ரகசியங்களை போட்டு உடைக்கும் ப்ரியன்

தமிழக மூத்த பத்திரிக்கையாளர்களில் ஒருவரான ப்ரியன் தனது அரசியல் மற்றும் பத்திரிக்கை அனுபவங்களில் கிடைத்த ரகசியங்களை போட்டு உடைக்கப்போகிறாராம். தமிழக மூத்த பத்திரிக்கையாளர்களில் ஒருவரான ப்ரியன் பத்திரிக்கையாளர்கள் மத்தியிலும், அரசியல்வாதிகள் மத்தியிலும் நல்ல மதிப்பும் மரியாதையும் உண்டு. களநிலவரங்களை வாசகர்களுக்கு சுவாரஸ்யமாக இருக்கும் வகையில் மிக அற்புதமாக கொண்டு செல்லும் ஏழுத்தாற்றல் பெற்றவர். இந்த நிலையில், இதுவரை தனக்கு தமிழக அரசியல் மற்றும் பத்திரிக்கைகளில் கிடைத்த அனுபவங்களை தொகுத்து எழுத உள்ளார். அதில், பல அரசியல் தலைவர்களின் சித்துவிளையாட்டு, அரசியல் சாதுர்யம், அண்டர்கிவுரண்ட் அரசியல், தேர்தல் சூதாட்டம் போன்றவற்றை போட்டு உடைக்கப்போகின்றாரம். தமிழக சட்ட மன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ப்ரியனின் எழுத்து யார் யார் எல்லாம் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தப்போகிறதோ என பல அரசியல் தலைவர்களும் அச்சத்தில் உள்ளார்களாம். இதனால், அவர் நலன் விரும்பிகளிடம், சார்... கொஞ்சம் அமைதி காக்ககூடாதா என கோரிக்கைகள் விழுந்த வண்ணம் உள்ளதாம். ஆனால், ரகசியங்களை வாசகர்களுக்கு கொண்டு சேர்பதில் ப்ரியன் உறுதியாக உள்ளாராம்.
Labels:
other
,
politics
No comments :
Post a Comment