Ajith Rajini Kamal Cast Their Votes Early Morning - Techsatish

Share this :
No comments

சென்னை: 15 வது சட்டப் பேரவைக்கான தேர்தல் இன்று காலை தொடங்கியது. வழக்கத்துக்கு மாறாக காலை 8 மணிக்குள்ளாகவே பெரும்பாலான விஐபி வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்திவிட்டனர். நடிகர் ரஜினிகாந்த் தனது வாக்கை சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் காலை 7.10 க்கெல்லாம் செலுத்திவிட்டார். 

அவரிடம் செய்தியாளர்கள் கருத்துக் கேட்க முயன்றபோது, தேர்தல் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.

நடிகர் அஜீத் மற்றும் அவர் மனைவி ஷாலினி இருவரும் 7.15 மணிக்கு தங்கள் வாக்குகளை திருவான்மியூரில் உள்ள வாக்குச் சாவடியில் பதிவு செய்தனர். வாக்குப் பதிவு துவங்கிய உடனேயே இருவரும் வாக்களித்துவிட்டது குறிப்பிடத்தக்கது. 

நடிகர் கமல் ஹாஸனும் தனது வாக்கை தேனாம்பேட்டை வாக்குச் சாவடியில் பதிவு செய்தார். நடிகர் சிவகார்த்திகேயன் வளசரவாக்கத்தில் உள்ள ஏஞ்சல் பள்ளியில் தனது வாக்கை காலை 7.30 மணிக்குச் செலுத்தினார். 

அசோக் நகரில் உள்ள பள்ளியில் தனது வாக்கை 8 மணிக்குப் பதிவு செய்தார் நடிகர் ராகவா லாரன்ஸ். நடிகர் ஜீவா, கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பல விஐபி வாக்காளர்களும் தங்களின் வாக்குகளை காலையிலேயே செலுத்திவிட்டனர். அதுவும் வாக்குப் பதிவு தொடங்கிய ஒரு மணி நேரத்துக்குள்ளாகவே என்பது குறிப்பிடத்தக்கது.


No comments :

Post a Comment