Bhakthi Padalgal Peppers TV



கர்மவினைகள்... கற்பனையா?
சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்
? ஏற்றங்கள் மிகும்போது 'எல்லாம் எனது சாதுர்யத்தால் விளைந்தது’ என்று மார்தட்டிக்கொள்வதும், தோல்விகளைச் சந்திக்கும்போது, 'எல்லாம் என் தலையெழுத்து! விதியை மாற்றமுடியுமா?’ என்று விதியின்மீது பாரத்தைச் சுமத்தி அங்கலாய்ப்பதும் வழக்கமாகிவிட்டது.

நீங்கள் சொல்லுங்கள்... ஒருவரது இன்ப- துன்பங்களுக்கும், வெற்றி- தோல்விகளுக்கும் கர்மவினைகள்தான் காரணமா? அல்லது, கர்ம வினைகள் என்பதெல்லாம் வெறும் கற்பனையா?

- தி.காசிவிஸ்வநாதன், தூத்துக்குடி

முதல் கோணம்:

கர்மவினை, அதிர்ஷ்டம், தெய்வம், தலையெழுத்து, விதி, பிராப்தம், கொடுத்து வைத்தவன், பாவம் பண்ணியவன், புண்ணி யம் செய்தவன், பூர்வ புண்ணியம், கிரகக் கோளாறு ஆகிய அத்தனையும் முற்பிறவி களில் சேமித்த செயல்பாட்டைச் சுட்டிக் காட்டுகின்றன. அதை 'கர்ம சித்தாந்தம்’ என்கிறது சாஸ்திரம்.

'மீண்டும் பிறப்பு, மீண்டும் இறப்பு, மீண்டும் கருவறையில் தோன்றுதல்... இப்படி பிறப்பு- இறப்பு எனும் சுழற்சியில் அகப்பட்டுத் தவிக்கிறார்கள்’ என்கிறார் ஆதிசங்கரர் (புனரபி ஜனனம், புனரபி மரணம், புனரபிஜனனீஜடரே சயனம்). அந்தப் பிறப்புக்குக் காரணம் கர்மவினை என்றும் கூறுகிறார். முற்பிறவியில் செய்த செயல்பாடுகளை, அதாவது இன்பம், துன்பம் இரண்டையும் உணர திரும்பவும் ஒரு பிறவி தேவைப்படுகிறது. ஆகையால், சேமித்த செயல்பாட்டை அனுபவிக்க பிறவி எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. 'ஆடைகள் கிழிந்து அல்லது நைந்துபோனால் அதைக் களைந்து புது ஆடைகளை ஏற்போம். ஆடை போன்ற உடல் தளர்ந்துபோனால், அதாவது உடலானது செயல்படும் தகுதியை இழந்துவிட்டால், அதைத் துறந்துவிட்டுப் புது உடலை ஏற்கவேண்டியது வரும்’ என்று கண்ணன் சொல்வான் (வாசாம்சி ஜீர்ணானியதாவிஹாய:....).

இப்படி, முற்பிறவி கர்மவினையானது மீண்டும் ஓர் உடலெடுக்கக் காரணம் ஆகாமல் இருக்கவேண்டும் எனில், கர்மவினையை உருத் தெரியாமல் கரைத்துவிடவேண்டும். அப்போது அதை அனுபவிக்க இடமில்லாததால், மறுபிறவி தேவையற்றுப் போகும். கர்ம வினையைக் கரைக்க 'தவம்’ ஒன்றே கைகொடுக்கும். நாம் செய்த கர்ம வினையை நாமே செயல்பட்டுத் தவமிருந்து கரைக்கவேண்டும்.

? 'கடவுள் துணையிருக்க, விதி என்ன செய்துவிடும்?’ என்று பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்களே?

பாவத்தைக் கரைக்க கடவுள் உதவ மாட்டார். அவருக்கு அதில் பொறுப்பு இல்லை. கடவுள் தன்னிச்சையாகச் செயல்பட மாட்டார். அவரவர் கர்மவினைக்குக் கட்டுப்பட்டு, அதற்கேற்ப உதவியளிப்பார். ஆகவே, 'கடவுளைச் சரணடைந்துவிடு! அவர் எல்லா கர்மவினைகளையும் அழித்துவிடுவார்’ என்பது சிந்தனைக்குப் பொருந்தாத ஒன்று.

ஆபத்பாந்தவன், அனாதரக்ஷகன், கருணைக் கடல் கடவுள்; தான் படைத்த உயிரினங்களைத் துயரத்தில் ஆழ்த்த அவர் விரும்பமாட்டார்; தவம் செய்யாமலும், கர்மவினையைக் கரைக்க முயற்சிக்காமல் இருந்தாலும்கூட, கருணைக்கடலான கடவுள் தாமாகவே முன்வந்து நம் பாவங்களைக் கரைத்துக் கரையேற்றிவிடுவார் எனும் வாதம், நடைமுறைக்குப் பயனளிக்காது. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது. 'நீ துயரத்தை ஏற்கும் செயலில் தன்னிச்சையாக ஈடுபடுவாய். ஆனால், உன்னைத் துயரம் தொடாமல் காப்பாற்ற, தன்னிச்சையாகக் கங்கணம் கட்டிக் கொண்டிருப்பவர் கடவுள்’ என்ற எண்ணம், அறியாமையின் அடையாளம். அவர் அப்படிச் செயல்படுவது உண்மையாக இருந்தால், எந்த உயிரினமும் துயரத்தைச் சந்திக்க வேண்டியது இருக்காது. பெரும்பாலான உயிரினங்கள் துயரத்தை ஏற்று வாடுகின்றன.

சொற்பொழிவில் உதிரும் விளக்கங்கள் எல்லாம், அதைச் செய்பவருக்கு வேலை வாய்ப்பை ஈட்டித் தரும்; கேட்பவரின் துயரத்தை அது துடைக்காது. கேட்டால் மட்டுமே பாவம் தொலையாது. செயல்பட்டுத் தவமிருந்து கரைத்தால் மட்டுமே பாவம் தொலையும். 'உனது செயல்பாட்டில் நீ சேமித்த கர்மவினையை, உனது முயற்சியில் நீதான் அழிக்க வேண்டும்’ என்பது நியதி. இந்த நியதிக்கு மாறான விளக்கங்கள் மனத்துக்குப் பிடித்தமாக இருந்தாலும், விரும்பிய பலன் அவற்றில் இருக்காது.

? எனில், கர்ம வினைகளை அனுபவித்துதான் கரைக்க வேண்டுமா?

ஆமாம்! 'அனுபவிக்காமல் கர்ம வினை கரையாது’ என்கிறது சாஸ்திரம் (நாபுக்தம் க்ஷீயதெ கர்ம கல்ப கோடி சதைரபி). 'தவறான செயலில் ஈடுபட மனம் காரணமானது. தவறு செய்த மனம் தண்டனையை ஏற்கவேண்டும். தவற்றை நினைத்து நினைத்து மனம் நொந்து நொந்து பாவம் கரையவேண்டும்’ என்று சாஸ்திரம் விளக்குகிறது (பச்சாத்தாபம் ப்ராயச்சித்தம்).

'மனத்துடன் இணைந்து ஆன்ம வடிவில் கடவுள் இருக்கிறார். நீ தவறு இழைக்கும்போது, அவர் உன்னைத் தடுக்கவில்லை. நீ கொடை வள்ளலாகச் செயல்படும்போதும் அவர் உன்னைத் தடுக்கவில்லை. அவர் உன்னைத் தூண்டவும் மாட்டார்; தடுக்கவும் மாட்டார். சாட்சியாக எச்சரிக்கையுடன் இருப்பார். அவர் கண்காணிப்பாளர். சிந்தனையைத் திருப்பிவிடமாட்டார். கர்மவினை சிந்தனையைத் தூண்டிவிடும். கர்மவினை தனது விருப்பத்துக்கு உகந்த சிந்தனையை உருவாக்கும். ஆராய்ச்சிகள், கர்மவினையின் கோணத்தில் செயல்படும்’ என்றும் சாஸ்திரம் விளக்கும் (புத்தி: கர்மானுஸாரிணீ). ஆக, ஒருவனை அழிக்கவோ, ஆக்கம் கொடுத்து வாழ்த்தவோ இன்னொருவரால் இயலாது. அவனது கர்மவினையானது, அழிவைச் சந்திக்க அல்லது ஆக்கத்தை ஏற்கத் தயாராக இருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும் (ஸகர்ம ஸ¨த்ரக்ரதிதோஹிலோக:).

இரண்டாவது கோணம்:

இல்லாத கர்மவினையைக் கற்பனை செய்துகொண்டு, அதற்குப் பெருமை அளித்து, அதை அளிக்கும் முயற்சிகளை எடுத்துக்கூறும் தங்களின் வாதமானது, கனவை நனவாக எண்ணி மகிழும் பாமரர் களை வேண்டுமானால் ஈர்க்கலாம். சிந்தனையாளர்களைச் சீண்டாது. பஞ்சபூதக் கலவையில் உருவான உடலில், சைதன்யத்தின் இணைப்பு காரணமாக மனிதன் உருவாகிறான். சைதன்யம் விடுபட்டதும் உடல் செயலிழந்துவிடும். இதையே பிறப்பு- இறப்பு என்கிறோம். உடலும் உள்ளமும் அழியும்போது, ஒருவனது கர்மவினையும் அழிந்துவிடும். பிறப்பு- இறப்பு இத்துடன் அவன் வாழ்க்கை முடிந்துவிடும். அடுத்த புதுப்பிறவியில் கர்மவினையின் தொடர்பு என்பது, நமது அழகான கற்பனையே!

? அப்படியென்றால், வாழ்வின் ஏற்றத் தாழ்வுகளுக் கும், எதிர்பாராத துயரங்களுக்கும் என்ன காரணம்?

மரத்தில் உருப்பெற்ற மாம்பழம் அடுத்த மரத்தின் உற்பத்திக்குக் காரணமாகும். அதை மரமாக வளரச்செய்ய, சுற்றுச்சூழல் காரணம் ஆகிறது. இறந்தபிறகு கர்மவினையின் தொடர்புக்குச் சான்று இல்லை. துயரத்தைச் சந்திக்கும்போது, அதற்கான காரணத்தை ஆராய்ந்து விடைதெரியாமல் விழிபிதுங்கிய வர்கள், கண்ணுக்குப் புலப்படாத- சான்றில்லாத கர்மவினையைக் காரணம் காட்டி ஆராய்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, நிம்மதியானார்கள்.

ஆசைகளை நிறைவேற்றத் துடிக்கும் மனமானது, ஒரு செயலில் ஈடுபடும்போது தோல்வியையும் சந்திக்கும்; வெற்றியையும் சந்திக்கும். அதற்குக் காரணம் மனத்தின் தவறான கணிப்பே என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போன்று தெளிவாக இருக்கும்போது, இல்லாத கர்மவினையை ஏன் தொடர்பு படுத்தவேண்டும்?

விட்டில்பூச்சி ஒளிப்பிழம்பில் இணைந்து மடிகிறது. மீன் உணவைத் தேடி கிணியில் (தூண்டிலில்) மாட்டிக்கொண்டு மடிகிறது. பாட்டால் ஈர்க்கப் பட்ட மான், வேடனிடம் சிக்கிக்கொள்கிறது. தேன் பருகும் வண்டானது, சூழலை மறந்து தேன் பருகும் வேளையில் பூ மூடிக்கொள்ள, உள்ளே மாட்டிக் கொண்டு மடிகிறது. பறவைகள் வேடன் வலையில் அகப்பட்டு இழப்பைச் சந்திக்கின்றன. கூண்டில் அகப்பட்ட கிளி சுதந்திரத்தை இழக்கும்.சிங்கமும் புலியும் மனிதனுக்கு அடிமையாகி வீரத்தை இழந்து தவிக்கின்றன. இதற்கெல்லாம் அந்தப் பிராணிகளின் அறியாமையே காரணம் என்று தெரிந்துகொள்கிறோம். அதுபோல் மனிதனும் தனது அறியாமையால் சங்கடத்தைச் சந்திக்கிறான், விவேகத்தால் மகிழ்ச்சியை ஏற்கிறான் என்பது நன்றாக விளங்கும்போது, கர்மவினை என்ற ஒரு புதுக் காரணத்தை ஒட்ட வேண்டிய அவலம் முளைக்கவில்லை.

? நவீன விஞ்ஞானமும் 'ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டு’ என்றுதானே சொல்கிறது. இதையே நாங்கள் முன்வினை, கர்மவினை என்கிறோம். உங்கள் கருத்துப்படி இந்த வாதமும் தவறு என்று எடுத்துக்கொள்வதா?

சைதன்யம் (உயிர்) வெளியேறிய பிறகு உடலும் உள்ளமும் செயலிழந்துவிடும். அவை இரண்டும் ஜடம்; தனியே இயங்கும் தகுதி இல்லை. உடல் பஞ்ச பூதங்களில் லயித்துவிடும். உள்ளமும் அதோடு மறைந்துவிடும். இந்த நிலையில் உடல்- உள்ளம் இந்த இரண்டாலும் உருவான செயல்பாடு மட்டும் எப்படி மறையாமல் இருக்கும்? அதுவும் மறைந்து போகும். அப்படி மறைந்த கர்மவினையானது, அடுத்த பிறவியில் எப்படித் தொடரும்?

