பிரதாப்போத்தன் படத்தில் துல்கருடன் நடிக்கும் மாதவன்

Share this :
No comments

பிரபல நடிகரும், இயக்குனருமான பிரதாப்போத்தன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு படத்தை இயக்குகிறார். இங்கல்ல மலையாளத்தில். இந்தப் படத்தின் திரைக்கதையை உஸ்தாத் ஹோட்டல் படத்தின் திரைக்கதையாசிரியரும், பெங்களூர் டேய்ஸ் படத்தை எழுதி இயக்கியவருமான அஞ்சலி மேனன் எழுதியுள்ளார். துல்கர் சல்மான், தன்ஷிகா நடிக்கின்றனர். இந்தப் படத்தில் முக்கியமான வேடம் ஒன்றில் மாதவன் நடிக்கிறார். மாதவன் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று அவரிடம் பிரதாப்போத்தன் கதையை சொல்ல, மாதவனும் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இளையராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

No comments :

Post a Comment