அகப்பட்டான் திருட்டு டிவிடி திருடன்
சூர்யாவின் 24 படத்தின் திருட்டு டிவிடி, படம் வெளியான முதல்நாளே விற்பனைக்கு வந்தது.
பெரும் தொகை முதலீட்டில் எடுக்கப்படும் 24 போன்ற படங்களின் திருட்டு டிவிடிகள் முதல்நாளே விற்பனைக்கு வருமாயின் தயாரிப்பாளரும், படத்தை வாங்கியவர்களும், திரையிட்டவர்களும் அடையும் நஷ்டம் கொஞ்சமல்ல.
க்யூப் சிஸ்டத்தில் படத்தை திரையிடுவதால் எந்தத் திரையரங்கிலிருந்து திருட்டு டிவிடி எடுக்கப்பட்டது என்பதை டிவிடியை வைத்து கண்டுபிடித்துவிடலாம். 24 படத்தின் திருட்டு டிவிடியை பெங்களூருவில் உள்ள ஒரு திரையரங்கில் எடுத்திருக்கிறார்கள். அதுவும் முதல்நாள் காலை 9.45 மணி காட்சியில்.
அந்த திரையரங்கில் மொத்தமே 260 பேர்தான் படம் பார்க்க முடியும். 24 வெளியான அன்று திருட்டு டிவிடி எடுக்கப்பட்ட முதல் காட்சியில் 168 பேரே படம் பார்த்திருக்கிறார்கள். ஒலியை துல்லியமாக பதிவு செய்ய கேபிள்களை பயன்படுத்தி உள்ளனர். இவற்றை வைத்துப் பார்க்கையில், திரையரங்கு உரிமையாளருக்கும், ஆபரேட்டருக்கும் தெரியாமல் இது நடந்திருக்க வாய்ப்பில்லை.
திருடனை கண்டுபிடித்துவிட்டார்கள். இதுவே கேரளாவோ, கர்நாடகாவோவாக இருந்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும். ஆனால், இது தமிழ் சினிமா. என்ன செய்வது என்று கையை பிசைந்து கொண்டிருக்கிறார்கள்.
Labels:
cinema news
,
other
No comments :
Post a Comment