சூப்பர் சிங்கர் தேர்வு சர்ச்சை : விஜய் டிவி விளக்கம்

Share this :
No comments





சினிமா பின்னணி பாடகரான ஆனந்த அரவிந்தாக்‌ஷனை, சூப்பர் சிங்கராக தேர்வு செய்தது குறித்து எழுந்த சர்ச்சை தொடர்பாக விஜய் தொலைக்காட்சி விளக்கம் அளித்துள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்கர் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி, சென்னையில் கடந்த 18ஆம் தேதி நடந்தது. அதில், ஆனந்த் அரவிந்தாக்ஷன் முதல் பரிசு வென்றார். இவர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர். இவருக்கு ரூ.75 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக தரப்பட்டது.

ஆனால், அரவிந்தாக்ஷன் புதிய பாடகர் அல்ல, அவர் ஏற்கனவே தமிழ் சினிமாவில் பாடகராக பல படங்களில் பாடியுள்ளார் என்ற தகவல் தற்போது தெரிய வந்துள்ளது. ஆரோகணம், நீர்ப்பறவை, 10 எண்றதுக்குள்ள, பாண்டிய நாடு, மதயானைக் கூட்டம், இவன் வேற மாதிரி உள்ளிட்ட படங்களியில் இவர் பாடல் பாடியுள்ளார்.

புதிய குரல்களை அறிமுகப்படுத்தவே இந்த போட்டி என்று கூறிக் கொண்டு, ஏற்கனவே பல படங்களில் பாடிய ஒரு பின்னணி பாடகரை விஜய் டிவி எப்படி தேர்வு செய்யலாம் என சமூக வலைத்தளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அதற்கு விளக்கம் அளித்துள்ள விஜய் தொலைக்காட்சியின் தலைமை நிர்வாகி பிரதீப் மில்ராய் பீட்டர் எங்களுடைய விதிமுறையில் எந்த இடத்திலும் திரைத்துறையில் பாடகராக இருப்பவர், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்கக்கூடாது என்று குறிப்பிடப்படவில்லை.

அதேபோல், ஆனந்த் ஏற்கனவே அளித்த பேட்டிகளில், தான் சில படங்களில் பாடியுள்ளதாகவும், ஆனால் சரியான வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதாகவும் கூறியுள்ளார். சினிமாவில் பாடகர்களாக இருப்பவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக்கூடாது என்ற விதிமுறை முன்பு இருந்தது. ஆனால் அது சரிப்பட்டு வராததால், அந்த விதிமுறையை நீக்கிவிட்டோம்” என்று கூறியுள்ளார்.

No comments :

Post a Comment