விவாகரத்து வழக்குகளை விரைந்து வழங்க வேண்டும்: ஹேமாமாலினி

Share this :
No comments


விவாகரத்து வழக்குகளை நீதிமன்றங்கள் விரைந்து முடிக்க வேண்டும் என்று பாஜக எம்.பி ஹேமாமாலினி மக்களவையில் கூறியுள்ளார்.

மக்களவையில் பூஜ்ய நேரத்தின் போது பாஜக எம்.பி ஹேமாமாலினி விவாகரத்து வழக்கு குறித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

விவாகரத்து வழக்குகளை நீதிமன்றங்கள் விரைந்து முடிப்பதன் மூலம் விவாகரத்து கோரும் பெண்கள் தங்கள் வாழ்கையை புதிதாக தொடங்க முடியும்.விவாகரத்தை இழுத்தடிப்பதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த நன்மையும் ஏற்படாமல் போய்விடும்.

அதனால் குடும்ப வாழ்க்கையில் வெறுப்படைந்தவர்களுக்கு விவாகரத்தை விரைந்து அளிப்பதே சிறந்தது, என்றார்.

இந்தியாவில் தற்போது விவாகரத்துப் பெறுவோரின் எண்ணிக் அதிகமாகிக் கொண்டிருக்கும் நிலையில், விவாகரத்து வழக்கில் ஒராண்டு காலம் விசாரணை, மீண்டும் தம்பதியினர்கள் இணைவதற்காக கொடுக்கப்படும் வாய்பாகும்.

No comments :

Post a Comment