பாமக எம்.பி. வீட்டில் பணிப்பெண் தூக்குபோட்டு தற்கொலை - காதல் தோல்வி காரணமா?

Share this :
No comments



காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் அன்புமணி ராமதாஸ் வீட்டில் பணியாற்றி வந்த இளம்பெண் மாலினி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் இல்லத்தில், வேலூர் மாவட்டம் அரக்கோணத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் மகள் மாலினி [19], கடந்த ஓராண்டாக பணியாற்றி வந்தார். அரக்கோணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும், மாலினியும் ஒருவரையொருவர் காதலித்து வந்ததாக தெரிகிறது.

அண்மைக்காலமாக மாலினியுடன் பேசுவதை அவரது காதலன் தவிர்த்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆடிக்கிருத்திகைக்கு சென்னையிலிருந்து, சொந்த ஊரான அரக்கோணத்திற்கு மாலினி சென்றுள்ளார். அப்போது தனது காதலனை சந்தித்து தன்னைவிட்டு பிரிய வேண்டாம் என கேட்டுள்ளார்.

அதற்கு அவர் மறுத்துவிட்டதாக தெரிகிறது. இரண்டு நாட்களுக்குப் பின்னர் மீண்டும் நேற்று சென்னை வந்த மாலினி, தனது காதலனை அலைபேசியில் தொடர்புகொண்டுள்ளார். தன்னைப் பிரிய வேண்டாம் என நள்ளிரவு ஒரு மணிவரை அவரிடம் கெஞ்சியுள்ளார்.

என்னை ஏற்காவிட்டால் நாளை என்னுடைய பிணத்தைத்தான் நீ பார்ப்பாய் என்றும் கூறியுள்ளார். இருப்பினும் மாலினியின் காதலன் அவரை ஏற்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாலினி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

No comments :

Post a Comment