பகுத்தறிவுக்குப் பொருந்தாத வாதம் எல்லோரா லும் ஏற்கப்படும் தகுதியைப் பெறாது. முறுக்குப் பணியாரத்தை ஒரு குச்சியில் கோர்த்து, கடையில் வியாபாரத்துக்காகத் தொங்க விட்டிருப்பார்கள். ஒரு நாள், வேலையாள் ஓடி வந்து, ''ஐயா! கடையில் தொங்கவிட்டிருந்த முறுக்குக் குச்சியை எலி கொண்டு போய்விட்டது. என்ன செய்வது?'' என்று எஜமானனிடம் கேட்டான்.

''குச்சி போனால் போகிறது. நீ முறுக்கை எடுத்து வா!'' என்றான் எஜமானன். குச்சியை எலி இழுத்துச் சென்றால், முறுக்கும் அதோடு சேர்ந்து போயிருக்கும்தானே? முறுக்கை மட்டும் எப்படிக் கொண்டு வர முடியும்?

அதுபோல் உடல்- உள்ளம் ஆகிய இரண்டில் ஒட்டிக்கொண்டிருப்பது கர்மவினை. உடலும் உள்ளமும் அழிந்த பிறகு, கர்மவினை மட்டும் எப்படி மிச்சம் இருக்கும்? சிந்தியுங்கள். கர்மவினை ஒரு விளையாட்டு என்று புலனாகும். பிறக்காத குழந்தைக்குப் பெயர் சூட்டுவதுபோல், இறந்த கர்மவினையை சிரஞ்ஜீவியாக்குவது அறியாமை.

மூன்றாவதாக ஒரு கோணம்...

உதாரணத்தைக் காட்டி, தத்துவ விளக்கத்தைக் கொச்சைப்படுத்துவது பெருமை அல்ல. உதாரணத்தை ஊன்றிக் கவனித்த மனமே, உதாரண வடிவில் தத்துவத்தை வரையறுக்கும். தத்துவத்துக்கு உகந்த உதாரணமா என்பதை ஆராயாமல், அந்த விளக்கத்தில் மயங்கி, தவறான உதாரணத்தின் மூலம் தத்துவத்தின் தரத்தை விபரீதமாக ஏற்றுக்கொண்டுவிடும்.

இப்படியான அறியாமைதான், விழித்துக் கொண்டிருக்கும் மக்களையும் விபரீத முடிவை ஏற்கவைக்கிறது. தகுதி இழந்தவர்களைத் தூக்கிவிட இயலாத நிலையில், தோல்வியைச் சந்தித்தாலும், குறையை வேறோர் இடத்தில் சுமத்தும் அறியாமை இன்றும் விலைபோகிறது.

கண் சிமிட்டுதல், மூச்சு விடுதல், கை-கால்களை அசைத்தல், சிறுநீர், பெருநீர்வெளியேறுதல் ஆகியன, எந்த முயற்சியுமின்றி அனிச்சையாகவே நிறைவேறி விடும். குழந்தை பிறந்ததும் அதற்குத் தாயின் பாலைச் சுவைக்கும் திறமையை யார் கற்றுத் தந்தார்கள்? எல்லாவற்றுக்கும் பூர்வஜன்ம வாசனையே (கர்ம வினை) காரணமாகிறது.

? மனித சிந்தனைகளுக்கும் கர்மவினைதான் காரணமா?

ஆமாம்! மனத்தில் தோன்றிய எண்ணம், மூளையின் ஆணையால் தானாகவே செயல் பட்டு விடும். அந்த ஆணையை, நாம் நமது முயற்சியால் எதிர்க்கவும் முடியும்; ஏற்கவும் முடியும். இந்த இரண்டையும் தவிர்த்தால், ஆணையானது தாமாகவே செயல்பட்டு சுகதுக்கங் களைச் சந்திக்கவைக்கும். நமது சிந்தனையைக் கண்டு கொள்ளாமல், மூளை தன்னிச்சையாகக் கட்டளையிடும் தகுதி எங்கிருந்து வந்தது? இங்குதான் கர்மவினை சுதந்திரமாகச் செயல்பட்டு, தனது பங்கை நிறைவேற்றிக்கொள்கிறது.

? விதிப்படிதான் வாழ்க்கை என்றால் மதியை உபயோகிக்கும் வேலையே இல்லையே?!

அப்படி எடுத்துக்கொள்ளக் கூடாது! இரண்டு விதமான செயல்பாடுகள். ஒன்று, கர்மவினையின் தூண்டுதலில் உருவானது. மற்றொன்று, நமது அறிவாற்றலில் எழுந்தது. அறிவாற்றல் செயல்படாத நிலையில் நிகழும் விளைவுகளுக்குக் கர்மவினையே காரணம் என்பதை மறுக்க இயலாது. நமது கட்டுப்பாட்டுக்கு உட்படாத மூளையின் ஆணைகள் நம்மையும் மீறி சுதந்திரமாகச் செயல்பட்டுவிடும். அந்த ஆணைகள் கர்மவினையின் தூண்டுதலில் உருவானவை. அறிவாற்றலால் அதை எதிர்த்துப் போராடுவதற்கும், தோல்வியைச் சந்திப்பதற்கும் கர்மவினையின் வலுவே காரணம் என்பதைச் சிந்தனையாளர்கள் விளக்கியிருக்கிறார்கள்.

எந்தத் தகுதியும் இல்லாதவன் வாழ்வில் வளம் பெற்று மகிழ்கிறான். மந்திரிப்பதவியில் அமர்த்தப்பட்டு, கௌரவப்படுத்தப்படுகிறான். அறிவாளிகள் குடத்தில் வைத்த விளக்குபோல் ஒடுங்கி வாழ்கிறார்கள். தவறான வழியில் தன்னையும் சமுதாயத்தையும் மாசுபடுத்திக் கொள்பவர்களும் உண்டு. சட்ட திட்டத்துக்கு உட்படாமல், சுயநலத்தை நிறைவுசெய்து, பெருமைப் படுபவர்களும் உண்டு. தவற்றில் மாட்டிக் கொள்ளாமல், பெரிய மனிதனாக நடமாடுபவர்களும் உண்டு.

இன்றையச் சூழலில் தவறு செய்தவன் தப்பிவிடுவதும், செய்யாதவன் மாட்டிக் கொள்ளுவதும் உண்டு. காட்டில் விலங்கினங் களுடன் இணைந்து வாழ்கிறான். நாட்டில் பாம்பு தீண்டி மடிகிறான். இங்கெல்லாம் வெற்றி- தோல்விகளுக்கு எதைக் காரணம் காட்ட இயலும்? அவரவர் தத்தமது கர்மவினைக்கு உட்பட்டே வாழ்கிறார்கள். கர்மவினையின் மாறுபாடு சுக- துக்கங்களுக்கு வழிவகுத்தது.

? எல்லாம் சரி! வாழ்க்கைச் சுழற்சி முற்றுப்பெற்ற பிறகும் வினைகள் தொடரும் என்பதை ஏற்கமுடியவில்லையே?!

பகலில் இருக்கும் வெப்பம், ஆதவன் மறைந்த பிறகும் அனுபவத்துக்கு வரும். பனிப் பொழுதின் தாக்கம், ஆதவன் தென்பட்ட பிறகும் தொடர்வது உண்டு. மழை விட்டாலும் தூவானம் தொடரும். பெருங்காயம் காலியானாலும், சொப்பில் அதன் வாசனை தொடரும்.வெந்நீர் கொதித்த பிறகு, அடுப்பு அணைந்தாலும், வெப்பம் நீரில் தொடரும். காரணம் மறைந்தாலும், அதன் விளைவு மறையாது.

உடலிலிருந்து வெளியேறிய ஜீவாத்மா மற்றுமொரு உடலில் நுழையும்போது, கர்மவினை யோடு இணைந்து நுழையும். விடுபட்ட ஜீவாத்மாவோடு அவன் ஆற்றிய அறமும் பின்தொடர்ந்து செல்லும் என்று சொல்லுவார்கள் (தர்ம:ஸகாபரமஹோபர லோகயானே). எல்லா வற்றையும் துறந்து செல்லும் ஜீவாத்மாவை, அவன் செய்த அறம் (கர்மவினை) பின்தொடரும் என்கிறது சாஸ்திரம் (தர்மஸ்தமனுகச்சதி). ஆயிரக்கணக்கான மாடுகள் இருக்கும் மந்தையில் கன்று தனது தாயை அடையாளம் கண்டு இணைவது போல், ஜீவாத்மாவை அடையாளம் கண்டு அவனது கர்மவினை இணைந்துவிடும்.

கர்ம சித்தாந்தத்தின் அடித்தளத்தில் உருவான சாஸ்திரங்கள் ஏராளம். கர்மவினையின் விளையாட்டை எடுத்துரைக்க வந்தது ஜோதிடம். கர்மவினை கரைந்தால் மட்டுமே மோட்சம் உண்டு என்கிறது ஆன்மிகம். கர்மவினை பிணியாக மாறி துன்பத்தை விளைவிக்கிறது என்கிறது கர்மவிபாகம். ஒரு தாய்க்குப் பிறந்த பிள்ளைகளில் நால்வரில் ஒருவன் அறிவாளி, மற்றொருவன் முட்டாள், வேறொருவன் திருடன், மற்றுமொருவன் சோம்பேறி - இப்படி ஏற்பட, கர்மவினையே காரணமாகிறது. வாழ்க்கை வளமாகவும் வளம் குன்றியும் தென்பட கர்மவினைக்குப் பங்கு உண்டு.

தங்கள் சிந்தனைக்கு ஒரு வார்த்தை...

மனிதர்கள் ஓர் இனம். ஆனால், ஒவ்வொருவரது இயல்பும் மாறுபட்டுக் காணப்படுகிறது. சிந்தனை மாற்றம் தெரிகிறது. இதில் ஏழை, பணக்காரர்கள், பண்டிதன், பாமரன் - இப்படிப் பல மாற்றங்கள் தென்படுவது ஏன்?

ஏழையைப் பணக்காரனாக்கவும், பாமரனைப் பண்டிதனாக்கவும் அளவுகடந்த முயற்சி எடுக்கப்படுகிறது. ஆனாலும், அதில் வெற்றி பெற இயலவில்லை. கல்விக் கூடங்கள் பல வழிகளில் செயல்பட்டும் கல்வி அற்றவர்கள் ஏன் தென்படுகிறார்கள்? பொருளாதார வளர்ச்சியில், ஏழ்மையை அகற்றப் பல வழிகளில் செயல்பட்டும் தோல்வியைச் சந்திப்பது ஏன்? ஏழைகள் எண்ணிக்கையில் பெருகி வருகிறார்களே! கர்மவினையை எதிர்த்துப் போராடினாலும், அதனை வீழ்த்த, செயலிழக்கச் செய்ய நம்மால் இயலவில்லை. பிரளயம் வரும்வரை ஏழையும் இருப்பான், பணக்காரனும் இருப்பான். ஒடுக்கப் பட்டவனும் இருப்பான், ஒடுக்குபவனும் இருப்பான். அவர்களது கர்மவினையை நம்மால் மாற்ற இயலாது. நாடகம் ஆடுகிறோம்.

கர்மவினைகள்... கற்பனையா?





PLEASE CLICK THE ABO0E IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

Raj Tv Athma Sangamam


ஒப்பில்லா சிவனருளைப் பரிபூரணமாகத் தன்னுள் அடக்கி, உலகம் செழிக்க உன்னதமான பலன்களை அள்ளி வழங்கும் அற்புதம்தான் திருவம்பலச் சக்கரம்.

திருமூலர் அருளிய இந்த சக்கரத்தை, 'சித்துக்கள் ஆடுகின்ற சிதம்பரச் சக்கரம்’ என்று ஞானியர் பலரும் போற்றியுள்ளார்கள். சிவ அனுக்கிரகம் பெற்ற பெரியோர்களை அணுகி, பெருமானின் மகா மூல மந்திர தத்துவங்கள் அடங்கிய இந்த சக்கரத்தை முறையாக எழுதி வாங்கி, உரிய தீட்சை முறையை எளிய வகையில் உபதேசமாகப் பெற்று ஜபம் செய்து வந்தால், அனைத்துச் செயல்களிலும் வெற்றி வந்து சேரும் என்கிறது சிவபூஜா ரகஸ்யம்.

இந்த சக்கரத்தில், சிவனாரே அருளிய சிவசிந்தாமணி மூல மந்திரமும் அடங்கியுள்ளது என்பது கூடுதல் சிறப்பு! சிவபெரு மானைப் புகழும் சமக மந்திரம், 'பஞ்சாட்சர மூலம் அடங்கிய திருவம்பலச் சக்கரத்தில் உள்ள சிவாய நம என்ற எழுத்துக்களைக் கோர்வை செய்து ஜபிப்பவர்களுக்கும், பூஜிப்பவர்களுக்கும் நலம் பல விளையும்’ என்று விவரிக்கிறது.

