கெயில் பைப் லைன் மூலம் விவசாய நிலம் எவ்வாறு பாதிக்கப்படும்?: பொறியியல் விளக்கம்

Share this :
No comments




கேரள மநிலத்தில் இருந்து தமிழகத்தின் 7 மாவட்டங்களின் விளை நிலங்கள் வழியாக கர்நாடக மாநிலத்துக்கு எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்திற்கு தமிழக அரசின் தடையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. இதற்கு தமிழக விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் என தமிழகத்தின் பல தரப்பட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கெயில் நிறுவனம் பதிக்க இருக்கும் ஆயில் பைப் லைன் எவ்வாறு இயங்க இருக்கிறது. அதன் வடிவமைப்பு, அதனால் தமிழக விவசாய நிலம் எவ்வாறு பாதிக்க இருக்கிறது என்பதன் பொறியியல் விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கெயில் நிறுவனம் பதிக்க போகும் ஆயில் பைப் லைன் மொத்த நீளம் 547 கிமீ ஆகும். சாதாரணமாக 100 மீ தூரத்திற்கு நீங்கள் பக்க வாட்டு திசையில் குழாய் மூலம் திரவத்தை அனுப்ப 3 Bar அழுத்தம் தேவை அதாவது 3 Bar = 3 Kg/Cm~2 ஆகும்.


1 Bar என்பது 10 மீ (32 அடி) உயர மாடியிலிருந்து ஓர் பொருளை கீழ் நோக்கி போட்டால் என்ன வேகத்தில் தரையை தொடுமோ அந்த விசை தான் 1 Bar அல்லது 1 Kg/cm`2 ஆகும். நீர் தேக்க தொட்டியில் இருந்து மொட்டை மாடிக்கு நீரை அனுப்ப குழாய் வடிவமைப்பு செய்யும் போது கீழ்க்கண்ட வாறு கணக்கு எடுத்து கொள்ளுவார்கள்.

செங்குத்து குழாய் லைனுக்கு 1 மீட்டருக்கு 1 Bar தேவை. இங்கே, ஒரே நேர் கோட்டிலோ அல்லது முழுவதும் படுக்கை வாக்கிலோ குழாயை கொண்டு செல்லும் போது இந்த கணக்கீடில் 6-இல் 1 பங்கு எடுத்து கொண்டால் போதும்.

காரணம் இந்த Bar அழுத்தம் என்பது செங்குத்தான மேல் நோக்கிய விசையில் நீரை செலுத்த பயன்படுத்தும் சூத்திரம், 547/6 = 91.1 ஆகும் 91.1-ஐ 92 ஆக எடுக்கலாம். ஆகையால் 92 மீட்டர் செங்குத்து அழுத்தம் கொடுத்தால் போதுமானது.

1 Bar செங்குத்து அழுத்தம் வானத்தை நோக்கி 1 மீட்டர் உயரத்தில் செல்லும். அப்படியெனில் 90 மீட்டர் சராசரியாக மேலே செல்லும், அதே பக்க வாட்டில் 90x3 = 270 மீட்டர் தூரத்திற்க்கு திரவத்தை பீய்ச்சி அடிக்கும்.

உதாரணம்: நிலத்தின் கீழே பதிக்கப்பட்ட குழாயில் சிறு துளை ஏற்பட்டாலும் 270 மீ அல்லது 880 அடி தூரத்திற்கு ஆயிலை விளை நிலங்களில் பீய்ச்சி அடிக்கும். அதன் பின் விவசாயம் என்பதையே மறந்து விட வேண்டியது தான்.

கெயில் நிறுவனம் இப்போது எடுத்து இருக்கும் கணக்கு அல்லது அரசின் அறிவுரை படி தங்கள் படிவத்தில் 90 முதல் 92 Bar அழுத்தம் என எழுதி கொடுத்திருப்பார்கள். ஆனால் களத்தில் ஆயிலை அனுப்பும் போதும் 6-இல் ஒரு பங்கு என்று கூறியது 3-இல் ஒரு பாங்காக வாய்ப்பு உள்ளது.

குழாய் பதித்த பின்னர் அவர்கள் 90 Bar-இல் இருந்து 181 Bar வரை அதிகரிக்க வாய்ப்பு உண்டு. இதனால் ஆயிலை வேகமாக தேவையான இடத்திற்கு சென்று சேர்க்கலாம். அதாவது ஒரு நாள் வேலை அரை நாளில் முடிந்து விடும்.

இதன் காரணமாகவே குழாய் பதித்த பின்னர் மண்டையை சொரிந்து கொண்டு நிற்காமல் குழாய் அமைக்கும் முன்னரே தடுத்து நிறுத்த வேண்டியது நம் அனைவரின் கடமை என கூறிகிறார், இதற்கு எதிராக போராடி வரும் சமூக ஆர்வலர் ஒருவர்.

No comments :

Post a Comment