நான் அப்படி எதுவும் செய்யவில்லை : நடிகர் விஷால் மறுப்பு
சமீபத்தில் நடந்து முடிந்த நட்சத்திர கிரிக்கெட் சம்பந்தமாக, என்னை பற்றி வெளியான செய்திகள் அனைத்தும் பொய்யானவை என்று நடிகர் விஷால் விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக நிதி திரட்டும் பொருட்டு, தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் சமீபத்தில் நட்சத்திர கிரிக்கெட் நடத்தப்பட்டது. அதில் தமில், தெலுங்கு, மலையாள மற்றும் பல மொழி நடிகர்கள் கலந்து கொண்டு விளையாடினர்.
அந்த விளையாட்டிற்கு ரசிகர்கள் சரியான வரவேற்பு கொடுக்கவில்லை என்று விஷால் கோபமாக கூறியதாகவும், மைதானத்தில் நடிகர் அஜீத்தின் பாடல் ஒளிபரப்பப்பட்டபோது, விஷால் அதை நிறுத்தச் சொன்னதகவும் செய்திகள் வெளியானது.
இதுபற்றி தன்னுடைய சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ள விஷால் “நான் அஜீத்தின் பாடலை நிறுத்தச் சொன்னதாக ஒரு செய்தியும், நான் கூறியதாக ஒரு அபத்தமான பேட்டி ஒன்றும் வெளியாகியுள்ளது.
இது மிகவும் சிறுபிள்ளைத்தனமானது. நான் கூறாத ஒன்றை எப்படி என்னுடைய கருத்தாக சொல்லமுடியும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Labels:
cinema news
,
other
No comments :
Post a Comment