சக்தி வாய்ந்த இந்த சக்கரத்தை ஜபயோக கர்ம விதியின்படி சிவ தீட்சை பெற்று, ஒரு லட்சம் முறை நம்பிக்கையோடு ஜபித்து வழிபட ஸித்திகள் பலவும் கிடைக்கும்.

அம்பலச்சக்கர பூஜை முறை:

பொதுவாக சித்தர்களின் போதனா முறையைப் பின்பற்றுபவர்கள், தமிழ் மறைப் பாடல்களை பாடும் முற்றோதுதல் வழிபாட்டைக் கடைப்பிடிக்கின்றனர். சிவாகம விதியைப் பின்பற்றுபவர்கள், ஆகம பூஜா விதிகளை வீட்டில் கடைப்பிடித்துச் செய்வதே முறையான வழிபாடாக அமைகிறது. பொது இடத்தில் வழிபாடு நடத்துபவர்கள் முற்றோதுதல் முறையையும், தனிப்பட்ட முறையில் குடும்ப நலனுக்காக செய்பவர்கள், ஆகம பூஜையையும் செய்யலாம். குடும்பத்தில் உள்ளவர்கள் அனுதினமும் எளிய வகையில் செய்தால் போதுமானது.

தங்கம், வெள்ளி அல்லது தாமிரத் தகட்டில், இந்தச் சக்கரத்தை எந்தவித பின்னமும் ஏற்படாமல் கவனமாக எழுதி எழுத்தாணியால் வரைந்து கொள்ளவும். (சிவ அனுக்கிரகம் பெற்ற பெரியோர்களை அணுகி, உரிய முறைப்படி வரைந்து வாங்குவது சிறப்பு). பின்னர், குங்குமப்பூ, ஜவ்வாது, கோரோசணை, புனுகு, அத்தர் ஆகியவற்றை நெய் கலந்து பூசி, ஒரு தட்டில் வெண்பட்டு விரித்து அதன் மேல் தகட்டை வைத்து, சந்தன- குங்குமம் வைத்து பூஜை அறையில் இடம்பெறச் செய்யலாம்.

சிவராத்திரி, சோமவாரம் முதலான சிவபெருமானுக்கு உகந்த நாட்களில் பூஜிக்கத் துவங்குவது சிறப்பு.

முதலில் விநாயகரை வழிபட்டு வணங்கவேண்டும். பின்னர் சிவபெருமானை மனத்தால் தியானித்து வணங்கி, கீழ்க்காணும் சிவநாமங்களைக் கூறி, வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து திருவம்பலச் சக்கரத்தை வழிபடலாம்.

ஓம் பவாய நம:
ஓம் ருத்ராய நம:
ஓம் ம்ருடாய நம:
ஓம் ஈசானாய நம:
ஓம் சம்பவே நம:
ஓம் சர்வாய நம:
ஓம் ஸ்தானவே நம:
ஓம் உக்ராய நம:
ஓம் பர்காய நம:
ஓம் பரமேஸ்வராய நம:
ஓம் மகாதேவாய நம



வில்வத்தால் அர்ச்சித்து வழிபட்ட பிறகு, அஷ்டாங்க நமஸ்காரம் செய்து கற்பூர ஆரத்தி செய்ய வேண்டும். நெய் இட்ட சாதத்தை நிவேதனம் செய்து, தேங்காய், பழம், தாம்பூலம் வைத்து வணங்கவும். எளிய முறையில் வழிபடுவோர் பூஜையின்போது கீழ்க்காணும் காயத்ரீ மந்திரம் மற்றும் துதிப்பாடலைப் படித்து வழிபட்டும் பலன் பெறலாம்.

காயத்ரீ

ஓம் தன்மஹேசாய வித்மஹே வாக்விசுத்தாய தீமஹி.
தந்தோ சிவ: ப்ரசோதயாத்

துதிப்பாடல்...

கங்கைவார் சடையாய் கணநாதா
காலகாலனே காமனுக்குக் கனலே
பொங்குமால் கடல்விடம் இடற்றானே
பூதநாதனே புண்ணியா புனிதா
செங்கண்மால் விடையாய்த் தெளிதேனே
தீர்த்தனே திருவாவடுதுறையுள்
அங்கணா எனை அஞ்சேல் என்று அருளாய்
ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே!

எல்லோரும் திருவம்பலச் சக்கரத்தை வீட்டில் வைத்துக் கொள்ளலாம். ஆனால் அதற்கென சொல்லப்பட்ட எளிய கட்டுப் பாட்டு முறைகளைக் கையாள வேண்டும். லாகிரி- புகையிலை வஸ்துகளை பயன்படுத்தாமை, தெய்வ நிந்தையை தவிர்ப்பது, புலன் அடக்கம் ஆகியவை அவசியம்.

வீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-37




Bhakthi Padalgal Peppers TV





PLEASE CLICK THE ABO0E IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

Raj Tv Athma Sangamam



புத்திர பாக்கியத்தை விரும்பாதவர் யாரும் இல்லை. திருமணமான நாளில் இருந்தே வம்சம் தழைக்க ஒரு வாரிசு எப்போது பிறக்கும் என்று எதிர்பார்ப்பது மனித இயல்பு. அப்படி பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாகப் பிறந்தால்தானே சந்தோஷம் இருக்கும்? ஆனால், ஜோதிடத்தில் பாலாரிஷ்ட தோஷம் என்று ஒன்று இருக்கிறதே..?

அது என்ன பாலாரிஷ்டம்?

ஒரு குழந்தை எந்தவிதமான குறைபாடுகளும் இல்லாமல் ஆரோக்கியமாகப் பிறக்கவேண்டுமானால், பெற்றோர்களின் ஜனன ஜாதகத்தில் சத்புத்திரயோகம் இருக்க வேண்டும்.



அப்படி இல்லாமல் கருவில் உருவான குழந்தை கை - கால்கள் ஊனத்துடனோ, மன வளர்ச்சி இல்லாமலோ பிறக்கும் நிலையில், பெற்றோர்களுக்கும் பிள்ளைக்கும் பாலாரிஷ்டம் உள்ளதென்று சொல்லலாம். பால - குழந்தைப் பருவம்; அரிஷ்டம் - நோய் என்று பொருள்.

குழந்தை பிறக்கும்போது ஏற்படக்கூடிய உடல் குறைபாடு மற்றும் மனவளர்ச்சிக் குறைபாடு மட்டும்தான் பாலாரிஷ்ட தோஷம் என்பது இல்லை. வளரும் பருவத்தில் விபத்து மற்றும் அதிர்ச்சிகளின் காரணமாக ஏற்படக்கூடிய உடல் குறைபாடு, மனச்சிதைவு போன்றவற்றுக்கும்கூட காரணம் பாலாரிஷ்ட தோஷம்தான்.

பாலாரிஷ்ட தோஷத்திற்கான அறிகுறிகள்:

* சுய நினைவில்லாமலும், பால் குடிக்காமலும், அழாமலும் அமைதியாக இருத்தல்.

* மூக்கு சப்பையாகவும் கண்கள் சொருகியது போன்றும் இருத்தல்.

* கால்கள் மடங்கி, உட்கார முடியாமல் கஷ்டப்படுதல்.

* வயிற்றுப் பக்கம் சுருக்கமாகி வளைந்தது போல உடல் அமைப்பு காணப்படுதல்.

* சுய நினைவு இல்லாமல், பால் அருந்தாமல், பிரக்ஞை இல்லாமல் படுத்துக் கிடக்கும் நிலை.

* மூன்று மாதங்கள் ஆனபிறகும் இமைகளைத் திறக்காது, கண்களில் வெண்மையாகக் காணப்படுதல்.

* ஊமைத்தன்மை, காது கேளாமை.

* கைகள் இல்லாமல், காதுகள் உள்சுருங்கி, தலை பள்ளமாகி அமைந்திருத்தல்.

இவ்வாறு இன்னும் 76-க்கும் மேற்பட்ட பாலாரிஷ்ட தோஷங்கள் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

பொதுவாக, பாலாரிஷ்ட தோஷங்களில், 1. அங்க ஹீன பாலாரிஷ்ட தோஷம், 2. ஜென்ம அரிஷ்டம், 3. சந்ததி விருத்தியா பாலாரிஷ்ட தோஷம் என மூன்று வகைகள் இருக்கின்றன. இதுபற்றிப் பெற்றோர்கள் கவலைப்படவேண்டியதில்லை. உரிய பரிகாரங்களைச் செய்து பலன் பெற முடியும்.

பாலாரிஷ்டம் வரும் கிரஹ நிலைகள்:

சூரியன், புதன், கேது, சிம்மத்தில் அமர்ந்து குரு நீசம் பெற்றிருந்தாலும், நவாம்சத்தில் குருவும் கேதுவும் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்தாலும், புதனும் குருவும் 12-லும் ஞானகாரகன் கேது 5-ம் இடத்தில் இருந்தாலும் இந்நிலை ஏற்படக்கூடும்.

புத்திரகாரகனான குரு, பெற்றோர்களது ஜனன ஜாதகத்தில் பலவீனமாக அமைந்தாலும் குழந்தைக்குப் பாலாரிஷ்ட தோஷ நிலை தாக்கக்கூடும் என்கின்றன ஜோதிட விதிகள்.

பாலாரிஷ்ட தோஷம் நீங்க... சிசுவின் ஜனன ஜாதகத்தில் ஆயுள்காரகனாகிய சனியின் அஷ்டவர்க்கம்வரை உள்ள ஸ்தான நிலை, குழந்தையின் தசாபுக்திக் காலம் என்ன, நட்சத்திரப்படி கோள்களின் அசைவுகள் என்ன சொல்கின்றன, குழந்தை பிறந்தபோது பெற்றோருக்கு நடைபெற்ற தசாகாலம் போன்றவற்றுக்குத் தக்கபடி, செய்யவேண்டிய பரிகாரங்கள் உள்ளன. சூரிய தசை - ராகு, கேது புக்திகளில் அதற்கு உரிய பூஜாக்ரமங்களைச் செய்துவிட வேண்டும்.

செவ்வாய் தசையில் ராகு அல்லது கேது புக்தி, சனி தசையில் ராகு அல்லது கேது புக்தி, ராகு, கேது தசையில் புதன் புக்தி போன்ற காலங்களில் பாலாரிஷ்ட பாதிப்புக்கு உள்ளான குழந்தைகள் கடுமையான சோதனைகளை, அழற்சியைச் சந்திக்க நேரிடும்.



வழிபடும் முறை: குழந்தை பிறந்த நட்சத்திர தினத்தன்று (கரி நாள் இல்லாத) அல்லது சனி, செவ்வாய்க்கிழமைகளில் உன்மத்த பைரவரை அவருடைய சக்தி தேவியான வராஹியுடன் சேர்த்து கலசத்தில் வர்ணித்து ஒன்பது செங்கற்களால் யக்ஞ மண்டலமிட்டு 108 யாகக் கூட்டுப் பொருளால் உன்மத்த பைரவ மூர்த்தியை அவரது காயத்ரி மற்றும் மூலமந்திரத்தால் விசேஷ ஆவர்த்தி செய்து, பெற்றோர் மடியில் குழந்தையை வைத்து கலச நீரை மங்கள ஸ்நானம் செய்து விட வேண்டும்.

பராக்கியம், வாருண பத்ததி ஆகிய நூல்களில் உன்மத்த பைரவ மூர்த்தி அசிதாங்க பைரவர், குரு பைரவர், சண்ட பைரவர், குரோத பைரவர் வரிசையில் ஐந்தாவது மூர்த்தியாக வீற்றுள்ளார்.

முதலில் விக்னேஸ்வர பூஜை, குரு வந்தனத்தைச் செய்த பிறகு,

'மமபுத்திர பாலாரிஷ்ட தோஷ

நிவாரணார்த்தம் ஆரோக்ய திடகாத்ரதா சித்யர்த்தம், பாலக்ரஹ துர்தசாகால சாந்தியர்த்தம், பாலஹிஷ்ட நிக்ரஹ ப்ரார்த்தனா காலே உன்மத்த பைரவ பூஜாம் கரிஷ்யே!’ என்று சங்கல்பம் செய்து, கலசத்தில் பைரவரை வரிக்கவும். தொடர்ந்து,

ஓம் உன்மத்த பைரவாய நம: ஓம் பூதபாவநாயநம: ஓம் க்ஷேத்ர பாலாய நம: ஓம் கால சமனாய நம: ஓம் த்ரிநேத்ராய நம: ஓம் அரிஷ்ட நிக்ரஹாய நம: ஓம் கங்கானாய நம: ஓம் வராஹி சக்தி சகிதாய நம: ஓம் கட்க பாணினே நம; ஓம் பசுபதயே நம: ஓம் சாந்திதாய நம: ஓம் நாகஹாராய நம: ஓம் வைத்யாய நம: ஓம் துஷ்டபூத நிவேவிதாய நம: ஓம் சர்வாபத் தாரணாய நம; ஓம் அஷ்ட மூர்த்தயே நம:

என்று அர்ச்சனை செய்து, கை கூப்பியபடி தியான மந்திரம் கூறுக:

உன்மத்த பைரவ தியானம்:

த்ரிநேத்ரம் வரதம் சாந்தம் குமாரஞ்ச திகம்பரம்
ஹேம வர்ணம் மகாதேவம் அஸ்வவாஹன சுஸ்திதம்
கட்கம் கபாலம் முசலம் ததந்தம் கேடகம் ததா
வராகி சக்தி சகிதம் வந்தே உன்மத்த பைரவம்:

மூலமந்திரத்தால் எளிய யாகமுறை செய்து, தூப தீபம் காட்டி மிளகுவடை, பேரீச்சம் பழம், மிளகு சாதம், கொண்டைக் கடலை சுண்டல், தயிர் சாதம், கறிவேப்பிலைசாதம் இவற்றில் ஏதேனும் ஒன்றை நிவேதனம் செய்து, ஆரத்தி செய்ய வேண்டும். பாலாரிஷ்ட ரட்சை ஒன்றை கலசம் நடுவில் செய்து வைத்து,

அதில் ஜவ்வாது புனுகு தடவவும்.

