தெறி விழா - அடித்து துரத்தப்பட்ட விஜய் ரசிகர்கள்
தெறி படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சத்யம் திரையரங்கில் நடந்த போது, நூற்றுக்கணக்கான ரசிகர்கள் வெளியே திரண்டனர்.
அவர்கள் திரையரங்குக்குள் நுழைய முயன்ற போது திரையரங்கு ஊழியர்களும், தனியார் பாதுகாப்பு நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும் ரசிகர்களை அடித்து துரத்தினர். ரசிகர்கள் அப்போது ஆவேசமாக வெளியிட்ட கருத்துகள் தற்போது வீடியோவாக இணையத்தில் வலம் வருகிறது.
படம் என்பதே ரசிகர்களுக்குதான். எங்களை இப்போது அடித்து துரத்தியது போல் தெறி வெளியாகும் போது திரையரங்கிற்கு வரும் எங்களையும் இப்படி துரத்துவார்களா? என்று ரசிகர் ஒருவர் ஆவேசமாக கேட்டுள்ளார்.
தெறி படத்தை புறக்கணிக்கப் போவதாகவும் சில ரசிகர்கள் கூறியுள்ளது ரசிகர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Labels:
cinema news
,
other
No comments :
Post a Comment