தனியார் பேருந்தில் ஓடிய தெறி படம்: ஓட்டுனர் கைது
பெங்களூரில் இருந்து சென்னை வந்த தனியார் சொகுசு பேருந்து ஒன்றில் சமீபத்தில் அட்லி இயக்கத்தில் விஜய நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வரும் தெறி திரைப்படம் திரையிடப்பட்டது.
நடிகர் சங்க பொதுச்செயலாளர் நடிகர் விஷால் கொடுத்த தகவலின் அடிப்படையில் திருட்டு விசிடி தடுப்பு பிரிவு காவலர்கள் பேருந்தின் ஓட்டுனரை கைது செய்தனர்.
இது குறித்த தகவல் கிடைத்ததும் சென்னை மதுரவாயல் அருகே தனியார் பேருந்தை சோதனையிட்ட காவலர்கள் அப்பேருந்தில் இருந்த புது திரைப்பட சீடிக்களையும் கைபற்றினர்.
பேருந்தில் புதிய படம் திரையிடப்பட்டதற்கும் பேருந்தின் உரிமையளருக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என பேருந்தின் ஓட்டுனர் சங்கர் தெரிவித்தார்.
Labels:
News
,
other
No comments :
Post a Comment