பூஜை முடிந்ததும் ஓம் ------------ (குழந்தை பெயர்) பாலகம் ரக்ஷ: ரக்ஷ: என்று 108 முறை ஜபம் செய்ய வேண்டும். பிறகு இப்பாடலை 3 முறை சொல்லி வணங்கிவிட்டு கலச நீரில் பெற்றோரும் குழந்தையும் குளித்தல் வேண்டும்.

தெருட்கபரு நலன வாவித் தீவிர தலத்துற்றோர்க்கு
மருட்பெரு மாயை நூறி வல்வினைப் படலங்கீறி
கருட்பெருங் கொடிய துக்க நிவர்த்தியும் அகத்தின் பேறும்
அருட்பெருஞ்செயலா நல்கும் வடுகனை அடைந்து வாழ்வாம்.

பாலாரிஷ்ட ரட்சை செய்முறை: பனை ஓலையிலோ, தாமிரத் தகட்டிலோ இந்த ரட்சையைச் செய்யலாம். பனை ஓலையில் செய்வதானால் குங்குமப்பூ, கோரோசனை, பச்சைக் கற்பூரத்துடன் ஊமத்தை இலைச்சாறு விட்டுக் குழைத்து இந்தச் சக்கரத்தை குழந்தையின் நட்சத்திர நாளில் எழுதி குலதெய்வ பூஜை செய்து, உன்மத்த பைரவரை தியானித்து பூஜை செய்து வெள்ளி தாயத்தின் உள்ளே வைத்து கழுத்திலோ, இடுப்பிலோ கட்டி விட வேண்டும். இதன் பலனாக, மன வியாதி, மந்த நிலை ஆகியன விரைவிலேயே விலகி குழந்தை ஆரோக்கியம் பெறும். தொடர்ந்து, வல்லாரை இலைத்தூள் 100 கிராம், வசம்பு 25 கிராம் சேர்த்து இடித்துத் தூள் செய்து தேனில் குழைத்து, குழந்தைக்குக் கொடுத்து வந்தால் ஒரு வருடத்தில் குழந்தையின் உடல் மற்றும் மனநிலையில் திருப்திகரமான முன்னேற்றம் தெரியும்.

வீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-32



நமஸ்காரமானது மிகவும் முக்கியமானது. கடவுளை வணங்குவதாகட்டும், அல்லது பெரியவர்களை வணங்குவதாகட்டும், நமஸ்காரம் மிகவும் முக்கியமாகும். நமஸ்காரத்தில் பல்வேறு வகைகள் உள்ளது. அதில் சாஷ்டாங்க நமஸ்காரம் என்பது மிகவும் புனிதமானது. இதில் உடலின் அனைத்து பாகங்களும் அதாவது அங்கங்கள் அனைத்தும் தரையில் படும்.

சாஷ்டங்க நமஸ்காரம் பொதுவாக "தண்டகார நமஸ்காரம்" மற்றும் "உதண்ட நமஸ்காரம்" என்றும் அறியப்படுகிறது. இந்து மத கோட்பாட்டின் படி, "தண்டா" என்கிற வார்த்தைக்கு "குச்சி" என்று பொருள். எனவே, ஒருவர் இந்த வகை நமஸ்காரம் செய்யும் பொழுது அந்த நபர் தரையில் விழுந்த குச்சி போல தெரிவதால் இதற்கு இந்த வகை பெயர் வழங்கப்படுகின்றது.

அர்த்தம்

இந்த செய்கையானது ஒரு விழுந்த குச்சி எவ்வாறு உதவியற்ற நிலையில் இருக்கின்றதோ, அதே நிலையில் தான் இருக்கின்றேன்; எனக்கு உன்னைச் சரணடைவதைத் தவிர வேறு கதி இல்லை;

நீயே எனக்குத் தஞ்சம் என இறைவனை நோக்கி இறைஞ்சுவதை குறிக்கின்றது. மேலும் இந்த சாஷ்டாங்க நமஸ்காரம் இறைவனின் பாதங்களை நீங்கள் சரணாகதி அடைந்ததை குறிக்கும் ஒரு சின்னமாக விளங்குகின்றது.

அகங்காரத்தை அழிக்கும் ஒரு வடிவம்

சில வழிகளில், இது இந்த நமஸ்காரமானது நம்முடைய அகங்காரத்தை அழிக்கும் ஒரு வடிவம் என்று நம்பப்படுகிறது. நாம் நிற்கும் நிலையில் இருந்து தரையில் விழும் பொழுது நமக்கு காயம்பட்டுவிடுமோ என்று சிலர் அஞ்சக் கூடும்.

நாம் உட்கார்ந்த நிலையில் இருந்தாலும் நமக்கு காயம்படும் சாத்தியங்களும் உள்ளது. ஆனால், நாம் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யும் பொழுது, நாம் கீழே விழுந்து விடும் அபாயம் இல்லை, எனவே இங்கு நமக்கு காயம்படும் சந்தர்ப்பம் துளியும் இல்லை.

அடக்கத்தைக் குறிக்கும்

சாஷ்டாங்க நமஸ்காரமானது நம்முடைய அகங்காரத்தை நீக்கும் ஒரு உன்னதமான செயல்முறை ஆகும். மேழும் இதைப் பின்பற்றும் நபரிடம் அடக்கம் உருவாகத் தொடங்குகின்றது. பிறர் முன் நாம் அவர்களின் செய்கையின் காரணமாக் நாம் தலை வணங்கினால் அது நமக்கு அவமானம்.

அதுவே நாம் பிறரை விட உயர்ந்து இருந்தும், அடக்கமாக தலை தாழ்த்தி இருந்தால் அது நமக்கு மரியாதை மற்றும் வெகுமதியைப் பெற்றுத் தரும்.

நமஸ்காரம்

இந்த நமஸ்காரத்தை ஒரு சன்யாசி/வயதில் பெரியவர்கள/குருவிற்கு செய்யும் போது, அவர்கள் நம்முடைய நமஸ்காரத்தை எல்லாம் வல்ல இறைவனை நோக்கி எடுத்துக் செல்லும் ஒரு ஊடகமாக செயல்படுகின்றார்கள். இந்த நமஸ்காரத்தை மறுமுனையில் பெற்றுக் கொள்பவர்கள்,

எதிரே உள்ளவர் தன்னை வணங்காமல் இறைவனை நோக்கி வணங்குவதாக கருதிக் கொள்வார்கள். எனினும், அவர் அந்த நமஸ்காரத்தை இறைவனிடம் எடுத்துச் செல்கின்றார். மேழும் அவர் அந்த நபரின் நலனுக்காக இறைவனிடம் பிரார்த்தனை புரிகின்றார்.

சாஷ்டாங்க நமஸ்காரம் எவ்வாறு செய்யப்படுகிறது?

சாஷ்டாங்க நமஸ்காரம் புரியும் பொழுது அந்த நபரின் வயிறு தரையில் பட வேண்டும். மேழும் அந்த நபரின் எட்டு அங்கங்களும் தரையைத் தொட்டுக் கொண்டு இருக்க வேண்டும். எட்டு அங்கங்கள் என்பது மார்பு, தலை, கைகள், கால்கள், முழங்கால்கள், உடல், மனம் மற்றும் பேச்சைக் குறிக்கும். இந்த நமஸ்காரம் பொதுவாக ஆண்களால் செய்யப்படுகிறது.

பெண்கள் சாஷ்டாங்க நமஸ்காரம் புரியலாமா?

இந்து மத மரபுகளின் படி, பெண்கள் இந்த வகை நமஸ்காரம் புரியக்கூடாது. ஏனெனில் பெண்களின் கர்ப்பப்பை மற்றும் மார்பகங்கள் தரையில் படக்கூடாது.

ஏன் பெண்கள் சாஷ்டாங்க நமஸ்காரம் புரிய அனுமதி இல்லை?

பெண்கள் 'பஞ்சாங்க நமஸ்காரம்' மட்டுமே புரிய வேண்டும். அவர்கள் எப்பொழுதும் சாஷ்டாங்க நமஸ்காரம் புரியக்கூடாது. பெண்கள் தங்களுடைய உள்ளங்கைகளை ஒன்றாக சேர்ந்து தன் முன் உள்ள பெரியவர்களின் முன் மண்டியிட்டு தன் மதிப்பிற்குரியவர்களின் கால்கள் தொட்டு வணங்குவது 'பஞ்சாங்க நமஸ்காரம்' என அழைக்கப்படுகின்றது.

இந்து மத சாஸ்திரங்களின் படி, பெண்களின் கர்ப்பப்பை மற்றும் மார்பகங்கள் தரையில் படக் கூடாது. எனவே அவர்களுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் புரிய அனுமதியில்லை. பெண்களின் கருப்பையானது ஒரு உயிரைத் தாங்கும் உன்னத வேலையைச் செய்கின்றது.

அவர்களின் மார்பகமானது குழந்தைக்கு பாலூட்டும் உயரிய வேலையைச் செய்கின்றது.எனவே, அவை இரண்டும் தரையில் படக்கூடாது.

சாஷ்டாங்க நமஸ்காரத்தின் முக்கியத்துவம் என்ன என்று தெரியுமா?



அது ஓர் அழகிய வனம். மூலிகைகளும் பெரும் விருட்சங்களும் அடர்ந்த அந்த வனத்தில் ரிஷிகள் பலர் வாழ்ந்து வந்தார்கள். தினமும் அவர்கள் செய்யும் வேள்விகளாலும், அவர்கள் எழுப்பும் வேதகோஷங்களாலும் பெரும் சாந்நித்தியம் அடைந்திருந்த அந்த வனத்தை ஒட்டி ஓடியது யமுனை!

ஒருநாள், ராஜகுமார்கள் சிலர், தங்கள் நண்பர் களுடனும் தாயாதிகளுடனும், உறவினர்களுடனும் அந்த வனத்தை ஒட்டிய யமுனை தீரத்துக்கு நீராட வந்தார்கள். சிலபல நாழிகைகள் நதியில் நீராடி மகிழ்ந்தபின் பலரும் கரையேறியபின்னர், இருவர் மட்டும் கடைசியாக கரைக்கு வந்தனர்.

மாமனும், மைத்துனனுமான அவர்கள் கரையேறும்போது, வயோதிக அந்தணர் ஒருவர் அவர்களை வணங்கி, “உங்களைப் பார்த்தால், கருணை நிறைந்தவர்களாகத் தெரிகிறது. எனக்கு பசிக்கிறது. உணவிடுவீர்களா?” என்று கேட்டார்.

அந்த இருவரில் ஒருவர் கிருஷ்ணன்; மற்றவன் அர்ஜுனன். வயோதிகரை உற்று நோக்கிய கிருஷ்ணன் அவரை இனம்கண்டு கொண்டார். பின்னர் புன்னகையுடன் அவரிடம் கேட்டார், “அக்னி பகவானே! உமக்கேன் இந்த வேடம்? வேண்டியதை எங்களிடம் நேரிடையாகவே கேட்டிருக்கலாமே?” என்றார்.

“பரம்பொருளே! உலகுக்கே படியளக்கும் உமக்குத் தெரியாததா? சுவேதசி மன்னருக்காக துர்வாச மகரிஷி தொடர்ந்து நூறாண்டுகள் தீ வளர்த்து யாகம் செய்தார் (12 ஆண்டுகள் எனவும் சில புராணங்கள் சொல்கின்றன). நூறாண்டுகள் தொடர்ந்து நெய்யையும் ஹவிஸையும் (வேள்வி யில் இடும் பொருட்கள்) உண்டதால், எனக்கு வயிறு மந்தமாகி, இயல்பான செயல்களைச் செய்யமுடியவில்லை. இதற்குத் தீர்வு, மூலிகைகள் நிறைந்த இந்த காண்டவ வனத்தைச் சாப்பிடுவதுதான். ஆனால், அதை எரிக்கச் சென்றால், வருணன் வந்து என் தீ நாக்குகளை அணைத்துவிடுகிறான். என் பிணி தீர உதவுங்கள்” என வேண்டினார் அக்னி.

அக்னியே பிரதானம். அக்னி மந்தமானால் உலக வாழ்க்கை ஸ்தம்பிக்கும். பிரபஞ்சம் குளிர ஆரம்பித்தால் சிருஷ்டி முதல் அனைத்துக் காரியங்களும் தடைப்படும். கண்ணுக்குத் தெரியாத இழையால் பிணைக்கப்பட்ட அனைத்துமே ஒவ்வொன்றாக பாதிக்கப்படும். இதையெல்லாம் ஒரு விநாடியில் யோசித்த கிருஷ்ணர், கூடவே ஒரு தந்திரமும் செய்தார் அர்ஜுனனுக்காக.

