எனக்கு ஏதேனும் நடந்தால் ஸ்டாலினே முதல்வர் : கருணாநிதி பேட்டி
வயது காரணமாகவோ அல்லது உடல்நிலை காரணமாகவோ, எனக்கு ஏதேனும் நேர்ந்தால் ஸ்டாலினே முதல்வர் ஆவார் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
ஒரு தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு கருணாநிதி சமீபத்தில் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இந்த முறையும் திமுக வெற்றி பெற்று, நான் முதலமைச்சராக பதவி ஏற்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் விரும்புகிறார். தான் முதல் அமைச்சராக வேண்டும் என்று அவர் கருதவில்லை.
இதுவரை நான் போட்டியிட்ட எந்த தேர்தலிலும் நான் தோற்கவில்லை. ஒருவேளை இயற்கையாக எனக்கு ஏதேனும் நடந்துவிட்டால் ஸ்டாலினே தமிழக முதல்வர் ஆவார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறைக்கு சென்றது மக்கள் மனதில் நன்றாக பதிந்துள்ளது. மூன்றாவது அணிக்கு மக்கள் ஒருமுறை வாய்ப்பு அளித்தனர். ஆனால், தற்போது அதில் பிளவு ஏற்பட்டுவிட்டது” என்று அவர் கூறினார்.
இதுவரை திமுகவில் தனக்கு பின்னால் யார் முதல்வர் வேட்பாளர் என்று கருணாநிதி கூறியதில்லை. தற்போது ஸ்டாலினை அவர் கூறியிருப்பது, தளபதி விசுவாசிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Labels:
other
,
politics
No comments :
Post a Comment