தெறியை வாங்காதவர்களுக்கு கபாலியும் இல்லை சிங்கமும் இல்லை
செங்கல்பட்டு ஏரியாவில் பெரும்பாலான திரையரங்குகளில் தெறி வெளியாகவில்லை. அதிக விலை கேட்டனர்.
அதனை திரையரங்குகளால் வசூலிக்க இயலாது என்று விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் காரணம் கூறுகின்றனர்.
தயாரிப்பாளர் தாணுவும் பிறரும், வேண்டுமென்றே சிலர் தெறியை முடக்கப்பார்க்கிறார்கள். இது இப்போதல்ல, பல வருடங்களாகவே நடந்து வருகிறது என்று திருப்பியடிக்கின்றனர். இந்நிலையில், தெறியை வெளியிடாதவர்களுக்கு தனது கபாலி தரப்பட மாட்டது என தாணு அறிவித்துள்ளார்.
அதேபோல் சூர்யா நடித்துள்ள 24, எஸ் 3 படங்களையும் தரப்போவதில்லை என ஞானவேல்ராஜா முடிவு செய்துள்ளதாக வேந்தர் மூவிஸ் சிவா பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறினார்.
இந்தப் பிரச்சனை தெறியுடன் முடியப் போவதில்லை தொடரும் என்பதையே இந்த பேச்சுகள் காட்டுகின்றன.
Labels:
cinema news
,
other
No comments :
Post a Comment