“அக்னியே! நாங்கள் நீராடவே வந்தோம். எங்களிடம் ஆயுதம் ஏதுமில்லை. என்ன செய்வது?” என யோசிப்பது போல நடித்தார்.

உடனே, எடுக்க எடுக்க அம்புகள் குறையாத அம்பறாத் தூணியையும், காண்டீபம் எனும் வில்லையும் அர்ஜுனனுக்குக் கொடுத்தார் அக்னி பகவான். அப்புறமென்ன... காண்டீபத்தைக் கொண்டு வருணன் உள்ளே நுழையமுடியாத அளவுக்கு அம்புகளாலேயே பந்தலிட்டு (ஒரு சொட்டு நீர் கூட புகாத வண்ணம்), வனத்தை எரிக்க அக்னிக்கு உதவினான் அர்ஜுனன். முன்னதாக ரிஷிகள் முதலானோர் அங்கிருந்து வெளியேறிவிட்டனர்.மூலிகைகள் நிறைந்த அந்த வனத்தை 21 நாட்கள் எரித்து தீர்த்தார் அக்னி.



பத்ம ஹஸ்த பரம் ஜ்யோதி: பரேசாய நமோ நம:
அண்டயோனே மஹாஸாக்ஷின் ஆதித்யாய நமோநம:
கமலாஸன தேவேச பானு மூர்த்தே நமோ நம:
தர்மமூர்த்தே தயாமூர்த்தே தத்வமூர்த்தே நமோ நம:
ஸகலேசாய ஸூர்யாய சாயேசாய நமோ நம:

- ஸ்ரீசூர்ய ஸ்தோத்ரம்



பிறகு ஸ்ரீகிருஷ்ணர், “பசியா, வாழ்வியலா என்றால், பசி போக்குவதே முதல் காரியம். அக்னி பசியாறுவது லோக கல்யாணம். இனி, உங்களுடைய தவபலத்தால் மீண்டும் காண்டவ வனத்தைப் புதுப்பிக்கும் சக்தியையும் வழங்கு கிறேன்” என்று காண்டவ வன ரிஷிகளுக்கு அருள்புரிந்தார்.

இந்த 21 நாட்களே அக்னி நட்சத்திரமாக இன்றளவும் தொடர்கிறது. பூமத்திய ரேகைக் கும், கடகரேகைக்கும் நடுவில் சூரியன் பயணிக்கும் காலம்; புவி மையக் கோட்பாட்டின் அடிப்படையில், பரணி நட்சத்திரம் மூன்றாம் பாதத்தில் இருந்து ரோகிணி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதம் வரை சூரியன் பிரவேசிக்கும் காலம், அக்னிநட்சத்திர காலம் ஆகும்.

இந்த காலத்தில் கார்த்திகை நட்சத்திரத்தின் ஊடாக சூரியன் பயணிக்கும் காலம், ‘கத்ரி காலம்' என பண்டைய பாரத வானியலாளர்கள் கணித்துள்ளனர். சந்திரனும் பூமியும் சூரியனுக்கு அருகில் இருப்பதால் அக்னி நட்சத்திரத்தில் வெப்பம் அதிகம் என்பது விஞ்ஞானம்.

கார்த்திகையும் கத்திரியும்!

தாரகாசுரனை அழிக்கவேண்டி அனைத்து தேவர்களும் மஹாதேவனான ஈஸ்வரனிடம் முறையிட்டனர். அவர்களின் இன்னல்களைக் கண்டு சினந்து, தனது நெற்றிக்கண்ணை திறந்தார் சிவனார். அப்போது ஆறு ஒளிப் பிழம்புகள் வெளிவந்தன. அவற்றின் பிரகாசத்தை அன்னை பார்வதியால்கூட தாங்க இயலவில்லையாம்!

அந்த ஆறு ஒளிப் பிழம்புகளையும் வாயுவிடம் ஒப்படைத்தார். வாயு அவற்றைக் கொண்டு இமயமலையின் அடியில் உள்ள சரவணப் பொய்கையில் சேர்க்க, அங்கே தீப்பொறிகள் ஆறு குழந்தைகளாக, ஆறு தாமரை மலர்களில் தவழ்ந்தன. அவர்களை கார்த்திகைப் பெண்கள் எடுத்துவளர்த்தனர். அவ்வேளையில் தீப்பொறிகளின் வெம்மை, அதாவது குழந்தைகளின் வெம்மை - உக்கிரம் தணிகிறது. கார்த்திகைப் பெண்களிடம் இந்த உஷ்ணம் (அக்னி) இடம்பெயர்கிறது. பின்னர், கார்த்திகைப் பெண்கள் உமையிடம் குழந்தை களைச் சேர்க்க, அவள் அவர்களை ஆனந்தத்தில் அணைக்க, ஆறு குழந்தைகளும் ஒன்றாகி ஆறுமுக னாக, அழகனாக, முருகனாக தோற்றம் தந்தனர்.

கார்த்திகைப் பெண்கள் கார்த்திகை நட்சத்திர மாக மாறும் பேறு பெறுகிறார்கள். மங்காத ஒளியுடன் அக்னியின் அம்சமாக மாறி ஜொலிக்கிறார்கள். கார்த்திகை நட்சத்திரத்துக்கு அக்னியே அதிபதி. கார்த்திகை நட்சத்திரத்தின் ஊடாக சூரியன் பிரவேசிப்பதே கத்திரி எனப் படும். கத்திரிக்கு முந்தைய காலம் முன்கத்ரி. பிந்தைய காலம் பின் கத்திரி. கத்ரியின் உக்ரம் தணிக்க தணிகைவேலனை வழிபடுவது சிறப்பு. (பவிஷ்யோத்ரபுராணம்).



அக்னி நட்சத்திரத்தில் ...

என்ன செய்யலாம்! என்ன செய்யக்கூடாது?

சிவன், விஷ்ணு, அம்மன், குமரக்கடவுள் வழிபாடு செய்யலாம். குமரன், சிவன் அக்னியின் அம்சம். மேலும் சீதளா தேவியை வணங்குவதால் அம்மை போன்ற நோய்கள் நீங்கும்.

கோடையைத் தணிக்க வேப்பிலை, மஞ்சள் கொண்டு வீட்டை தூய்மைப்படுத்தவேண்டும். ஏழைகள், அந்தணர்கள் இயலாதவர்களுக்கு விசிறி, காலணி, குளிர்ந்த நீர், மோர், இளநீர், பானகம், தயிர்சாதம் கொடுப்பது விசேஷம்.

கோயில்களில் இறைவன், இறைவிக்கு திருமஞ்சனம், அபிஷேகம் செய்வதும் கண்குளிர காண்பதும் சிறப்பு.

விஷ்ணு கோயில்களில் வசந்த உற்சவங்கள் நடைபெறும். பகல் பத்து, ராப்பத்து உற்சவங் களும் நடைபெறும். பரணிக்கு உரிய துர்கை, ரோஹிணிக்கு உரிய பிரம்மா இருவருக்கும் சந்தனக்காப்பு செய்வது சிறப்பு.

இந்த காலங்களில் உஷ்ணநோய் பாதிக்காமல் இருக்க, அரிசி மாவினால் சூரிய நவகிரக கோலமிட்டு, ‘அஸ்வத் த்வஜாய வித்மஹே! பாஸ ஹஸ்தாய தீமஹி! தன்னோ சூர்ய ப்ரசோதயாத்!’ என சூரிய காயத்ரீ சொல்லி வழிபடுவது சிறப்பு.

சிவாலயங்களில் சிவனின் மேல் உறி கட்டி அதில் சிறு துளையுடன் கூடிய மண் கலயத்தைத் தொங்கவிட்டு, அதற்குள் வெட்டி வேர், விளாமிச்சை வேர், பச்சிலை, ஜடாமஞ்சி, பன்னீர், பச்சைக் கற்பூரம், ஏலக்காய், ஜாதிக்காய், கடுக்காய், மஞ்சள் தூள் ஆகியவற்றைக் கலந்த நீரை நிரப்புவார்கள். அந்த நீரின் துளிகள், கலயத்தின் துளை வழியாக லிங்கத் திருமேனியில் சொட்டு சொட்டாக விழும் வண்ணம் செய்வர். இப்படி, அனைத்து கோயில்களிலும் ஜல தாரை வைப்பதால் இயற்கை உபாதைகளோ, பூமி அதிர்வோ ஏற்படாது என்பது ஐதீகம்.

இந்த நாட்களில் செடி- கொடி மரங்களை வெட்டக்கூடாது, நார் உறிக்கக்கூடாது, விதை விதைக்கக் கூடாது, கிணறு, குளம், தோட்டம் அமைக்கக் கூடாது. நிலம் மற்றும் வீடு பராமரிப்பு
பணிகளைச் செய்யக்கூடாது. அதேபோல் நீண்ட தூர பிரயாணம், பூமி பூஜை, கிரகப் பிரவேசம், மொட்டை போடுதல் ஆகியவற்றையும் தவிர்க்கவேண்டும்.

அக்னி பூஜை!

இரண்டு முகம் கொண்டவன் அக்னி. யாகத் தீயில் ஆசார்யர், யஜமானர் இருவரும் இடும் ஹவிஸையும் ஏற்பதற்காக இரண்டு முகங்கள். தீ வளர்த்து ஹோமம் செய்பவர் பண்டிதர்.
அதன் பலனை அனுபவிப்பவர் யஜமானர்.

அக்னிக்கு இரு மனைவிகள் ஸ்வாஹா, ஸ்வதா. மங்கள காரியங்களுக்கு ஸ்வாஹா என்றும், பித்ரு காரியங்களுக்கு ஸ்வதா என்றும் கூறி மந்திரங்களை உச்சரிப்பார்கள்.

ரிக் வேதம் அக்னியைக் கொண்டே ஆரம்பிக்கிறது. அக்னியை கொண்டே முடிகிறது. முக்கிய குணம் - பிரகாசம், ரூபம் - ஹிரண்மயம் (தங்கத்தைப் போன்றது).

அக்னியே தேவதைகளுக்கும், ஹோமம் செய்பவர்களுக்கும் பாலமாக இருந்து, நாம் வழங்கும் ஹவிஸை (ஹோமத் தீயில் இடும்பொருட்களை) கொண்டு சேர்க்கிறார். அக்னி தேவனுக்கு ஏழு நாக்குகள். அதனால் ஏழு தினங்களுக்கு அவரை பூஜிப்பர். அதாவது, பூஜையறையில் செங்காவியால் அக்னியின் கோலத்தை வரைந்து வாசனை மலர்களால் அர்ச்சித்து தீபமேற்றி வழிபட வேண்டும். பிரசாதமாக முறையே ஞாயிறு - பாயசம், திங்கள் - பால், செவ்வாய் - தயிர் மற்றும் வாழைப்பழம், புதன் - தேன் மற்றும் வெண்ணெய், வியாழன் - சர்க்கரை மற்றும் நெய், வெள்ளி-வெள்ளை சர்க்கரை மற்றும் பானகம், சனி - பசுநெய் மற்றும் தயிர்சாதம் என நைவேத்தியம் படைத்து வழிபடவேண்டும்.

சூரியபகவானைப் போற்றுவோம்!

வானுலகமாகிய சுவர்க்கத்தில் சூரியன், இடைவெளியில் மின்னல், மண்ணுலகில் அக்னி என மூவுலகிலும் நிலைத்திருப்பது சூரியனே என்கின்றன ஞானநூல்கள்.

நமது பேரண்டத்தை ஒரு முட்டையைப் போல கற்பனை செய்யுங்கள். அதன் மேல் பகுதி: பூமி முதலான ஏழு உலகங்கள் (பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், மகர்லோகம், ஜலலோகம், தபோலோகம், சத்தியலோகம்). கீழ்ப் பகுதி: அதல, சுதல, விதல, ரசாதல, தலாதள, பாதாள, மஹாதள லோகங்கள் ஆகும்.

இவற்றுள், பூமியின் மத்தியில் மேரு பர்வதம் உள்ளது. அந்த மலைக்கு பொன்மயமான சிகரங்கள் நான்கு உண்டு. ஒவ்வொரு சிகரமும் ஆயிரம் யோசனை விஸ்தீரணம் கொண்டது. அவை: சௌமனஸம் - பொன் மயம், ஜோதிஷ்கம் - பத்மராகம் மயம், சித்துரம் - சர்வதாது மயம், சாந்திரமாசம் - வெள்ளி மயம். இந்த நான்கில் உத்தராயனத்தில் சௌமனஸம் எனும் சிகரத்தில் இருந்தும், தக்ஷிணாயனத்தின்போது ஜோதிஷ்கம் என்ற சிகரத்திலிருந்தும் உதயமாகிறார் சூரியன். விஷூக்களின்போது இரண்டுக்கும் நடுவிலிருந்து உதயமாகிறார்.

