பின்னோக்கி நடந்தால் உடலில் அம்புட்டு மாற்றம் ஏற்படுமாம்!.. ட்ரை பண்ணி பாருங்க!

Share this :
No comments
உடல் நலத்திற்காகப் பின்னோக்கி நடக்கும் சீன நாட்டுப் பாரம்பரியமிக்க பழமைவாய்ந்த பழக்கம் இன்று புதுமையான உடல்நல விஷயமாக ஆகிவிட்டது. 

கயிறு கொண்டு குதிப்பது, உடல்நலத்திற்காக மூலை முடுக்குகளிலெல்லாம் புதிதாக முளைத்திருக்கும் ஜிம்கள், பளு தூக்குதல் இவை அனைத்தையும் மறந்து விடுங்கள். அதற்குப் பதிலாக இன்று உடல் நலத்திற்குப் புது மந்திரமாக இருப்பது பூங்கா நடைப்பயிற்சி! இது பின்னோக்கி நடப்பது! 

நிதானமாகப் பின்னோக்கி நடப்பது உடல்நலத்தை உயர்த்துகிறது. ஜப்பான் நாட்டில் மிகவும் பிரபலமடைந்து விட்ட இந்த நடை கொழுப்புச் சத்தை வேகமாகக் குறைகிறது. 

இரண்டு கால்களாலும் சமச்சீராக நடக்க வைக்கிறது. உலகம் முழுவதும் இருபது இடங்களில் பின்னோக்கி நடைப் பயிற்சி வெற்றி பெற்று, அதற்கென்று ஒரு இயக்கம்கூட ஆரம்பிக்கப்பட்ட விட்டது. வேறு பல கடினமான உடல் சக்தியை உபயோகிக்கும் விளையாட்டுகளில் மாரடைப்பு நோய்க்கான ஆபத்து அதிகமாக இருப்பதால், இப்படிப்பட்ட பின்னோக்கி நடைப்பயிற்சி சரியான மென்மையான பயிற்சி ஆகிறது என்று பிரபல இதயநோய் நிபுணர், உயர் மருத்துவர் ஹஸ்முக்ரவத் கூறுகிறார். 

 மிகக் கடினமான பயிற்சிகள் இதய தசை நார்களைத் தாக்கிப் பல உயிரிழப்பு ஏற்படுகிறது என்று எச்சரிக்கிறார். ஆட்ரேனலைன் எனும் ரசாயன திரவம் மிக அதிகமாக ஒரு உடலில் சுரக்கும் பொழுது, அதாவது மிக நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்யும் பொழுது இப்படிப்பட்ட திரவம் சுரக்கிறது. அப்பொழுது இதயத்திற்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்த நாளங்கள் சுருங்கி விடுகின்றன. 

இதனால் இதயத்திற்குள் இரத்தம் போகாமல் உயிரிழப்பு ஏற்படுகிறது. அதனால் இந்த நடைபயிற்சி நல்லது என்றுதான் கூற வேண்டும். ஆனால் அப்படி பின்னோக்கி நடக்கும்பொழுது கால்களை மடக்காதீர்கள். நடக்கும் வழியில் தடுக்கும் பொருட்கள் எதுவும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பின்னோக்கி நடப்பது உடலைக் கச்சிதமாக வைத்துக்கொள்ள மிகவும் உதவுகிறது. 

ஏனெனில் இது செய்வதற்கு உடல் கடின உழைப்பை ஏற்றுக் கொள்கிறது. அது மட்டுமல்ல; இதனால் கொழுப்புச் சத்து மிக வேகமாகக் கரைகிறது. உங்களுடைய மற்ற புலன்கள் மிகச் சிறப்பாகச் செயல்படுகின்றன. குறுகலான அடிகளை வைப்பதால் மூட்டுகளுக்குச் சிறிதளவு பளு மட்டுமே அளிக்கப் படுகிறது. 

துரதிர்ஷ்டவாசமாக நம் நாட்டில் திறந்த வெளிகள் அதிகமாக இல்லை. இதை ஒரு உடற்பயிற்சிக் கூடத்தில் செய்யலாம். நீங்கள் உங்களுடன் ஒரு நண்பனை உங்கள் கண்களாக இருக்கும்படி கூறலாம் என்று பிரபல உடற்பயிற்சி நிபுணர் ஜனரன் வாட்சன் கூறுகிறார். 

 பின்னோக்கி நடையின் ஆதாயங்கள்: 100 அடிகள் பின்னோக்கி நடையில் எடுத்து வைத்தால் அது நேராக நாம் நடப்பதில் 1000 அடிகளுக்குச் சமமாகும். நடைமாற்றத்தை முற்றிலும் நீக்கி, கண்பார்வையைக் சீராக்குகிறது. இடுப்பு எலும்புக் கால்கள் மற்றும் இடுப்பிற்கு, கீழ்ப்பகுதிகள் பலம் பெறுகின்றன. மூளையை மிக அதிகமாகத் தெளிவாக்குகிறது.

No comments :

Post a Comment