லவ் என்ன ஐ.சி.யூ வார்டா? ஏன் பாஸ் சீரியஸா இருக்கணும் என்று தான் இன்று நிறைய பேர் கலாய்த்து கூறுவார்கள். ஆனால், முற்றிலும் கேலி, கூத்து, கேளிக்கை என்று இருக்க முடியாது. சிலர் அப்படி இருப்பதால் தான் வாகனங்களில் விழும் ப்ரேக்கை விட உறவுகளில் ப்ரேக் அதிகமாக விழுகிறது.
கன்னி பசங்களுக்கு திருமணமான ஆண்கள் கூறும் 12 அறிவுரைகள்! எதிலும் சிறிதளவு சீரியஸ்னஸ் இருக்க தான் வேண்டும். இல்லையேல் கண்டிப்பாக நீங்கள் சில தடுமாற்றங்களை காண வேண்டி வரும். காதலில் சீரியஸாக இருக்கும் ஆண்களின் வாழ்க்கையில் எப்படிப்பட்ட சம்பவங்கள் எல்லாம் நடக்கும் என உங்களுக்கு தெரியுமா?
எண்ணம் வெறுமென காதலியிடம் வெட்டியாக பேசுவதை குறைத்துக் கொண்டு எதிர்காலத்தை பற்றி பேச ஆரம்பிப்பார்கள். இவர்களது எண்ணம் முழுவதும் எதிர்காலத்தை பற்றியதாகவே இருக்கும்.
அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி தன் நண்பர்கள், சகோதர, சகோதரிகள் என அனைவரிடமும் தங்கள் காதலியை தைரியமாக அறிமுகப்படுத்தி வைப்பார்கள்.
குடும்பம் தன் குடும்பம் மட்டுமின்றி, தன் காதலியின் குடும்பத்தை பற்றியும், அவர்களது சூழல் மற்றும் முன்னேற்றத்தை பற்றி யோசிப்பார்கள்.
எதிர்க்கலாம் தன் காதலி எதிர்காலத்தில் என்ன செய்ய போகிறாள், அவளுக்கு என்னென்ன செய்ய வேண்டும், எப்படி உதவ வேண்டும் என எண்ணுவார்கள்.
ரிலாக்ஸ் தன் காதலியை எப்போதும் ரிலாக்ஸாக வைத்துக் கொள்ள முயற்சிப்பார்கள். அவர்கள் சங்கடத்தை உடனே போக்க துடிப்பார்கள்.
அக்கறை அதிகப்படியான அக்கறையை செலுத்துவார்கள். தாங்கள் அருகில் இருந்தாலும், இல்லையெனிலும் காதலி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள்.
நம்பிக்கை காதலியை குருட்டுத்தனமாக நம்ப ஆரம்பிப்பார்கள்.
மனம் திறந்து தங்களை பற்றிய சில பர்சனல் விஷயங்களை கூட மனம் திறந்து மறைக்காமல் கூறுவார்கள்.
சேமிப்பு நாளைய வாழ்க்கைக்காக நிறைய சேமிக்க துவங்குவார்கள்.
திட்டங்கள் இல்லற வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும். எவ்வாறு வழிநடத்தி செல்ல வேண்டும். அடுத்தக் கட்டத்திற்கு செல்ல என்னென்ன செய்ய வேண்டும் என திட்டங்கள் இடுவார்கள்.
No comments :
Post a Comment