அனிருத் பாடல்கள் இனி சோனிக்கே சொந்தம்
அனிருத் படங்களுக்கு இசையமைப்பதுடன் அவ்வப்போது தனிப்பாடல்களையும் வெளியிட்டு வருகிறார்.
அப்படி அவர் வெளியிட்ட தனிப்பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. எனக்கென யாருமில்லையே பாடல் இன்னும் இளைஞர்களை சுண்டி இழுக்கிறது.
அனிருத் இப்படி இசையமைக்கும் தனிப்பாடல்கள் சோனி நிறுவனம் வெளியிடுவதற்கான ஒப்பந்தத்தில் அனிருத் கையெழுத்திட்டுள்ளார். இந்த ஒப்பந்தத்தால் பல கோடி ரூபாய் அனிருத்துக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.
சோனியுடனான ஒப்பந்தத்தால் உற்சாகமடைந்திருக்கும் அனிருத், இனி வித்தியாசமான இசையை தொடர்ந்து ரசிகர்களுக்கு அளிப்பேன் என கூறியுள்ளார்.
Labels:
News
,
other
No comments :
Post a Comment