நாங்கள் செய்யாததை செய்த வீரர் - விஷாலுக்கு கமல் பாராட்டு
உலகத் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (பெப்ஸி) சார்பில் சிறப்பு மே தினவிழா கொண்டாடப்பட்டது.
இசைக் கலைஞர்கள் சங்கத்தின் அரங்கில் இது நடந்தது. மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தாத்தாத்ரேயா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
இவ்விழாவில் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும் போது, "இது வாழ்த்து மேடை இல்லை என்றாலும் இதைச் சொல்ல வேண்டும். நாங்கள் நாற்பது ஆண்டுகளாக குரல் கொடுத்துக் கொண்டிருந்தோம். ஆனால் நாங்கள் செய்யத் தவறியதை விஷால் குழுவினர் செய்து காட்டினார்கள்.
நாங்கள் செய்யத் தவறியதை செய்த வீரர் என்கிற பட்டத்தை விஷாலுக்குக் கொடுத்தால் தவறில்லை. நாங்கள் செய்யவில்லை. நீங்கள் செய்தீர்கள். எங்களுக்கு சட்டை அழுக்காகி விடுமோ என்கிற பயம் இருந்தது. ஆனால் சட்டையே இல்லாமல் போய்விடுமோ என விஷால் குழுவினர் இறங்கினார்கள். செய்து காட்டினார்கள்" என்று விஷாலையும், நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளையும் கமல் பாராட்டினார்.
Labels:
cinema news
,
other
No comments :
Post a Comment