சூரியனை தேவாதிதேவர்களும் வழிபட்டு அருள்பெறுகிறார்கள். உதய நேரத்தில் இந்திரன், மதியப் பொழுதில் வாயு, அஸ்தமன நேரத்தில் வருணனும் சந்திரனும், அர்த்தஜாமத்தில் குபேரன், இரவின் முடிவில் மும்மூர்த்தியர் ஆகியோர் வழிபடுகிறார்களாம். அதேபோல் அஷ்டதிக்கிலும் அஷ்டதிக் பாலகர்கள் வழிபடுவதாகப் புராணங்கள் சொல்லும்.

இப்படி தேவர்களாலும், மும்மூர்த்திகளாலும் பூஜிக்கப்படும் சூரியனை நாமும் நாளும் வழிபட்டு வந்தால், பிணிகள் நீங்கும், ஆயுள் பெருகும். சரி! அவரை வணங்கும்போது என்ன சொல்லி வணங்கலாம்?

அந்த ஸ்லோகங்கள்:

ஆதித்ய: ஸவிதா ஸூர்ய: கக: பூஷா கபஸ்திமான்
ஸுவர்ணஸத்ரூசோ பானு: ஹிரண்யரேதா திவாகர:
ஹரிதச்வ: ஸஹஸ்ரார்சி: ஸப்தஸப்திர்மரீசிமான்
திமிரோன்மதன: சம்பு: த்வஷ்டா மார்த்தாண்ட அம்சுமான்:

அக்னி நட்சத்திரம் - அபூர்வ தகவல்கள்... அற்புத வழிபாடுகள்!



கோயில் என்பது கடவுள் இருக்கும் இடம். நமது பக்தியைச் செலுத்தக் கோயிலுக்குச் செல்கிறோம். இந்த உலகத்தில் பரிசுத்தமான ஓர் இடம் என்றால் அது அன்றும் இன்றும் கோயில்தான்! அந்த இடத்துக்குப் போய் அவரை தரிசனம் செய்து திரும்பும்போது கால் கழுவக் கூடாது. நாம் முழுக்கவே சுத்தம் ஆன பிறகு, காலை மட்டும் தனியே சுத்தம் செய்வானேன்?.

எங்கேயெல்லாம் கால் கழுவ வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறதோ, அங்கேயெல்லாம் அதற்கு ஒரு காரணம் இருக்கும். புது வேஷ்டி கட்டியிருந்தால், வெளியில் நடந்துவிட்டு வந்தால் கால் கழுவ வேண்டும்.

கல்யாணத்தில் பரதேசிக் கோலத்தில் கோயிலுக்குப் போகிறான் மணமகன். பகவானைக் கும்பிடுகிறான். திரும்பி வந்தவுடன் அப்படியே ஊஞ்சலில் உட்கார்கிறான். கால் கழுவுவதில்லை. அதன் பிறகு காலில் நலுங்கு அது இது எல்லாம் வைத்த பிறகு, கழுவ வேண்டுமே என்று கழுவுகிறான்.

பகவானின் தரிசனம் முடித்து வரும்போது நம் உடலில் எந்த அசுத்தமும் இருப்பதில்லை என்பதால், எந்தக் காரியம் செய்வதாக இருந்தாலும் சுத்தப்படுத்திக் கொள்ளத் தேவை இல்லை. தேர் இழுக்கிறோம். அங்கே ஒரு வித்தியாசமும் இல்லை. அங்கே ஒருவருக்கு ஏதோ தீட்டு இருக்கிறது என்றால் கவலையே இல்லை… தேர் வடத்தைத் தொட்ட உடனேயே எல்லாத் தீட்டும் போய் விடுகிறது. கோயிலில் இருந்து திரும்பும்போது மழை வந்துவிட்டது. சேற்றில் கால் வைத்துவிட்டீர்கள் என்றால் அப்போது கால் கழுவலாம்.

கோயிலுக்குச் சென்று வந்தவுடன் கால் கழுவக்கூடாது! தெரியுமா?.



வலம்புரிச் சங்கு பூஜிக்கப்பட்டு வரும் இல்லங்களில், பிரம்மஹத்தி முதலான அனைத்துவகை தோஷங்களும் அகன்றுவிடும். 'சங்க மத்யே ஸ்திதம் தோயம் ப்ராமிதம் சங்கரோபரி அங்க லக்ஷ்ணம் மனுஷ்யானாம் ப்ரம்ம ஹத்யாதிகம் தஹேத்’ என்பது வேதவாக்கு. வீடு கட்டுபவர்கள் கைப்பிடி அளவுள்ள வலம்புரிச் சங்கை நிலை வாசலில் வைத்து, வாஸ்து விதிப்படி சங்குப் பதிப்பு முறை செய்துவிட்டால், அந்த வீடு மூன்று தலைமுறைக்கு செல்வச் செழிப்போடு குபேர சம்பத்துடன் விளங்கும் என்பது நம்பிக்கை.

ஆலயங்களிலும் கும்பாபிஷேகம் நடைபெறும்போது, யாக சாலைகளில் எண்வகை மங்களப் பொருட்களில் ஒன்றாக வலம்புரிச் சங்கும் ஸ்தாபிக்கப்பட்டு பூஜிக்கப்படுகிறது. அதேபோன்று, கார்த்திகை மாத சோமவார (திங்கட்கிழமை) அபிஷேக காலங்களில் 108 சங்குகளுக்கு நடுவில் வலம்புரிச் சங்கு ஒன்றை வைத்து, சிவபெருமானாக வர்ணிக்கப்பட்டு பூஜிக்கப்படும்.அபிஷேக ஆராதனைகள் செய்த பிறகு, சங்கு தீர்த்தத்தை நம் மீது தெளிப்பார்கள். சங்கு நீர் உடலில் பட்டாலே அனைத்து துர்சக்திகளும் நம்மை விட்டு விலகும் என்கிறது சாஸ்திரம்.

புராணங்களில் வலம்புரிச் சங்கு

அமிர்தம் வேண்டி தேவ-அசுரர்கள் பாற்கடலைக் கடைந்தபோது வெளிவந்த 16 வகை தெய்விகப் பொருட்களில் வலம்புரிச்சங்கும் ஒன்று. அதை இடக்கையில் ஏந்தியபடி தோன்றிய மகாலட்சுமியை, திருமால் தமது வலக் கையில் பிடித்துக்கொண்டார் என்கின்றன புராணங்கள்.

ஸ்ரீகிருஷ்ணபரமாத்மா வைத்திருந்த சங்குக்கு பாஞ்சஜன்யம் என்று பெயர். குருகுல வாசம் முடிந்ததும் குருநாதர் சாந்தீபனி முனிவரிடம், ''குருதட்சணையாக என்ன வேண்டும்?'' எனக் கேட்டார் கிருஷ்ண பரமாத்மா. அவரும் அவர் மனைவியும், தங்கள் ஒரே மகனை

பஞ்சஜனன் எனும் அசுரன் கடத்தி கடலுக்குள் வைத்திருப்பதாகவும், அவனை மீட்டுத் தரும்படியும் வேண்டினார்கள். கிருஷ்ணரும் அந்த அசுரனுடன் போரிட்டு குருவின் மகனை மீட்டு வந்தார். அந்த அசுரன் எரிந்து சாம்பலாகி ஒன்று திரண்டு சங்கு வடிவமானதால், அதற்கு 'பாஞ்ச ஜன்யம்’ என்று பெயர்.

கண்ணனைப் போன்று பாண்டவர்கள் ஐவருமே ஒவ்வொரு வகையான சங்கை கொண்டிருந்தனர்: தருமர்- அனந்த விஜயம்; அர்ஜுனன்- தேவதத்தம்; பீமன்- மகாசங்கம்; நகுலன்- சுகோஷம்; சகாதேவன்- மணிபுஷ்பகம்.

கடலில் உருவாகும் சங்குகளில் பல வகை உண்டு. மணி சங்கு, துவரி சங்கு, பாருத சங்கு, வைபவ சங்கு, பார் சங்கு, துயிலா சங்கு, வெண் சங்கு, பூமா சங்கு, திரிசங்கு ஆகியவற்றில் வலம்புரியாகக் கிடைக்கும் சங்குகளுக்கு சக்தி அதிகம் என்கின்றன ஆகமசாஸ்திரங்கள்

திருப்பதி பெருமாள் மணிசங்கு கொண்டிருக்கிறார். இவரைப் போன்றே திருவனந்தபுரம் ஸ்ரீஅனந்தபத்மநாப ஸ்வாமி பாருத சங்கும், திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் வைபவ சங்கும், திருக்கண்ணபுரம் ஸ்ரீசௌரிராஜ பெருமாள் துயிலா சங்கும் கொண்டு திகழ்கிறார்கள்.



பூஜிப்பது எப்படி?

வியாழக்கிழமை மாலையில் 5 முதல் 8 மணிவரையிலான குபேர காலம், வெள்ளிக்கிழமை காலை வேளை, பௌர்ணமி, திருவோணம் மற்றும் பூர நட்சத்திர நாட்களில் இந்த பூஜையைத் துவங்கி 32, 48, 54 அல்லது 63 நாட்கள் என்ற எண்ணிக்கையில் செய்து முடிக்கலாம்.

விபூதியால் தேய்த்து சங்கை சுத்தம் செய்ய வேண்டும். அதன் மேற்பாகம் குறைந்தது 8 சந்தனப் பொட்டுகள் வைக்கவேண்டும். பின்னர், வாசனைத் திரவியங்களான ஏலக்காய், ஜாதிக்காய், கிராம்பு, பச்சைக் கற்பூரம், குங்குமப் பூ, துளசி, மஞ்சள் தூள் சிறிதளவு கலந்த நீரை சங்கினுள் இட்டு, மலர்களால் அலங்கரியுங்கள். அடுத்து ஷட்கோண கோலத்தின் மையத்தில் சிவப்புத் துணி விரித்து அதன் மீது சங்கை வைக்கவேண்டும். எதிரில் ஹ்ரீம் கோலம் போட்டு சுபம், லாபம் என்று எழுதிவைக்க வேண்டும்.

முதலில் சந்தனத்தால் பிள்ளையார் பிடித்துவைத்து, 'ஓம் ஸ்ரீம் கம் கணபதயே நம:’ 'ஸ்ரீ குருப்யோ நம:’ என்று 3 முறை சொல்லி மலரிட்டு வணங்கியும், 'சங்க பூஜாம் கரிஷ்யே’ எனச் சொல்லி வழிபடவும் வேண்டும்.

அடுத்ததாக...

* 'மம குபேர நிதி தர்சனார்த்தம்’

* 'ஓம் பாஞ்சஜன்யாய வித்மஹே பவமானாய தீமஹி

தந்நோ சங்க ப்ரசோதயாத்’

* 'குபேர லக்ஷ்மி ரூபாய சங்காய ஸ்வாகதம்... ஸ்வாகதம்...ஸ்வாகதம்...

என்று மூன்றுமுறை சொல்லி நீர்விட வேண்டும்.

அடுத்த நிலை, எல்லோரும் அறிய வேண்டிய ஒன்று. அதாவது வலம்புரிச் சங்கை ஆகம முறைப்படி வர்ணித்து அதில் அமரச் செய்வதற்கு ஏதுவாக, 16 கலைகளையும் ஆவாஹனம் செய்து வழிபட வேண்டும். அதற்குப் பிறகு சங்கை பூஜிக்கவேண்டும்.

ஓம் அம்ருதா கலாய நம:

ஓம் சந்த்ரிகா கலாய நம:

ஓம் மானதா கலாய நம:

ஓம் காந்தி கலாய நம:

ஓம் பூஷா கலாய நம :

ஓம் ஜயோத்ஸ்னா கலாய நம:

ஓம் துஷ்டி கலாய நம:

ஓம் ஸ்ரீகலாய நம:

ஓம் புஷ்டி கலாய நம:

ஓம் ப்ரீதி ரங்கதா கலாய நம:

ஓம் ரதி கலாய நம:

ஓம் பூர்ணா கலாய நம:

ஓம் த்ருதி கலாய நம:

ஓம் பூர்ண முகா கலாய நம:

ஓம் சசி ஸ்ரீ கலாய நம:

ஓம் காமதாயினீ கலாய நம:

அடுத்ததாக நவநிதிகளை அழைத்து அர்ச்சிக்கவேண்டும். 'ஓம் பத்ம நிதயே நம:’ எனத்துவங்கி சங்கம், மகரம், சுகச்சபம், முகுந்தம், குந்தாக்யம், நீலம், மகரம், வரம் என்று ஒன்பது நிதிகளையும் (முன்னும் பின்னுமாக ஓம் - நம சேர்த்து) போற்றி வழிபட்டு...

ஓம் நவநிதிதேவதாயை நம; சகலாராதனை சுவர்ச்சிதம்,
ஓம் யக்ஷேஸ்வர ரூபாய மகாசங்காய நம; சகல ஆராதனம் பூஜயேத்

என்று வணங்கவேண்டும். பிறகு குபேரனை தியானித்து, அவரது முக்கியமான 16 நாமாக்களால் அர்ச்சிக்க வேண்டும்.

