எனக்கு அரசியல் சொல்லிக் கொடுத்தவர் கருணாநிதி: குஷ்பு
திமுகவில் இருந்து பிரிந்து காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட நடிகையும் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளருமான குஷ்பு நேற்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார். திமுகவில் ஏற்பட்ட மனக்கசப்பால் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்த குஷ்பு இரண்டு ஆண்டுகளுக்கு பின் திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுர இல்லத்தில் சந்தித்து ஆசி பெற்றார். திமுகவும், காங்கிரசும் கூட்டணி அமைத்து இந்த சட்டசபை தேர்தலை சந்திக்கின்றன. இந்நிலையில் திமுக தலைவரை சந்தித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார் குஷ்பு. செய்தியாளிர்களிடம் பேசிய குஷ்பு எனக்கு அரசியல் சொல்லிக் கொடுத்தவர் கருணாநிதி, அவர் மீது உள்ள மரியாதையில் அவரை சந்தித்ததாக கூறினார். மேலும் தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும் முன்பு அவரை சந்தித்து வாழ்த்து பெற வந்ததாகவும் குஷ்பு கூறினார். அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் பிரச்சாரக் கூட்டத்தில் உயிரிழந்தவர்கள் பற்றி பேசிய குஷ்பு அதிமுக அரசு அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டினார்.
Labels:
other
,
politics
No comments :
Post a Comment