிரணுக்களுக்கு சக்தி அளிக்கிறது. குளுக்கோஸை உயிரணு ஏற்றுக் கொள்ள அதனுடன் கணையம் சுரக்கும் இன்சுலின் என்னும் ஹார்மோன் அவசியம்.

உடலில் உள்ள குளுக்கோஸைக் கையாளும் அளவுக்கு கணையம் இன்சுலினை உற்பத்தி செய்கிறது. இந்த செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படுவதைத் தான் சர்க்கரை நோய் என்கிறோம்.

தற்போது சர்க்கரை நோய் பள்ளிக் குழந்தைகளையும் தாக்குவது தெரியவந்துள்ளது. தொடர்ந்து மனஅழுத்தம், அதிக எடை, உடற்பயிற்சியின்மை போன்ற காரணங்களால் குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் ஏற்படுகிறது. இந்த வகை சர்க்கரை நோயுள்ள பலருக்கு எந்த அறிகுறியும் தோன்றாது.

ஒரு சிலருக்கு அதிகளவு தாகம், மங்கலான பார்வை, தோல் ஆகியவற்றில் தொற்று நோய் தாக்குதல், காயம் ஆறுவதில் தாமதம், எரிச்சல், கைகால்கள் மரத்துப் போதல், தொடு உணர்ச்சியின்மை போன்ற அறிகுறிகள் தோன்றலாம்.

இது போன்ற அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதிக்க வேண்டும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் சர்க்கரை நோயை கண்டு கொள்ளாமல் விடுவதால் வயிற்றில் வளரும் குழந்தை பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடுகிறது. வழக்கமாக கர்ப்ப காலத்தில் சர்க்கரையின் அளவில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்தப் பிரச்சனை பிரசவத்துக்குப் பின்னர் சரியாகி விடும். கர்ப்பகாலத்தில் பெண்களின் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கண்காணிக்க வேண்டும்.

சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் விடும் பட்சத்தில், குழந்தைகளுக்கு மனநல குறைபாடு ஏற்படலாம். இதயம், மூளை உள்ளிட்ட உறுப்புகளும் பாதிக்கப்படலாம். மூளை வளர்ச்சி பாதிக்கப்படும் வாய்ப்பும் உள்ளது.

உடல் உழைப்புக்கு தகுந்த சமச்சீர் உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு மூன்று வேளை சரியான நேரத்துக்கு உணவு சாப்பிடுவது அவசியம். நேரம் தவறி சாப்பிடுவதும் தவறு.

நார்ச்சத்து உள்ள உணவுகள் அதிகம் எடுத்துக் கொள்வது அவசியம். கொழுப்பு உணவுகளை கண்டிப்பாக தவிர்க்கவும். உடல் எடையை குறைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். 

சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க மருந்து, உணவுக் கட்டுப்பாட்டுடன் உடற்பயிற்சியும் அவசியம். உடற்பயிற்சியானது இதயத்தையும் ரத்தக் குழாய்களையும் சீராக இயங்க வைத்து ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும்.

சர்க்கரை நோய் இல்லாதவர்கள் இது போன்ற பழக்கங்களை நடைமுறைப்படுத்திக் கொள்வதன் மூலம் நோய் தாக்கத்தில் இருந்து பாதுகாத்து கொள்ள முடியும்.

சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவரின் அறிவுரைப்படி மட்டுமே உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி மற்றும் மருந்துகளை பின்பற்ற வேண்டும். இல்லையெனில் எதிர் விளைவுகள் ஏற்படலாம்.

குழந்தைகளை தாக்கும் சர்க்கரை நோய்