ஓம் க்லீம் குபேராய நம:

ஓம் க்லீம் நித்யேஸ்வராய நம:

ஓம் க்லீம் ஸ்ரீபதயே நம:

ஓம் க்லீம் நித்யானந்தாய நம:

ஓம் க்லீம் பூர்ணாய நம:

ஓம் க்லீம் தனலக்ஷ்மி வாசாய நம:

ஓம் க்லீம் அஸ்வாரூபாய நம:

ஓம் க்லீம் சுகாஸ்ரயாய நம;

ஓம் க்லீம் நரவாகனாய நம:

ஓம் க்லீ ம் மிகதெஸ்வர்ய ரூபாய நம;

ஓம் க்லீம் சதா புஷ்பக வாகனாய நம:

ஓம் க்லீம் சர்வக் ஞாய நம;

ஓம் க்லீம் சீல பூஜகாய நம:

ஓம் க்லீம் யக்ஷ£ய நம:

ஓம் க்லீம் கட்காறதாய நம:

ஓம் க்லீம் சீல பூஜ காய நம:

ஓம் க்லீம் ராஜயோக வராய நம:

ஓம் ஸ்ரீம் க்லீம் பாஞ்ச ஜன்ய ரூபாய நம:

குபேர அர்ச்சனை முடிந்தபிறகு, அவல் பாயசம், கற்கண்டு பால் வைத்து, தூப-தீப நிவேதனம் செய்யவும். தொடர்ந்து வெள்ளை மற்றும் சிவப்பு நிற மலர்களை எடுத்துக்கொண்டு, தரையில் மண்டியிட்டபடி...

''ஓம் வடதிசை வல்லவா போற்றி,

ஓம் நவநிதி தேவனே போற்றி

ஓம் செல்வத்தின் உருவமே போற்றி,

ஓம் கடலினில் பிறந்தாய் போற்றி,

ஓம் பரந்தாமன் கரமே போற்றி,

ஓம் வெண்ணிறத்து மேனியே போற்றி,

ஓம் திருமகள் நட்பே போற்றி,

ஓம் ஐஸ்வர்ய இருப்பிடமே போற்றி,

ஓம் ஆனந்த வடிவினனே போற்றி,

ஓம் குபேரனின் இல்லமே போற்றி,

ஓம் தோஷங்கள் விரட்டுவோய் போற்றி,

ஓம் ஈஸ்வரன் விருப்பமே போற்றி,

ஓம் ஏற்றம் தருவோய் போற்றி,

ஓம் எளிமையின் சொல்லே போற்றி,

ஓம் நாதத்தைக் கொண்டவா போற்றி,

ஓம் நலமே தருவாய் போற்றி

என்று மலர்களைச் சமர்ப்பித்து போற்றி கூறி முடித்ததும் கற்பூர ஆரத்தி செய்ய வேண்டும். நிறைவாக,

* ஓம் விஷ்ணுப்ரியாய வித்மஹே வேத நாதாய தீமஹி

தந்நோ: ஸங்க ப்ரசோதயாத்

* சங்கு ரூப லக்ஷ்மி குபேர நாராயண ஸ்வாமினே நம:

* கற்பூர நீராஜன தீபம் தரிசயாமி என்று ஆர்த்தி செய்து பிரசாதம் எடுத்துக்கொண்டு சங்கு தீர்த்தத்தை வீட்டின் எல்லா பாகங்களிலும் தெளிக்கவேண்டும்.

- வழிபடுவோம்

சங்கு பூஜையால் ஏற்படும் நன்மைகள்

வலம்புரிச் சங்கு வீட்டில் இருந்தால் தோஷங்கள், துர்சக்திகள் நெருங்காமல் வீடு பாதுகாப்பாக இருக்கும்; மற்றவர்கள் பொறாமை யால் வைக்கும் ஏவல்கள் நம்மை நெருங்காமல் விலகிவிடும் என்பது நம்பிக்கை.

நீண்ட ஆண்டுகளாக செவ்வாய் தோஷம் காரணமாக திருமணம் தடைப்பட்டு வருந்தும் பெண்கள், 8 செவ்வாய்க்கிழமைகள் வலம்புரிச் சங்கில் பால் வைத்து, அங்காரகனுக்கு செவ்வரளி மலர்களால் 108 நாமாவளி அர்ச்சனை செய்தால், கைமேல் பலன் கிடைக்கும். பிறந்த குழந்தைகள் தொடர்ந்து அழுதுகொண்டிருந்தால் சுத்தமான பாலை சங்கில் ஊற்றிவைத்து, விநாயகரை வணங்கி ஒரு மணி நேரம் கழித்துக் கொடுத்தால் பலன் கிடைக்கும்.

கடன் தொல்லையிலிருந்து மீண்டு வர 16 சங்கு வடிவங்களைக் கோலமாகப் போட்டு, பௌர்ணமி இரவில் குங்குமத்தால் அர்ச்சனை செய்து, குளிகை காலத்தில் கடன் கொடுத்த வரை சந்தித்து சிறிதளவு பணத்தைத் திரும்பக் கொடுத்தால், விரைவிலேயே முழுக்கடனும் அடைபடும்.

சொந்தமான பழைய வீடு எவருக்கும் பயன் படாமல், விற்கவும் முடியாமல் பாழடைந்து கிடந்தால்... வாஸ்து பகவான் விழித்திருக்கும் நாளில், நடுவீட்டில் பிரம்ம ஸ்தானத்தில் வலம்புரிச் சங்கை வைத்து, அதில் வாஸ்து பகவானை எழுந்தருளச் செய்து, மஞ்சள், துளசி இட்ட நீரை வைத்து பூஜிக்கவேண்டும். பிறகு சங்கு தீர்த்தத்தை வேப்பிலையின் உதவியோடு வீடு முழுவதும் தெளிக்கலாம். அத்துடன், செப்பு நாணயம் ஒன்றை மஞ்சள் துணியில் முடிந்து, ஈசான்ய பாகத்தில் கட்டிவிட்டால், விரைவில் அந்த வீட்டை விற்கவோ புதுப்பிக்கவோ நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றிபெறும்.

குழந்தைப் பேறு இல்லாத பெண்கள் வலம்புரிச் சங்கில் பால், குங்குமப்பூ இட்டு சந்தான கணபதியை வரித்து, பூஜை செய்து, 48 தினங்களுக்கு கணவருடன் சேர்ந்து அருந்திவந்தால் பலன் கிடைக்கும்.

ஆலயங்களில் நடைபெறும் சங்காபிஷேக வைபவத்தில் கலந்துகொண்டு வழிபட தோஷங்கள் விலகும்; செல்வம் சேரும்.

ஒருவர் தமது நட்சத்திர அதிதேவதையையும், லட்சுமிகுபேரனையும் யோக எண் மற்றும் (சிறிய) பட உருவில் வலம்புரிச் சங்கில் வைத்து, சில காசுகளும் போட்டு வைத்து தினமும் வழிபட, அபரிமிதமான செல்வச் சேர்க்கை உண்டாகும்.

வீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-31



புத்தர் ஒருமுறை ஜப்பானில் உள்ள ஒரு ஆலயத்துக்குப் போயிருந்தார். அங்கு இருந்த புத்த பிக்குகளில் ஒருவரின் மேலாடை கிழிந்திருந்தது. அவர் மேல் பரிதாபப்பட்ட புத்தர், அவருக்கு ஒரு மேலாடையை வாங்கிக் கொடுத்தார். மகிழ்ச்சியோடு வாங்கிக் கொண்டார் அந்த புத்த பிக்கு.

சில மாதங்கள் கழித்து, மீண்டும் புத்தர் அந்த ஆலயத்துக்குச் சென்றிருந்த போது, அந்த புத்த பிக்குவைப் பார்த்து நலம் விசாரித்துவிட்டு, முன்பு அணிந்திருந்த மேலாடையை என்ன செய்தீர்கள்? என்று கேட்டார்.
அதற்கு அந்த புத்த பிக்கு, ‘என் மெத்தைக்கு விரிப்பாக இருக்கிறது’ என்றார்.

முன்பிருந்த மெத்தை விரிப்பு?
‘என் தலையணைக்கு உறையாக இருக்கிறது’

அப்போது முன்பிருந்த தலையணை உறை?
’என் வாசல் மிதியாக இருக்கிறது’

முன்பிருந்த வாசல் மிதி?
’என் விளக்குக்குத் திரியாக இருக்கிறது’ என்றார்

புத்தர், அந்த புத்த பிக்குவின் பதில்களைக் கேட்டு வியந்து போனார்.

பொருட்களை ரெட்யூஸ் (Reduce) , ரீயூஸ் (Reuse), ரீசைக்கிள் (Recycle) ஆகிய மூன்று வகையிலும் பயன்படுத்திய பிறகே, நாம் அதைக் குப்பையாகக் கருத வேண்டும். இப்படியான வாழ்க்கை முறையை வாழ்வது சரியான வழிமுறை. நம் வாழ்வில் நாம் பயன்படுத்தும் பொருட்கள் எதுவும் குப்பையல்ல. குப்பை என்ற நினைக்கப்படும் ஒரு பொருள், அழகு பொருளாக மாற்றப்பட்டு நம் வீட்டு வரவேற்பறையை அலங்கரிக்கும்.

இன்றைக்கு நமக்கு சவாலாக கருதப்படும் பிளாஸ்டிக் பொருட்களை எப்படி குறைப்பது? மறுசுழற்சி செய்வது? என தெரிந்து கொள்ளலாம்.

பொருட்களை எப்படி பயன்படுத்த வேண்டும்? - புத்தர் வியந்த சிஷ்யனின் பதில்!



Bhakthi Padalgal Peppers TV



Jaya Tv Arul Neram



காசி, வாரணாசி, பெனாரஸ் எனப் பல பெயர்களில் அழைக்கப்படும் காசிக்கு முகங்களும் நிறைய உண்டு. அது வயதானவர்களுக்கு முக்தி அடையும் ஸ்தலமாகவும், யாத்ரிகர்களுக்கு புனித நகரமாகவும், சுற்றுலாப் பயணிகளுக்கு ஆச்சரியங்கள் அளிக்கும் இடமாகவும் பல்வேறு முகங்களை கொண்டது.

பழமையான நகரம்

பெனாரஸ் என்றும் காசி என்றும் அழைக்கப்படும் வாரணாசி, தொடர்ச்சியாக மக்களின் வசிப்பிடமாக விளங்கும் உலகின் பழமையான நகரங்களுள் ஒன்றாகும். இங்கு கங்கை நதியில் ஒரு முங்கு முங்கி எழுந்தால் செய்த பாவங்கள் அனைத்திலிருந்தும் விமோச்சனம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்.

முக்தியின் கதை

அசுவமேத யாகம் செய்த சூர்ய வம்சத்தை சேர்ந்த சகரன் எனும் மன்னனின் இறந்துபோன மகன்களுக்கு முக்தி அளிப்பதற்காக கங்கா தேவி பூமியில் பிறப்பெடுத்து கங்கை நதியாக ஓடுவதாக புராணம் கூறுகிறது. அன்றிலிருந்து ஏராளமானோர் கங்கையில் அஸ்தியைக் கரைத்து தங்கள் முன்னோர்களின் ஆன்மாக்களை முத்தியடையச் செய்து வருகின்றனர்.

புனித நீராடல்

கங்கை நதியில் ஒரு முங்கு முங்கி எழுந்தால் செய்த பாவங்கள் அனைத்திலிருந்தும் விமோசனம் கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது. யாத்ரீகர்கள் பலர் சூரியோதயத்தின் போதும், சூரிய அஸ்த்தமனத்தின் போதும் இந்நதியில் புனித நீராடுகின்றனர்.

படித்துறைகள்

கங்கை நதிக்கு இட்டுச் செல்லும் படிக்கட்டுகள் போன்ற அமைப்பினாலான இந்த படித்துறைகள் பல்வேறு கோயில்களைக் கொண்டு, சமயம் சார்ந்த அனைத்து நடவடிக்கைகளும் நடைபெறும் முக்கிய மையமாகத் திகழ்கின்றன. இங்கு மொத்தம் 84 படித்துறைகள் இருக்கின்றன.

மணிகர்னிகா படித்துறை

மணிகர்னிகா படித்துறை தாம் வாரணாசியில் இறப்பு சுற்றுலா என்றழைக்கப்படும் காட்சியை வழங்குகிறது. இங்கு திறந்தவெளியில் சிதை மூட்டப்படுவதைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கூடுகின்றனர். கணேசர் கோயில் மற்றும் மஹா விஷ்ணுவின் பாதச்சுவடுகளைக் கொண்டுள்ள கல்பலகையான சர்ன்படுகா ஆகியவை இதன் அருகில் அமையப்பெற்றுள்ளன.

கியூவில் நிற்கும் பிணங்கள்

மணிகர்னிகா படித்துறையில் சில நேரம் பிணங்கள் அதிகமாக எரியூட்டப்பட இருக்கின்ற சந்தர்பத்தில் வரிசையில் நின்று காத்திருக்க வேண்டும். இறந்த பின்பும் கியூவில் நிற்கும் அவலத்தை என்னவென்று சொல்வது?!

பாம்பின் மீது நடனம்

காளிங்கன் என்ற பாம்பின் மீது நடனமாடிய ஸ்ரீ கிருஷ்ணரின் லீலைகள் சடங்காக கடைபிடிக்கப்படும் காட்சி.

