சுத்தத் தங்கத்தை எப்படிச் சோதிப்பது?

Share this :
No comments


சேர்ந்தே இருப்பது ‘வறுமையும் புலமையும்’ மாதிரி, பிரிக்க முடியாதது ‘பெண்களும் தங்கமும்!’.

தீபாவளி, பொங்கலைப்போல் அட்சய திருதியையும் ஒரு பண்டிகையாகக் கொண்டாடித் தீர்த்து விடுவார்கள் பெண்கள். ஆனால், ‘என் வீட்டுக்காரர்/அப்பா வாங்கிக் கொடுத்தாரு..’ என்று தங்கத்தைக் காட்டி சந்தோஷப்படும் பெண்களிடம், ‘இது தரமான தங்கம்தானா ?’ என கேட்டால், ‘ப்ச்’ என்று உதடு பிதுக்குவார்கள்.

சுத்தமான தங்கத்தைக் கண்டுபிடிப்பது ஒன்றும் பெரிய தங்க சூத்திரம் இல்லை பெண்களே..!

நகை வாங்கும்போது, முதலில் அதில் ஹால்மார்க் முத்திரை இருக்கிறதா என்று பாருங்கள். இது, இந்தியத் தரக் கட்டுப்பாட்டு ஆணையத்தால் வழங்கப்படும் தரச் சான்றிதழ்.

ஹால்மார்க் முத்திரை என்றால் என்ன?

கடந்த 2000 ம் ஆண்டில் இருந்து இந்த முத்திரை வழங்கப்பட்டு வருகிறது. 2000-ம் வருடத்தில் பரிசோதிக்கப்பட்ட நகைகளில் ‘A’ என்ற முத்திரை இருக்கும். 2001-ம் வருடம் சோதிக்கப்பட்ட நகைகளில் 'B' என்ற முத்திரை இருக்கும். 2002-ம் வருடத்துக்கு 'C' முத்திரை. இப்படியே ஒவ்வொரு வருடத்திலிருந்து ஒவ்வொரு ஆல்ஃபபெட்ஸ் எழுத்துக்களாக உயர்ந்து கொண்டே வரும். நடப்பு ஆண்டுக்கு, அதாவது 2016-க்கு 'Q' என்ற எழுத்து இருக்கும்.

காரட் என்றால் என்ன?


தங்கத்துடன் சேர்க்கப்பட்ட உலோகங்களின் அளவுகளின் அடிப்படையில் இந்த காரட் நிர்ணயிக்கப்படுகிறது. அதாவது 23, 22, 18, 17, 19 காரட் என வரிசைப்படுத்துவார்கள். இந்த வரிசையில் உள்ள காரட்களுக்கு ஹால்மார்க் முத்திரை வழங்கப்படும். கடைசியில் ஹால்மார்க் முத்திரை வழங்கிய பரிசோதனை நிலையத்தின் குறியீடு இருக்கும்.

பரிசோதிக்க வேண்டியவை?

நீங்கள் வாங்கும் நகைகளில் ஹால்மார்க் முத்திரை, வருடத்துக்கான எழுத்து, காரட், பரிசோதனை நிலையத்தின் குறியீடு, நகை விற்பனை செய்யும் கடையின் குறியீடு - இவை அனைத்தும் இருந்தால், சந்தேகமே வேண்டாம்.

பொன் குறிப்பு: ‘பழைய நகைகளை எப்படி சோதனை செய்வது?’ என்பவர்களுக்கு ஒரு விஷயம். அடகுக் கடைகள், சேட்டுக் கடைகளிடம் சென்று உங்கள் தங்க நகைகளை செக் செய்வதை நிறுத்துங்கள். இதற்கென பிரத்யேகமாக இருக்கும் XFR என்னும் பரிசோதனை மெஷினில் வைத்து, அதனுடைய தரத்தை அறிய வேண்டும். இந்த மெஷின், பெரிய நகைக் கடைகளில் நிச்சயம் இருக்கும்.

No comments :

Post a Comment