இது ஒரு கையடக்கமான இணைய பக்கங்களில் உள்நுழைவு செய்வதற்கான கடவுச்சொற்களை பாதுகாப்பாக நிருவகிப்பதற்கும் மறையாக்கம் செய்திடவும் பயன்படும் கட்டணமற்ற கட்டற்ற மென்பொருளாகும். தற்போது நாம் எந்தவொரு இணைய பக்கத்திற்கு சென்றாலும் அங்கு நமக்கு ஒரு கணக்கினை துவங்கி பயனாளர் பெயர் கடவுச்சொற்களுடன் உள்நுழைவு செய்திடும்படி கோரப்படுகின்றோம் அதனால் ஏராளமான வகையில் பயனாளர் பெயர்களையும் கடவுச் சொற்களையும் நம்முடைய நினைவில் வைத்துகொள்வது என்பது மிகச்சிரமமான பணியாகும் அதனால் பொதுவாக நம்மில் பெரும்பாலானோர் ஒரே பயனாளர்பெயரையும் கடவுச்சொற்களையும் அனைத்து இணைய பக்கங்களிலும் உள்நுழைவு செய்திட பயன்படுத்திடுகின்றோம் இதனால் நம்மை பற்றி அறிய வேண்டும் நம்முடைய தரவுகளை அபகரிக்கவேண்டும் என விரும்புவோர்கள் மிகஎளிதாக நாம் பயன்படுத்திடும் அந்த ஒரேயொரு பயனாளர்பெயரையும் கடவுச்சொற்களையும் மட்டும் மிககடினமாக முயன்று கண்டுபிடித்தால் மட்டும் போதும் நம்முடைய அனைத்து நடவடிக்கைகளையும் முடக்கிவிடலாம் என்ற நிலை தற்போது உள்ளது இதனை தவிர்க்க இந்த Password Safe Portable 3.38.2எனும் கட்டற்ற மென்பொருளை பயன்படுத்திகொள்ளுமாறு பரிந்துரைக்கபடுகின்றது. இந்த கையடக்க மென்பொருளானது நாம் பயன்படுத்திடும் அனைத்து பயனாளர்பெயர்களையும் கடவுச்சொற்களையும் பாதுகாப்பாக வைத்து கொண்டுஒரோயொரு முதன்மை கடவுச்சொற்களின்வாயிலாக அவைகளை அனுகுவதற்காக அனுமதிக்கின்றது. இதனை நம்முடைய கணினியில் ஒருசில நிமிடத்திலேயே நிறுவுகை செய்துகொள்ளலாம். இது ஒரு கட்டற்ற கட்டணமற்ற பயன்பாடாகும் மிகமுக்கியமாக இது ஒரு கையடக்க பயன்பாடாகும் இதன்மூலம் ஏற்கனவே நம்மிடம் உள்ள கடவுச்சொற்களை பாதுகாப்பாக வைத்துகொள்வதுடன் புதிய கடவுச்சொற்களை நமக்கென விரைவாக உருவாக்கி தருகின்றது இதில் நாம் சேமித்துவைத்திடும் கடவுச்சொற்களை பயனாளர் பெயரின் அகரவரிசையிலும் வகைவாரியாகவும் இணையபக்கங்களின் வாரியாகவும் வாடிக்கையாளர் விரும்புவதை போன்றும் வரிசைபடுத்திட அனுமதிக்கின்றது. அனைத்து கடவுச்சொற்களையும் ஒற்றையான ஒரோயொரு கடவுச்சொற்களுடன் மறையாக்கம் செய்து அவைகளை பாதுகாப்பாக மறைத்து வைத்துகொள்ள அனுமதிக்கின்றது. இது ஒருநம்பதகுந்த தரவுதள அடிப்படையில் செயல்படுகின்றது மிகமுக்கி.மாக அனைத்து தரவுகளையும் நினைவகத்திற்குள் மறையாக்கம் செய்துவைத்துகொள்கின்றது மேலும் விவரங்களுக்கும் இதனை பயன்படுத்தி கொள்ளவும்
http://portableapps.com/apps/security/password-safe-portable எனும் இணைய பக்கத்திற்கு செல்க
No comments :
Post a Comment