களைப்படைந்து விட்டேன்... இனி புதுப்படம் கிடையாது

Share this :
No comments

களைப்படைந்துவிட்டேன். இனி கொஞ்ச காலத்துக்கு புதுப்படம் எதிலும் கமிட்டாகப் போவதில்லை என கூறியுள்ளார் நடிகை சமந்தா. சமந்தா நடிப்பில் அடுத்தடுத்து வெளிவந்த தெறி, 24 இரண்டும் வெற்றி பெற்றுள்ளன. தெறி பிளாக் பஸ்டர். தெலுங்கில் அ...ஆ, பிரம்மோற்சவம் ஆகிய படங்களை முடித்துள்ளார். கோடைகால படங்கள் அனைத்தையும் முடித்துவிட்டேன். இன்று நிம்மதியாக உறங்குவேன் என தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார் சமந்தா. களைப்படைந்து விட்டேன், இனி கொஞ்ச காலம் புதுப்படங்கள் எதையும் ஒப்புக் கொள்ளப் போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார். தெலுங்கில் ஜுனியர் என்.டி.ஆர். நடிக்கும் ஜனதா கரேஜ் படத்தில் மட்டும் சமந்தா ஒப்பந்தமாகியுள்ளார். அவர் நடித்துத்தர வேண்டிய ஒரே படமும் இதுதான் என்பது முக்கியமானது.

No comments :

Post a Comment