சமத்துவத்தை போற்றும் இந்த மதங்களை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?

Share this :
No comments

சயின்டாலஜி

பல்வேறு மதங்களில் இருந்து எடுக்கப்பட்ட நல்ல விஷயங்களைக் கொண்ட சிறப்பான மதம்தான் சயின்டாலஜி. நவீன மன நல அறிவியல் மூலம் கடவுளை உணர வேண்டும் என்பது சயின்டாலஜியின் நோக்கம். சயின்டாலஜி என்பது உங்களை, உங்கள் வாழ்க்கையை, உங்கள் குடும்பத்தை, நண்பர்களை, உலகை, கடவுளை அறிவதுதான் ஆன்மிகம் என்ற எளிய தத்துவத்துடன் கட்டமைக்கப்பட்டுள்ளது.

'ரான் ஹப்பர்டு' என்பவர்தான் இந்த மதத்தை உருவாக்கினார். அமெரிக்காவைச் சேர்ந்த இவர் அறிவியல் எழுத்தாளர். 'இந்த கடவுளைதான் வணங்க வேண்டும். இந்த கடவுளின் போதனைகளைதான் பின்பற்ற வேண்டும்' என்ற கட்டாயம் இந்த மதத்தில் இல்லை. 'மக்கள் தங்களது சுய சிந்தனை மூலம் விழிப்பு உணர்வு ஏற்பட்டு வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும்' என்கிறது இந்த மதம். 'சயின்டாலஜி மதம்' சார்பில் 167 நாடுகளில் சயின்டாலஜி சர்ச் உள்ளது. ஐந்து வயது முதலே குழந்தைகளை இங்கு சேர்க்கலாம். குழந்தைகளுக்கு அனைத்து நவீன பயிற்சிகளையும் கொடுத்து வளர்ப்பார்கள். ராணுவம் போன்ற கட்டுப்பாடான சூழ்நிலையில் வளரும் குழந்தைகள், தீய பழக்கம் இல்லாமல் வளருவார்கள். 21-ம் நூற்றாண்டில் வேகமாக வளரும் மதமாக சயின்டாலஜி உள்ளது.

பஹாய்

பஹாய் மதம் ஈரானில் தோன்றியது. இஸ்லாமிய நாட்டில் இம்மதம் தோன்றினாலும், உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு மதங்கள் பின்பற்றும் நம்பிக்கையை இது ஏற்றுகொண்டுள்ளது. அனைத்து மதங்களிலும் உண்மை உள்ளது என்பதை ஒப்புக்கொள்கிறது. அல்லாஹ், ஏசு, கிருஷ்ணர் போன்ற உலக கடவுள்கள் அனைவரும் இம்மதத்தின் இறைத்தூதர்களாக உள்ளனர். 235 நாடுகளில் 10 லட்சம் மக்கள் பஹாய் மதத்தை பின்பற்றுகின்றனர்.

பஸ்தஃபாரியன்


பஸ்தஃபாரியன் மதம் என்பது கடந்த 2005-ம் ஆண்டு அமெரிக்க கல்லூரி மாணவரால் உருவாக்கப்பட்டது. இந்த மதத்தின் கடவுளாக பறக்கும் இடியாப்ப அரக்கன் இருக்கிறார். இந்த மதத்தை நெதர்லாந்து, நியூசிலாந்து போன்ற நாடுகள் அங்கீகரித்துள்ளன. இந்நிலையில், இந்த மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கென முதல் திருமணம், நியூசிலாந்தில் உள்ள தேவாலய உறுப்பினர்களான, டோபி ரிக்கெட்ஸ் மற்றும் மரியானா ஃபென் ஆகியோர் இடையே நடந்தது. கடலில் பயணம் செய்துகொண்டிருந்த கப்பலில் இத்திருமணம் நடைபெற்றது. மணமகனும், மணமகளும் முறைப்படி சத்திய பிரமாணம் எடுத்துக்கொண்டு புது வாழ்க்கையைத்

No comments :

Post a Comment