உலகில் வாழும் அனைவருக்குமே ஒருசிலவற்றில் அடிமைத்தனம் மற்றும் பயம் போன்றவை நிச்சயம் இருக்கும். அத்தகைய அடிமைத்தனம் மற்றும் பயமானது அவ்வளவு எளிதில் ஒருவரை விட்டு நீங்காது. குறிப்பாக பயம் நீங்குவது மிகவும் கஷ்டம்.
இந்த மாதிரியான பயம் உருவாவதற்கு மூடநம்பிக்கையும் ஒரு காரணம் என்று சொல்லலாம். எப்படியெனில் யாராவது எதையாவது சொன்னால், அதில் உள்ள உண்மையை உணராமல், அதனை கண்மூடித்தனமாக நம்பி தேவையில்லாமல் பயப்பட ஆரம்பிக்கின்றனர்.
எவ்வளவு தான் மார்டன் உலகமாக மாறினாலும், இன்றும் பல மக்கள் சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட பயப்படுகின்றனர். இங்கு அப்படி உலகில் உள்ள மக்கள் பயப்படும் சில விஷயங்களைக் கொடுத்துள்ளோம். இவற்றைப் பார்த்தால் அனைத்தும் சின்ன விஷயங்களாகத் தான் இருக்கும். இருப்பினும் இதற்கு இன்றும் நம் மக்கள் பயப்படுகிறார்களே!
1) நாய்கள்
செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் நாய் நல்ல நண்பனாக இருக்கும் என்று சொல்வார்கள். ஆனால் சிலருக்கோ நாய் ஒரு பெரிய எதிரி. இதனைப் பார்த்தாலே, அது இருக்கும் இடத்திற்கு செல்லமாட்டார்கள். அதற்கு காரணம், யாராவது அவர்களிடம் நாயைப் பற்றி தவறாக சொல்லியிருப்பார்கள் அல்லது அனைத்து நாய்களின் குணமும் கடிப்பது என்று நினைத்திருப்பது.
2) எலிகள்
இன்றும் பெரும்பாலானோர் பயப்படும் ஒன்று என்றால் அது எலி. உண்மையில் எலி தான் நம்மைப் பார்த்து பயப்படும். ஆனால் பலர் இந்த சிறிய எலியை வீட்டில் பார்த்தால், ஏதோ பேயைப் பார்த்தது போல் கதறுவார்கள்.
3) இரத்தம்
உங்களுக்கு மட்டும் தான் இரத்தம் என்றால் பயமாக உள்ளது என்று நினைக்க வேண்டாம். ஏனெனில் உலகில் பல மில்லியன் மக்கள் இரத்தத்தைப் பார்த்தால் பயத்தில் மயக்கம் போட்டு விடுகிறார்கள்.
4) உயரம்
உயரத்தைக் கண்டு கூட பயப்படும் மக்கள் உள்ளனர். அப்படி உயரத்திற்கு பயப்படும் மக்கள், ஏணி ஏறுவது, லிப்ட் அல்லது எஸ்கலேட்டரில் செல்வது, உயரமான கட்டிடத்தின் ஜன்னல்களில் இருந்து இயற்கையை ரசிப்பது என்று எதையும் செய்யவே மாட்டார்கள்.
5) இருட்டு
இருட்டைக் கண்டு பயப்படுவோரின் எண்ணிக்கை அதிகம். ஏனெனில் இருட்டான இடத்தில் தான் பேய் உள்ளது என்று யாரோ சொல்லிய கட்டுக்கதைகளை நம்பி இன்றும் பலர் இருட்டான இடத்திற்கு துணையின்றி செல்லவேமாட்டார்கள்.
மேலும் இருட்டைக் கண்டு பயப்படுவோர் இரவில் தூங்கும் போது கூட லைட் போட்டுக் கொண்டு தான் தூங்குவார்கள். இது முற்றிய நிலையில் கண்களை மூடி தூங்கக் கூட பயப்படுவார்கள். சப்தம் சப்தம் என்றால் கூட பயப்படும் மக்கள் இவ்வுலகில் உண்டு. உதாரணமாக இடி இடிப்பது, திடீரென்று கதவைத் தட்டுவது.
6) பாம்பு
பாம்பு என்றால் படையே நடுங்கும் என்று சொல்வார்கள். அத்தகைய பாம்பைக் கண்டு பயப்படாதோர் இவ்வுலகில் குறைவு தான். ஆனால் அதற்காக உடலில் ஏதேனும் சிறு பூச்சி ஊர்ந்து வந்தால் கூட, பாம்பு என்று நினைத்து பயப்படும் மக்கள் ஏராளம். அதுமட்டுமின்றி, திடீரென்று பாம்பு என்று சொன்னால் கூட அளவுக்கு அதிகமாக பயப்படுவார்கள்.
7) பல்லி
வீட்டின் ஒரு ஓரத்தில் பல்லி இருந்தால் கூட, இவர்களின் பயத்தால், அமைதியாக இருக்கும் பல்லி பயந்து ஓடும் அளவில் கத்தி ஊரையே கூட்டுவார்கள்.
8) சிலந்தி
உலகில் சிலந்தியைக் கண்டு பயப்படுவோரும் உள்ளனர். அதற்கு இந்த சிலந்தியின் உருவம் வித்தியாசமாக இருப்பதால் தான். அதுமட்டுமின்றி, இதனைப் பார்த்தாலே சிலர் இது தன்மீது ஊர்ந்து செல்வது போல் கற்பனை செய்து பயப்படுவார்கள்.
9) விமானம்
பொதுவாக அனைவருக்கும் விமானத்தில் செய்ய ஆசையாக இருக்கும். ஆனால் சிலரோ அந்த விமானத்தில் செல்ல பயப்படுவார்கள் என்பது தெரியுமா? ஆம் அப்படியும் சில மக்கள் உள்ளனர். இப்படி விமானத்தில் செல்ல பயப்படுபவர்களுக்கு ஏரோஃபோபியா என்று பெயர். உங்களுக்கு இதுல எத பாத்தா பயம்ன்னு எங்ககிட்ட சொல்லலாம்ல.
No comments :
Post a Comment