2017 முதல் அனைத்து செல்போன்களிலும் 'பேனிக் பட்டன்' கட்டாயம்!

Share this :
No comments

புதுடெல்லி: 2017-ம் ஆண்டு முதல் அனைத்து செல்போன்களிலும் 'பேனிக் பட்டன்' கட்டாயம் பொருத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, அனைத்து செல்போன்களிலும் பேனிக் பட்டன் மற்றும் குளோபல் பொசிஷனிங் சிஸ்டம் வசதி ஏற்படுத்தும் திட்டம் 2016-ன் கீழ் மத்திய தொலைத் தொடர்புத்துறை அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 2017 ஜனவரி 1-ம் தேதி முதல் இந்தியாவில் உள்ள அனைத்து செல்போன்களிலும் 'பேனிக் பட்டன்' வசதி இருப்பது அவசியம் எனவும், 2018 ஜனவரி 1-ம் தேதி முதல் அனைத்து செல்போன்களிலும் உட்கட்டமைக்கப்பட்ட ஜிபிஎஸ் வசதி இருப்பது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் கூறுகையில், ''தொழில்நுட்பம் மனித வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு உதவ வேண்டும் என்ற அடிப்படையில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது'' என்றார். ஒருவருக்கு ஆபத்து ஏற்படும்போது, இந்த பேனிக் பட்டனை அழுத்தினால் அருகிலிருக்கும் பாதுகாப்பு மையத்துக்கு ஒரு அழைப்போ அல்லது ஒரு குறுஞ்செய்தியோ சென்று விடும். இருப்பினும், இந்த செயல்பாடு எப்படி நடைமுறைப்படுத்தப்படும் என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

No comments :

Post a Comment