ஓட்டு போட்டுவிட்டு பேட்டியளிக்காமல் நழுவிய விஜயகாந்த்
தேமுதிக-மக்கள் நல கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதா மற்றும் மகன்களுடன் சென்னை சாலிகிராமத்தில் வாக்களித்தார். இதையடுத்து பேட்டிக்காக காத்திருந்த செய்தியாளர்களுக்கு விஜயகாந்த் பேட்டியளிக்காமல் சென்றார்.
விஜயகாந்த் தேமுதிக கட்சியின் தலைவர், அவர் இருக்கும் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர். இந்நிலையில் வாக்களித்துவிட்டு அவர் பேட்டியளிப்பார் என செய்தியாளர்கள் காத்திருந்தனர். ஆனால் அவர் பேட்டியளிக்காமல் போய்விட்டார்.
அதிமுக, திமுக, பாமக கட்சிகளின் முதல்வர் வேட்பாளர்கள் செய்தியாளர்களை சந்தித்து தங்கள் கருத்துக்களை கூறினார்கள். ஆனால் விஜயகாந்த் பேட்டியளிக்காமல் சென்றுவிட்டார்.
Labels:
other
,
politics
No comments :
Post a Comment