மதுவிலக்கு போராட்டத்தில் மாணவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம்: விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

Share this :
No comments



சென்னை நொளம்பூரை சேர்ந்த சுலோசனா. உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனுவில், ‘டாஸ்மாக் மதுபான கடையை அகற்ற கோரி பச்சையப்பன் கல்லூரி முன்பு நடந்த போராட்டத்தில் என் மகன் சாரதி (வயது 28) கலந்து கொண்டார். அவர் மீது பொதுச் சொத்தை சேதப்படுத்தியதாக போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
சிறையில் என் மகன் உள்ளிட்டோரை சிறை துறை கண்காணிப்பாளர்கள் சிலர் கொடூரமாக அடித்து சித்ரவதை செய்துள்ளனர். இதனால், என் மகன், அவனுடன் கைதானவர்கள் உடல் முழுவதும் காயத்துடன், எந்த ஒரு சிகிச்சையும் வழங்கப்படாமல் சிறையில் உள்ளனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இடைக்கால ஜாமீனும் வழங்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் தமிழ்வாணன், செல்வம் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘பச்சையப்பன் கல்லூரி முன்பு நடந்த மதுவிலக்கு போராட்டம், அதை தொடர்ந்து நடந்த சம்பவங்கள் குறித்து மாவட்ட நீதிபதி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளனர். விசாரணையை வருகிற 17 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

No comments :

Post a Comment