பாட்டிக்கு டாட்டா காட்டிய திமுக - அதிமுக கழகங்கள்
ஒரே நேரத்தில், திமுக - அதிமுக தேர்தல் விளம்பர படங்களில் நடித்த கஸ்தூரி பாட்டிக்கு இரண்டு கழகங்களும் டாட்டா காட்டி விடை கொடுத்துவிட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, டிவியை ஆன் செய்தாவே, ஒரு வயதான பாட்டி தோன்றி, எனக்கு பெத்த புள்ள சோறு போடல, ஆனால், எனக்கு சோறு போட்ட தெய்வம், புரட்சித் தலைவி அம்மா தான் என்று அதிமுக விளம்பரம் வெளியாகும்.
அடுத்த சில நிமிடங்களில், இதே பாட்டி, வானத்துல பறக்குறவங்களுக்கு நம்மளுடைய பிரச்னை எப்பங்க தெரியும்? மக்களைப் பற்றியே கவலைப்படாத ஆட்சி இனி எதுக்குங்க? போதும்மா போதும் என திமுக விளம்பரத்தில் தோன்றி கலக்கும் இந்த பாட்டி.
திமுக - அதிமுக தயாரித்த தேர்தல் விளம்பர படத்தில் இந்த ஒரே பாட்டி நடித்து வெளியானதை ஃபேஸ்புக், சமூகவலைதளங்களிலும் போட்டு கலாய்த்தனர் யூத் வட்டாரங்கள்.
எதற்குமே வெக்கடப்படாத திமுக, அதிமுகவும், இந்த விஷயத்தில் திடீரென வெட்கம் வந்து, இந்த விளம்பர படத்தை உடனே நிறுத்திவிட்டனர். கஸ்தூரி பாட்டிக்கும் டாட்டா காட்டிவிட்டனர். ஐய்யோ பாவம் கஸ்தூரி பாட்டி. அதைவிட பாவம் தமிழக வாக்காளர்கள்.
Labels:
News
,
other
No comments :
Post a Comment