இந்தியாவின் வடமாநிலங்களில் நிலநடுக்கம்: அச்சத்தில் மக்கள்
ஜம்மு காஷ்மீர், ஹரியானா உள்ளிட்ட வடமாநிலங்களில் நில அதிர்வு இன்று உணரப்பட்டது.ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் ஹிந்துகுஷ் பகுதியை மையமாக கொண்டு நில அதிர்வு உணரப்பட்டது. இந்த நில அதிர்வு ரிக்டர் அளவு கோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது.
இதன் எதிரொலியாக வட இந்தியாவில் உள்ள 7 மாநிலங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் கட்டங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அலறியடித்து வெளியேறினர்.
இந்த நில அதிர்வால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
Labels:
News
,
other
No comments :
Post a Comment