காபாலியில் வரும் நெருப்புடா.. என்ற பஞ்சு டயலாக்கை எழுதியவர் இவர்தான்

Share this :
No comments


ரஜினி நடித்துவரும் 'கபாலி' படத்தின் டீசர் வெளியாகி அனைவரிடையே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கபாலி'. சென்னையில் மற்றும் மலேசியாவில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது.

கபாலியில் தீம் பாடலை எழுதியவர் தான் அருண்ராஜா காமராஜ். இவர், ராஜா ராணி படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானர், இப்போ, யாரும் எதிர்பார்க்காத வகையில், மாஸ் ஹீரோக்களுக்கு சைலன்டாக தீம் மியூஸிக் பாடலை எழுதி வருகிறார்.

இவர் ஏதோ நகைச்சுவை நடிகராக தான் வருவார் என நினைத்தால், மாஸ் பாடலாசிரியராகி விட்டார். தோட்டா தெறிக்க தெறிக்க….எதிர்த்தா இவன்தான் தெறி..என்று தெறி படத்தில் தீம் மியூஸிக் பாடலை எழுதி, பட்டி தொட்டியெல்லாம் பரவ செய்த இவர்தான்.

கபாலியில் நெருப்புடா என்ற வார்த்தையை உலகமே அறிய செய்து இருக்கிறார் காமராஜ்,
கபாலி தீம் மியூஸிக் கேட்டதும், சுமார் 20 நிமிடத்தில் எழுதிக்கொடுத்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனை அசர வைத்துவிட்டார்.

ஆனால், நெருப்புடா என்ற வார்த்தை இவ்வளவு பெரிய ஹிட் அடிக்கு என்று அவர் கனவில் கூட நினைத்து பார்க்கவில்லையாம்.

No comments :

Post a Comment