Tuesday, May 10, 2016

அந்தமானில் நிலநடுக்கம்: 5.3 ரிக்டராக பதிவு


புதுடெல்லி:

அந்தமான் - நிக்கோபார் தீவுகளில் 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவிசார் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

நேற்றிரவு 9.33 மணியளவில் பூமியின் அடியில் பத்து கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கதையடுத்து சுனாமி எச்சரிக்கை ஏதும் வெளியிடப்படவில்லை. 

நிலநடுக்கத்தின் விளைவாக உயிரிழப்போ, உடமைகள் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.

No comments:

Post a Comment