சிங்கத்துக்கே இப்படியொரு சிக்கலா...?
நன்றாக நடிக்கிறார், நற்பணிகள் செய்கிறார், நல்லவிதமாக நடந்து கொள்கிறார். போதாததற்கு ஒரு படத்திற்கு ஒன்பது படங்களுக்கான உழைப்பை தருகிறார்.
இருந்தும் அஜித், விஜய் போல் அசட்டையாக ஒரு வெற்றியை பெற சூர்யா போராட வேண்டியிருக்கிறது.
2013 -க்குப் பிறகு கடந்த 3 வருடங்களில் ஒரு வெற்றியைக்கூட சூர்யா தரவில்லை. சிங்கம் இரண்டாம் பாகத்தையும் எடுத்துவிட்டால் வருடங்களின் எண்ணிக்கை கூடும். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 24 படமும் பல இடங்களில் மண்ணை கவ்வியுள்ளது. கைவசம் இருக்கும் ஒரே நம்பிக்கை எஸ் 3.
எஸ் 3 படத்துக்குப் பிறகு யார் இயக்கத்தில் நடிப்பது? என்ன மாதிரி கதையை தேர்வு செய்வது? என்ற மாபெரும் குழப்பத்துக்கு சூர்யா ஆளாகியிருக்கிறார். சுமாரான கதையில் சுமாரான நடிப்பை தரும் அஜித், விஜய் வெற்றி பெறும்போது நமக்கு மட்டும் ஏன் இந்த மாதிரி என்ற குடைச்சலும் சூர்யாவை சூழந்திருக்கிறது.
இதுக்கு பேருதான் அதிர்ஷ்டம்ங்கிறது.
Labels:
cinema news
,
other
No comments :
Post a Comment