சோ.ராமசாமி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

Share this :
No comments


மூத்த பத்திரிகையாளர் சோ.ராமசாமி, மூச்சு திணறல் காரணமாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பத்திரிகையாளர், நடிகர் என பன்முகப் பணிகளைச் மேற்கொண்டவர் "சோ" என்று அழைக்கப்படும் சோ.ராமசாமி. இவர் துக்ளக் பத்திரிகையின் ஆசிரியராக இருந்து வருகிறார்.

அவருக்கு அவ்வப்போது உடல் நல பாதிப்பு ஏற்பட்டு வருகின்றது. சமீபத்தில், மூச்சு திணறல் காரணமாக, கடுமையாகப் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பெற்று நலமடைந்தார்.

இந்நிலையில், சோவிறகு மீண்டும் மூச்சு திணறலால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் துன்பப்பட்டு வந்த அவர் சென்னை, ஆயிரம் விளக்கு பகுதியிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்கை அளிக்கப்பட்டு வருகின்றது.

No comments :

Post a Comment