பிரியங்கா சோப்ரா 3 முறை தற்கொலை செய்துகொள்ள முயன்றார்: முன்னாள் காதலன் பரபரப்பு தகவல்
பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா 3 முறை தற்கொலைக்கு முயன்றதாக அவரது முன்னாள் காதலன் பரபரப்பு தகவலை கூறியுள்ளார். பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா. இவரைப் பற்றி அவரது முன்னாள் மானேஜர் பிரகாஷ் ஜாஜூ பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:– பிரியங்கா சோப்ரா தற்போது மிகவும் பலமானவராக இருக்கிறார். ஆனால், அவருக்கு ஏற்பட்ட இக்கட்டான நாட்களில் அவர் 3 முறை தற்கொலை செய்துகொள்ள முயன்றார். பிரியங்கா சோப்ராவின் முன்னாள் ஆண் நண்பர் அசீம் மெர்சண்ட்டின் தாய் இறந்ததை தொடர்ந்து, 2002 ஆம் ஆண்டில் ஒரு முறை தற்கொலைக்கு முயற்சி செய்தார். மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றபோது, அவரை நான் தான் தடுத்து நிறுத்தினேன். இவ்வாறு அவர் கூறினார். இந்நிலையில், பிரகாஷ் ஜாஜூவின் குற்றச்சாட்டை மறுத்துள்ள பிரியங்கா சோப்ராவின் தாய் மது அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Labels:
cinema news
,
other
No comments :
Post a Comment