அம்மாடியோவ்!! ஒரு நாய் குட்டியின் விலை ஒரு கோடி ரூபாயாம்!
தொழிலதிபர் ஒருவர், ஒரு கோடி ரூபாய் விலை என இரண்டு வெளிநாட்டு நாய் குட்டிகளை வாங்கியிருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. சீனாவின் பீஜிங் நகரில் இருந்து கொரியன் 'தோசா மஸ்தீப்' என்னும் 2 மாத குட்டி நாய்கள் இரண்டை, ஒவ்வொன்றுக்கும் ஒரு கோடி ரூபாய் விலை கொடுத்து வாங்கி இருக்கிறார்.
அந்த நாய் குட்டிகள், கார்கோ விமானம் மூலம் சீனாவில் இருந்து டெல்லி வழியாக பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. பெங்களூரு வந்து இறங்கிய அந்த குட்டி நாய்களை சதீஷ் ஆர்வமுடன் வரவேற்று கொஞ்சி மகிழ்ந்துள்ளார்.
அப்போது, அந்த நாய் குட்டியில் ஒன்றின் உடல்நிலையில் திடீரென பாதிப்பு ஏற்பட்டு இருந்ததை அவர் கவனித்துள்ளார். இதை தொடர்ந்து சதீஷ், தனது ரோல்ஸ் ராய்ஸ் காரில் அந்த நாய் குட்டியை உடனே கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் சென்றிருக்கிறார்.
மருத்துவர் அந்த நாய் குட்டிக்கு சிகிச்சை அளிக்க அது குணமடைந்துள்ளது. தற்போது தொழிலதிபர் சதீஷின் பிரமாண்டமான வீட்டின் புல்வெளியில் அந்த இரண்டு நாய் குட்டிகளும் மகிழ்ச்சியோடு விளையாடி கொண்டிருக்கிறது. மேலும், இந்த நாய் குட்டிகள் கொழு கொழுவென காண்போரை கவர்ந்து இழுக்கும் வகையில் உள்ளது.
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த நாய்க் குட்டிகள், குளிர் பிரதேசங்களில் வளர கூடியது என்பதால் இதற்கென சிறப்பு வசிப்பிடத்தை ஏற்படுத்தி கொடுக்க சதீஷ் முடிவு செய்துள்ளார்.
இவ்வளவு விலை உயர்ந்த இந்த நாய் குட்டிகளை பார்த்து படம் பிடிக்க வியப்போடு நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்து செய்தியாளர்கள் சதீஷ் வீட்டிற்கு படையெடுத்து வந்து கொண்டிருக்கின்றனர்.
Labels:
home funny
No comments :
Post a Comment