நமீதா இல்லாத பிரசாரம் நடிகை விந்தியா காரணம்?
திருச்சியில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில், முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில், நடிகை நமீதா, அ.தி.மு.க.,வில் இணைந்தார். அவரை தேர்தல் பிரசாரத்திற்கு அனுப்பி வைக்க, கட்சித் தலைமையும் திட்டமிட்டிருந்தது. அமைச்சர்கள், மாவட்ட செயலர்கள், அ.தி.மு.க., வேட்பாளர்கள் பலரும், நமீதா பிரசாரத்தை விரும்பினர்.ஆனால், தலைமையில் இருந்து அவருக்கு, 'கிரீன் சிக்னல்' கிடைக்கவில்லை. இதனால், இந்த தேர்தலில் தனக்கு பிரசாரம் செய்ய வாய்ப்பு கிடைக்காததால் நமீதா ஏமாற்றம் அடைந்தார்.
இதுகுறித்து, அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:கட்சியில் நமீதா இணைந்ததும், நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் அவரை சேர்க்கவில்லை. இந்த தேர்தலில், நடிகை விந்தியா பிரசாரம் முதன்மை வகித்தது. தினமும், 10 கூட்டங்கள் வரை அவர் பேசினார்.அவரது யதார்த்தமான பேச்சு, தொண்டர்களை கவர்ந்தது. நமீதாவும் பிரசாரத்தில் ஈடுபட்டால், அவர் தனக்கே உரித்தான பாணியில், 'மச்சான்ஸ்' என, வாக்காளர்களை அழைத்து, பரபரப்பை ஏற்படுத்தி விடுவார். இதனால், நமீதாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடும்.எனவே அவரை பிரசாரத்திற்கு அனுப்பாமல் இருப்பதற்காக, விந்தியா தரப்பில் காய் நகர்த்தப்பட்டுள்ளது. மன்னார்குடியை சேர்ந்த முக்கிய புள்ளி ஒருவர் இதற்கு உதவியுள்ளார்.இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
Labels:
politics
No comments :
Post a Comment