அரசியல் சர்ச்சையில் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை

Share this :
No comments


அரசியல் களம் சூடுபிடித்திருக்கும் நிலையில் சர்ச்சைகள் நடிகர் சூர்யாவையும் வளையமிட்டுள்ளன.

சூர்யாவின் அகரம் அறக்கட்டளை இந்தமுறை மக்கள் நலக்கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்திருப்பதாக இணையத்தில் பரவிய செய்திகள் ஆச்சரியத்துடன் பகிரப்பட்டன.

சூர்யாவின் அகரம் அறக்கட்டளையின் நிலைப்பாடு என்பது சூர்யாவின் நிலைப்பாடு என்பதால் அவரது இந்த வெளிப்படையான ஆதரவு குறித்து கருத்துகள் பரிமாறப்பட்டன. இந்நிலையில், அகரம் அறக்கட்டளை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

"சமூக வலைத்தளத்தில் 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் அகரம் அறக்கட்டளை தனிப்பட்ட ஒரு கட்சிக்கு ஆதரவு அளிக்க சொல்லியிருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.

நாங்கள் எந்த கட்சியையும் சாராதவர்கள் என்பதையும், தேர்தல் நேரத்தில் எந்த ஒரு கட்சிக்கும் ஆதரவு கொடுக்கவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்" என்று அகரம் அறக்கட்டளையின் ட்விட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

No comments :

Post a Comment