ஆஸ்திரியாவில் பாஸ்போர்ட்டை இழந்து தவிக்கும் வித்யுலேகா
சுற்றுப்பயணம் செய்வதற்காக ஆஸ்திரியா சென்ற தமிழ் சினிமாவின் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் நடிகை வித்யுலேகா அங்கே தனது பஸ்போர்ட்டை இழந்து தவிக்கிறார்.
நடிகை வித்யுலேகா தனது நண்பர்களுடன் ஆஸ்திரியாவிற்கு சமீபத்தில் சுற்றுலா சென்றிருந்தார். வியன்னா நகரில் ஒரு ஹோட்டலில் அனைவரும் தங்கியிருந்தனர். அப்போது அவரது லாபியில் இருந்த இவருடைய கைப்பையை யாரோ திருடி விட்டனர்.
அதில் பாஸ்போர்ட், கிரெடிக், டெபிட் கார்டுகள் மற்றும் பணம் ஆகியவை இருந்துள்ளது. இதனால் என்ன செய்வதென்று திகைத்த வித்யுலேகா, ஆஸ்திரியா போலீசாரிடமும் புகார் கொடுத்துள்ளார். இந்திய தூதரகம் சென்று உதவி கேட்கவும் முடிவெடுத்துள்ளார்.
மேலும், டிவிட்டர் மூலம் பிரதமர் மோடி மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரிடம் உதவி கேட்டுள்ளார்.
ஏனெனில், பாஸ்போர்ட் இல்லாமல் அவர் இந்தியா திரும்ப முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
Labels:
cinema news
,
other
No comments :
Post a Comment