வெற்றிகரமான வாழ்க்கையை வாழ நீங்கள் பெரிதாக எதையும் படிக்க தேவையில்லை, உறவுகளை தவிர. பெரிதாக பயிற்சி எதுவும் தேவையில்லை, விடா முயற்சி மட்டுமே போதுமானது.
திருமணத்திற்கு முன்னர் வரை உங்கள் தாய், தந்தை செய்து வந்ததை திருமணத்திற்கு பிறகு நீங்கள் செய்ய ஆரம்பிக்க வேண்டும். குடும்ப பொறுப்பு, பிள்ளை வளர்ப்பு, காதல், அரவணைப்பு, என கணவன், மனைவி உறவென்பது தான் இல்லறத்தின் ஆணிவேர். அது சற்று வலுவிழந்து போனாலும், ஒட்டுமொத்த குடும்பமும் ஆட்டம்கண்டுவிடும்.
பணம் பணம் என்பது பொருளை வாங்க மட்டுமே உதவும், மனதையும், உறவையும் அல்ல என்பதை புரிந்து நடந்துக் கொள்ளுதல் வேண்டும்.
காதல் அனைவர் மீதும் காதல் வைப்பது தவறல்ல. ஆனால், ஒருவருக்கு தெரியாமல், ஒருவர் மீது காதல் செலுத்துவது தான் தவறு. உறவுகளில் காதல் துரோகம் செய்தல் கூடாது.
பிள்ளை வளர்ப்பு "எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே அவை நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன் னையின் வளர்ப்பினிலே " என்ற பாடல் வரியை போல பிள்ளை வளர்ப்பில் சிறந்து விளங்க வேண்டும்.
குடும்ப அக்கறை மனைவி, பிள்ளைகள், அவர்களது உடல்நலம், எதிர்காலம் போன்றவற்றின் மீது சரியான அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.
50-50 தொழிலாக இருப்பினும், சரி அலுவலக வேலையாக இருப்பினும் சரி. குடும்பம், வேலை என இரண்டையும் இரு கண்களாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
தாம்பத்தியம் தாம்பத்தியம் என்பது புரிதலில் துவங்க வேண்டும். இருவரின் மனதும் அதற்கு இணைங்கி நடக்க வேண்டும்.
புரிதல் உறவில் சந்தேகம் புகுந்துவிட்டால், சந்தோஷம் குலைந்துவிடும். முடிந்த வரை அனைத்தையும் மனதினுள் புதைத்து வைப்பதற்கு பதிலாக நேரடியாக கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள்.
No comments :
Post a Comment