புனித ஸ்தலமான காசியின் பல்வேறு முகங்கள்!.... ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் பிணங்கள்....

Share this :
No comments


காசி, வாரணாசி, பெனாரஸ் எனப் பல பெயர்களில் அழைக்கப்படும் காசிக்கு முகங்களும் நிறைய உண்டு. அது வயதானவர்களுக்கு முக்தி அடையும் ஸ்தலமாகவும், யாத்ரிகர்களுக்கு புனித நகரமாகவும், சுற்றுலாப் பயணிகளுக்கு ஆச்சரியங்கள் அளிக்கும் இடமாகவும் பல்வேறு முகங்களை கொண்டது.

பழமையான நகரம்

பெனாரஸ் என்றும் காசி என்றும் அழைக்கப்படும் வாரணாசி, தொடர்ச்சியாக மக்களின் வசிப்பிடமாக விளங்கும் உலகின் பழமையான நகரங்களுள் ஒன்றாகும். இங்கு கங்கை நதியில் ஒரு முங்கு முங்கி எழுந்தால் செய்த பாவங்கள் அனைத்திலிருந்தும் விமோச்சனம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்.

முக்தியின் கதை

அசுவமேத யாகம் செய்த சூர்ய வம்சத்தை சேர்ந்த சகரன் எனும் மன்னனின் இறந்துபோன மகன்களுக்கு முக்தி அளிப்பதற்காக கங்கா தேவி பூமியில் பிறப்பெடுத்து கங்கை நதியாக ஓடுவதாக புராணம் கூறுகிறது. அன்றிலிருந்து ஏராளமானோர் கங்கையில் அஸ்தியைக் கரைத்து தங்கள் முன்னோர்களின் ஆன்மாக்களை முத்தியடையச் செய்து வருகின்றனர்.

புனித நீராடல்

கங்கை நதியில் ஒரு முங்கு முங்கி எழுந்தால் செய்த பாவங்கள் அனைத்திலிருந்தும் விமோசனம் கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது. யாத்ரீகர்கள் பலர் சூரியோதயத்தின் போதும், சூரிய அஸ்த்தமனத்தின் போதும் இந்நதியில் புனித நீராடுகின்றனர்.

படித்துறைகள்

கங்கை நதிக்கு இட்டுச் செல்லும் படிக்கட்டுகள் போன்ற அமைப்பினாலான இந்த படித்துறைகள் பல்வேறு கோயில்களைக் கொண்டு, சமயம் சார்ந்த அனைத்து நடவடிக்கைகளும் நடைபெறும் முக்கிய மையமாகத் திகழ்கின்றன. இங்கு மொத்தம் 84 படித்துறைகள் இருக்கின்றன.

மணிகர்னிகா படித்துறை

மணிகர்னிகா படித்துறை தாம் வாரணாசியில் இறப்பு சுற்றுலா என்றழைக்கப்படும் காட்சியை வழங்குகிறது. இங்கு திறந்தவெளியில் சிதை மூட்டப்படுவதைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கூடுகின்றனர். கணேசர் கோயில் மற்றும் மஹா விஷ்ணுவின் பாதச்சுவடுகளைக் கொண்டுள்ள கல்பலகையான சர்ன்படுகா ஆகியவை இதன் அருகில் அமையப்பெற்றுள்ளன.

கியூவில் நிற்கும் பிணங்கள்

மணிகர்னிகா படித்துறையில் சில நேரம் பிணங்கள் அதிகமாக எரியூட்டப்பட இருக்கின்ற சந்தர்பத்தில் வரிசையில் நின்று காத்திருக்க வேண்டும். இறந்த பின்பும் கியூவில் நிற்கும் அவலத்தை என்னவென்று சொல்வது?!

பாம்பின் மீது நடனம்

காளிங்கன் என்ற பாம்பின் மீது நடனமாடிய ஸ்ரீ கிருஷ்ணரின் லீலைகள் சடங்காக கடைபிடிக்கப்படும் காட்சி.

மால்வியா பாலம்

வாரணாசியில் கங்கை நதிக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள மால்வியா பாலம் டஃப்ஃபரின் பாலம் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. 1887-ஆம் ஆண்டே கட்டப்பட்ட இந்தப் பாலம் ஒரு இரண்டடுக்கு பாலம் என்பது கூடுதல் சிறப்பு. அதாவது கீழ் தளத்தில் ரயில் செல்லும்படியாகவும், மேல் தளத்தில் மற்ற வாகனங்கள் செல்லும்படியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆணிப்படுக்கை

ஆணிப்படுக்கையில் சர்வ சாதாரணமாக படுத்திருக்கும் யோகி.

மிதக்கும் பாலம்

காசியில் கங்கை நதியின் மீது உருவாக்கப்பட்டிருக்கும் மிதக்கும் பாலம்.

பெனாரஸ் பான்

இந்திய முழுவதும் பெனாரஸ் பான் என்பது பிரபலம். நீங்கள் வாரணாசி வரும்போது பெனாரஸ் பானை சுவைக்க தவறிவிடாதீர்கள்.


ஆற்றில் மிதக்கவிடப்படும் அகல் விளக்குகள்!

நம்ம ஊர் திருவிழாக்களில் எலுமிச்சை பழத்தில் விளக்கேற்றி ஆற்றில் விடும் கட்சியை நம்மில் சிலர் பார்த்திருக்கலாம். அதேபோலத்தான் காசியிலும் தேவ் தீபாவளி பண்டிகையின் போது ஆயிரக்கணக்கான அகல் விளக்குகள் கங்கை நதியில் மிதக்கவிடப்படுகின்றன. அப்போது படித்துரைகளோடு சேர்ந்து கங்கை நதியும் ஒளிவெள்ளத்தில் மிதக்கும்!

No comments :

Post a Comment