மால்வியா பாலம்

வாரணாசியில் கங்கை நதிக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள மால்வியா பாலம் டஃப்ஃபரின் பாலம் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. 1887-ஆம் ஆண்டே கட்டப்பட்ட இந்தப் பாலம் ஒரு இரண்டடுக்கு பாலம் என்பது கூடுதல் சிறப்பு. அதாவது கீழ் தளத்தில் ரயில் செல்லும்படியாகவும், மேல் தளத்தில் மற்ற வாகனங்கள் செல்லும்படியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆணிப்படுக்கை

ஆணிப்படுக்கையில் சர்வ சாதாரணமாக படுத்திருக்கும் யோகி.

மிதக்கும் பாலம்

காசியில் கங்கை நதியின் மீது உருவாக்கப்பட்டிருக்கும் மிதக்கும் பாலம்.

பெனாரஸ் பான்

இந்திய முழுவதும் பெனாரஸ் பான் என்பது பிரபலம். நீங்கள் வாரணாசி வரும்போது பெனாரஸ் பானை சுவைக்க தவறிவிடாதீர்கள்.


ஆற்றில் மிதக்கவிடப்படும் அகல் விளக்குகள்!

நம்ம ஊர் திருவிழாக்களில் எலுமிச்சை பழத்தில் விளக்கேற்றி ஆற்றில் விடும் கட்சியை நம்மில் சிலர் பார்த்திருக்கலாம். அதேபோலத்தான் காசியிலும் தேவ் தீபாவளி பண்டிகையின் போது ஆயிரக்கணக்கான அகல் விளக்குகள் கங்கை நதியில் மிதக்கவிடப்படுகின்றன. அப்போது படித்துரைகளோடு சேர்ந்து கங்கை நதியும் ஒளிவெள்ளத்தில் மிதக்கும்!

புனித ஸ்தலமான காசியின் பல்வேறு முகங்கள்!.... ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் பிணங்கள்....



கடவுள் ஏன் சாத்தானை படைத்தார் என்பதற்கான அனைத்து காரணங்களையும் பரிசுத்த பைபிள் வெளியே சொல்வதில்லை. ஆனால் இதுவரை கடவுளால் உருவாக்கப்பட்ட அனைத்தும் மனிதனின் நன்மைக்கே என்பதை நீங்கள் அறிந்து கொள்வது மிகவும் முக்கியம்.

கடவுளால் இந்த உலகம் உருவாக்கப்பட்ட பொழுது, இந்த உலகமும், உலகில் வாழ்ந்து வந்த அனைத்து உயிரினங்களும் நல்லவையாகவே இருந்தன. ஆனால் பிசாசு தனது படைப்பாளருக்கு விரோதமாக கலகம் புரிந்த போது அதை மனிதர்களும் பின்பற்றி, பெரும் பாவத்தை புரிந்தார்கள். அதன் பின் அந்த பாவங்கள் இந்த பூமியில் நித்தியமாக வாசம் செய்யத் தொடங்கிவிட்டன.

பைபிளின் படி சாத்தான் யார்?

பரிசுத்த பைபிளின் படி, சாத்தான் என்பது ஒரு நபர், ஒரு மனிதன், மற்றும் ஒரு ஆன்மா ஆகும். அவர் ஒரு உண்மையான தனிநபர் என்பதால், சாத்தான் என்பது ஒரு கதை அல்ல. இந்த பூமியில் பரலோக தந்தையுடன் சேர்ந்து ஒரு பிசாசு, மற்றும் பல்வேறு பேய்கள் இருந்ததாக பரிசுத்த பைபிள் சொல்கிறது.

தீய சக்தி

புனித நூலில் பிசாசானது, பாம்பு, கொடிய டிராகன், சாத்தான், லூசிபையர் மற்றும் பெயெல்செபூல் என்று குறிப்பிடப்படுகின்றது. புனித நூலில் இவை அனைத்தும் ஒரு தீய செல்வாக்கு அல்லது ஒரு தீய சக்தி என்றே விவரிக்கப்படுகின்றது.

லூசிபையர்

இன்றைய உலகில் கிறிஸ்துவர்கள், கடவுள் சாத்தானைப் படைத்தார் என்று நம்புகின்றார்கள். ஆனால் அது உண்மை அல்ல! கடவுள் லூசிபையர் என்கிற சக்தி வாய்ந்த அபிஷேகத் தேவதையை உருவாக்கினார். அவருக்கு கடவுளின் படைப்புகளில் திருப்தி இல்லை.
அவர் கடவுளை விட அதிக சக்தி பெற விரும்பினார். மேலும் அவர் மற்ற எல்லா தூதர்களை விடவும் மேலே செல்ல விரும்பினார். எனவே அவர் கடவுளை எதிர்க்க தொடங்கினார். அவர் கடவுளால் அவருக்காக உருவாக்கப்பட்ட இடத்தில் தொடர்ந்து இருக்கவில்லை.

தோல்வியடைந்த லூசிபையர்

பெரும்பாலான மக்கள், லூசிபையர் மூன்றில் ஒரு பங்கு தேவதைகளை தன்னோடு சேர்த்துக் கொண்டு கடவுளை எதிர்க்கத் தொடங்கினார் என நம்புகின்றார்கள். ஆனால் பரலோகத்தில் லூசிபையர் கடவுளால் தோற்கடிக்கப்பட்ட பின்னர், அவர் பூமிக்குத் திரும்பினார். இவை அனைத்தும் வெளிப்படுத்துதல் புத்தகத்தின் 12:4 ம் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்றொரு காரணம்

கடவுள் மனிதனுக்கு செய்ததைப் போன்று, அவரது படைப்பு வேறு எந்த படைப்புகளுக்கு எதுவும் செய்ததில்லை என சாத்தான் நம்பியதே, லூசிபையர் கடவுளுக்கு எதிராக திரும்பியதற்கான மற்றொரு காரணம் என நம்பப்படுகின்றது.

தேவனால் மனிதன் பூமியிலே உருவாக்கப்பட்ட போது, மனிதன் கடவுளின் சாயலில் உருவாக்கப்பட்டதுடன், மனிதனுக்கு இந்த பூமியின் மீது நிபந்தனையற்ற அதிகாரம் வழங்கப்பட்டது. இது லூசிபையருக்கு எரிச்சலை உண்டு பண்ணியது.

வேறொரு வசனம்

புனித புத்தகத்தின் வசனங்களில், கடவுள் லூசிபையரை மிகவும் சரியாக மற்றும் பாவம் இல்லாமல் படைத்தார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது என விவிலிய அறிஞர்கள் தெரிவிக்கின்றார்கள். அது மேலும் கூசிபையரை "பிரகாசம்" அல்லது "காலை நட்சத்திரம்," எனக் குறிப்பிடுகின்றது.

மேலும் அது ஆதாம் மற்றும் ஏவாளைப் போன்று, மிகவும் சரியாக மற்றும் பாவம் இல்லாமல் தான் லூசிபையர் உருவாக்கப்பட்டார் என்று கூறகின்றது. ஆதியாகமம் 1:31, லூசிபையர் கடவுளை வழிபட மற்றும் அவரை துதிக்கவே உருவாக்கப்பட்டார் எனத் தெரிவிக்கின்றது.

கடவுள் ஏன் சாத்தானைப் படைத்தார் என்று தெரியுமா??


Aadhikesava Perumal Temple, Kadugalur Aalayangal Arputhangal Puthuyugam TV



Bhakthi Padalgal Peppers TV



ஒ ரு முறை நாரதர் காட்டு வழியே பயணம் செய்யும்போது, ஒருவன் ஆழ்ந்த தவத்தில் இருப்பதைக் கண்டார்.

நாரதரிடம், ‘‘தேவரிஷியே... எங்கு செல் கிறீர்கள்?’’ என்று கேட்டான் அந்த தவ சீலன்.

‘‘பூமியை சுற்றிப் பார்த்துவிட்டு, சொர்க்கத்துக்கு செல்வேன்!’’ என்றார் நாரதர்.

‘‘அப்படியானால், கடவுள் எனக்கு எப்போது முக்தி அளிப்பார் என்று மறக்காமல் கேட்டு வாருங்கள்’’ என வேண்டினான். நாரதர் அதை ஏற்றுக் கொண்டார்.

மற்றோரிடத்தில் ஒருவன் ஆடிப்பாடிக் கொண்டிருந்தான். நாரதரைக் கண்டதும், ‘‘நாரதரே, எங்கே போகிறீர் கள்?’’ என்றான். அவனது பேச்சில் ஒருவித அதிகாரமும் இறுமாப்பும் தொனித் தன.

நாரதர், ‘‘சொர்க்கத்துக்கு!’’ என்றார்.

‘‘அப்படியானால், நான் எப் போது முக்தி அடைவேன் என்று கடவு ளிடம் கேட்டு வாருங்கள்!’’ என்றான்.

‘‘சரி!’’ என்ற நாரதர், சொர்க்கம் சென்றார்.

மறுபடியும் பூவுலகத்துக்கு வந்த நாரதர். கடந்த முறை, பார்த்த தவசீலரை சந்தித்தார். நாரதரின் வரு கையை உணர்ந்த அந்த தவசீலர் கண் விழித்தார். சந்தோஷப்பட்டார். ‘‘சுவாமி... என்னைப் பற்றி கட வுளிடம் கேட்டு வந்தீர்களா?’’ என்றார்.

நாரதர் புன்சிரிப்புடன், ‘‘ஆமாம், தவசியே... நீ இன்னும் நான்கு தடவை பூமியில் பிறந்த பிறகுதான் உனக்கு முக்தி என்று கடவுள் கூறிவிட்டார்!’’ என் றார். உடனே, தவசீலர் அழத் துவங்கினார்.

‘‘இதற்காக ஏன் அழுகிறாய்?’’ என்றார் நாரதர்.

‘‘சுவாமி... நான் இவ்வளவு கடுமையாக விடா முயற்சியுடன் கடுந்தவம் செய்தும் கடவுள் இன்னும் மனம் இரங்கவில்லை. இந்த நிலையில் நான் மேலும் நான்கு பிறவிகள் எடுக்க வேண்டும் என்று சொல்லி விட்டாரே! அப்படியானால், நான் பெரும் பாவியல்லவா? அதை நினைத்துதான் அழுதேன்!’’ என்றான்.

நாரதர் அங்கிருந்து நகர்ந்தார். ஆட்டமும் பாட்டமுமாக முன்னர் சந்தித்த மனிதனிடம் வந்தார். அவன் நாரதரிடம், ‘‘என்ன நாரதரே! என் விஷயத்தைக் கடவுளிடம் கேட்டீர்களா?’’ என்றான்.

நாரதரும் ‘‘கேட்டேன்... கேட்டேன்’’ என்றார்.

‘‘என்ன சொன்னார்?’’

நாரதர் அமைதியாக, ‘‘அதோ! அந்த புளிய மரத்தைப் பார். அதில் எத்தனை இலைகள் இருக்கின்றனவோ, அத்தனை பிறவிகள் உனக்கு இன்னும் உள்ளன. எனவே, அதன் பிறகுதான் முக்தி என்று கடவுள் திட்டவட்டமாகக் கூறிவிட்டார்’’ என்றார் நாரதர்.

‘‘ஆஹா, இது எவ்வளவு மகிழ்ச்சியான விஷயம். எனக்கு இவ்வளவு விரைவில் முக் தியா? என்னால் நம்ப முடியவில்லையே’’ என்றபடி ஆடிப் பாடினான் அவன். இதைக் கண்ட நாரதர் திகைத்தார். அப்போது அசரீரி ஒன்று ஒலித்தது.

‘‘அன்பு மகனே, நான் உனக்கு இக்கணமே முக்தி தந்தேன்!’’ அவன் முக்தியடைந்தான்.

நாரதர் அசரீரியிடம் கேட்டார்:

‘‘உங்கள் செயலின் அர்த்தம் எனக்கு விளங்க வில்லையே?’’

‘‘விருப்பு-வெறுப்பு அற்றவன்தான் உண்மை யான ஞானி. அவனை கவலை, மகிழ்ச்சி, பயம், துக்கம், பாவ-புண்ணியம் எதுவும் பாதிக்காது. அவன் இறைவனுக்குச் சமமானவன். இந்த மனிதன் தன்னுடைய ஆட்டம் பாட்டம் கூத்து போன்றவற்றை விடாப்பிடியாகச் செயல்படுத்தினான். நீர் அவனுக்கு புளிய மரத்தின் இலைகள் அளவுக்குப் பிறவி எடுத்த பின்தான் முக்தி என்றீர். அதற்காகவும் அவன் கலங்கவில்லை. ஆனால், தவசியோ நான்கு பிறவிகள் எடுப்பதையே கடினம் என்றான். ஆகவே, அழுது, கடவுளே இல்லையென்றும் எண்ணினான். ஆனால், இரண்டாவது மனிதனுக்கோ சகிப்புத் தன்மையுடன், பொறுமையும் இருந்தது. அதற் காகவே அவனுக்கு உடனடியாக முக்தி வழங்கி னேன்.’’ என்றது அசரீரி. இந்த பதிலைக் கேட்ட நாரதர் மௌனமானார்.

இறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை!

முக்தி எப்போது?


Bhakthi Padalgal Peppers TV