அதிமுகவினர் சகிதம் வேட்புமனுவை தாக்கல் செய்த பாஜக வேட்பாளர்
அதிமுக வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்யும் போதே, பாஜக தலைவர் தமிழிசையும் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
தமிழக சட்ட மன்றத் தேர்தலில் பாஜக சார்பில், அதன் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இதனையடுத்து, இன்று மேளதாளம் முழங்க, சாலிகிராமத்தில் இருந்து மண்டலக அலுவலகத்துக்கு சென்றார். அங்கு ஏற்கனவே, அதிமுக வேட்பாளர்கள் மதியம் 12 மணிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தனர். அப்போது, பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Labels:
News
,
other
No comments :
Post a Comment