முதலிரவில் மனைவியை ஆபாச வீடியோ எடுத்த கணவர்
முதலிரவில் தன்னை ஆபாச வீடியோ எடுத்ததாகவும், கூடுதல் வரதட்சினை கேட்டு மாப்பிள்ளை வீட்டார் மிரட்டுவதாகவும் இளம் பெண் காவல்துறையினரிடம் புகார் கொடுத்துள்ளார்.
நாகர்கோவில் களியக்காவிளை, கோட்டாரைச் சேர்ந்தவர் நிவேதாகுமாரி. அவருக்கு வயது 20. இவர் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்னை கொடுத்துள்ளார்.
நிவேதாகுமாரி அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–
எனக்கும், களியக்காவிளை அருகே உள்ள மடிச்சலைச் சேர்ந்த சஜூவுக்கும் கடந்த ஜூன் மாதம் 17 ஆம் தேதி திருமணம் நடந்தது. சஜூ வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார்.
திருமணத்தின்போது நாங்கள் வரதட்சணையாக 25 பவுன் நகையும், ரூ.75 ஆயிரம் ரொக்கமும் கொடுத்தோம். திருமணத்தன்று இரவு சஜூவின் வீட்டில் எங்கள் முதலிரவு நடந்தது.
அப்போது சஜூ என்னை ஆபாசமாக வீடியோ எடுத்தார். இதை பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன். அவரை கண்டித்து விட்டு நான் அறையில் இருந்து வெளியே வந்தேன்.
சஜூ ஆபாச வீடியோ எடுத்தது பற்றி எனது மாமனார் சரசப்பனிடம் சொன்னேன். அவர் தனது மகனை கண்டிப்பதற்கு பதில் அவன் அப்படித்தான், இதை வெளியில் சொன்னால் உன் வாழ்க்கை சீரழிந்து விடும் என கூறி என்னை எச்சரித்தார்.
அதன்பிறகு என்னிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்த தொடங்கினர். வாஷிங் மெஷின், கூடுதலாக ரூ.1 லட்சம் பணம் வேண்டும் என்று சஜூவும் அவரது குடும்பத்தினரும் என்னை சித்ரவதை செய்தனர்.
எனவே சஜூ மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, சஜூ, அவரது தந்தை சரசப்பன், தாயார் பேபி, உறவினர் அம்பிகா ஆகிய 4 பேர் மீது காவல்துறையினரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Labels:
News
,
other
No comments :
Post a Comment