நடிகை திரிஷாவுக்கு முத்தம் : மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாலகிருஷ்ணா

Share this :
No comments

என்.டி.ராமா ராவின் மகனும், தெலுங்கு நடிகருமான பாலகிருஷ்ணா, நடிகை திரிஷாவுக்கு முத்தம் கொடுத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு, ஹைதாராபத்தில் நடைபெற்ற ஒரு திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் பாலகிருஷ்ணா “நான் திரைப்படங்களில் பெண்கள் பின்னால் சுற்றினால் அதை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நான் அவர்களை முத்தமிட வேண்டும் இல்லை கர்ப்பமாக்க வேண்டும். அதைத்தான் என் ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள்” அவரின் இந்த பேச்சுக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதுபற்றி விளக்கம் அளித்த பாலகிருஷ்ணா “நான் பெண்களை பற்றி இழிவாக பேசவில்லை. என் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பற்றிதான் கூறினேன். தவறாக இருந்தால் மன்னித்து விடுங்கள்” என்று கூறியிருந்தார். அவர் தற்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். திரிஷா கதாநாயகியாக நடித்துள்ள ’நாயகி’ என்ற படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று முன் தினம் ஹைதாரபாத்தில் நடந்தது. இதற்கு சிறப்பு விருந்தினராக பாலகிருஷ்ணா கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த திரிஷாவுக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்தார். ஒரு வயாதன நடிகர் பொது இடத்தில் இப்படி அநாகரீகமாக நடந்துள்ளார் என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

No comments :

Post a Comment